உயிரைக் குடிக்கும் புட்டிநீர்

உயிரைக் குடிக்கும் புட்டிநீர், நக்கீரன், காடோடி பதிப்பகம், புட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்கும் நிறுவனங்கள் தண்ணீரை விற்பதில்லை, ஞெகிழிப் புட்டிகளையே விற்கின்றன’ என்கிற விமர்சனம் தீவிரமடைந்துவருகிறது. இன்று காணும் இடமெல்லாம் ஞெகிழித் தண்ணீர்புட்டி குப்பை மலைகள் சர்வசாதாரணமாகிவிட்டன. உண்மையில் இந்த புட்டிநீர் எப்படிப்பட்டது, சுற்றுச்சூழல்-பொருளாதாரம்-உடல்நலத்துக்கு அது இழைக்கும் தீங்குகள் என்னென்ன என்பது குறித்து விவாதிக்கும் இந்தக் குறுநூல் அதிர்வுகளை ஏற்படுத்திய ஒன்று. அதன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030301_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2020

நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2020, நக்கீரன், பக். 1120, விலை 160ரூ. தமிழில் நிறைய இயர்புக்ஸ் வெளிவருகின்றன. அவற்றில், நக்கீரன் வெளியிடும் இயர்புக் 2020யும் ஒன்று. தொடர்ந்து, 14 ஆண்டுகளாக இயர்புக்கை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காகவும், பொது அறிவுத் தகவல்களை தெரிந்து கொள்வோருக்கும் இந்த நுால் மிகவும் உதவிகரமாக இருக்கும். பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், சட்டங்கள், திட்டங்கள், சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளும் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. விலை மிகவும் குறைவாக இருப்பதால், எளிதாக அனைவராலும் வாங்கி, […]

Read more

கலைஞரின் நகைச்சுவை நயம்

கலைஞரின் நகைச்சுவை நயம், கவிஞர் தெய்வச்சிலை, நக்கீரன், பக். 224, விலை 150ரூ. மேடைப் பேச்சிலும், இயல்பான உரையாடல்களிலும் கலைஞரின் நகைச்சுவை நாடறிந்தது; நானிலம் அறிந்தது. முகவைக் கவிஞர் தெய்வச்சிலை கேட்ட மேடைப் பேச்சுகள், கவியரங்குகள், மாநாடுகள், அன்றாட நிகழ்வுகள் என எண்ணற்றவற்றில், 100 அளவில் நகைச்சுவை பகுதிகளைத் தொகுத்து, இந்நுாலைப் படைத்துள்ளார். ரு நிகழ்வு, நடிகர் விஜயகாந்த் தயாரித்த தமிழ்செல்வன் என்ற படத்தின் பெயரில் (தமிழ்ச்செல்வன்) ‘ச்’ இல்லையே, அது பிழையல்லவா என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன் சொன்னபோது, அருகிலிருந்த கலைஞர், சற்றும் […]

Read more

மிஸா கொடுமை

மிஸா கொடுமை, விசிட்டர் அனந்த், நக்கீரன், விலை 200ரூ. ‘எமர்ஜென்ஸி‘ என அறியப்பட்ட நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடந்த ஜனநாயக படுகொலைகள், நெஞ்சை பதறவைக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ்ச்சூழலில் முதன் முதலில் புத்தக வடிவில் பதிவு செய்தவர் நூலாசிரியர் ‘விசிட்டர்’ அனந்த். இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு 4 தலைப்புகளில் கொண்டு வந்த இந்த நூல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. தற்போதைய தலைமுறையினரும் இதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நக்கீரன் பதிப்பகம் மீண்டும் இந்த புத்தகத்தை ஒரே தலைப்பில் […]

Read more

காடோடி

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 காடோடி, நக்கீரன், அடையாளம், விலை 270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024312.html தமிழில் கவனம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாக்க முயற்சி ‘காடோடி’. உலகின் பழமையான, பிரம்மாண்டமான போர்னியோ காடுகளில் பணிபுரிந்த எழுத்தாளர் நக்கீரன், காடுகளைப் பற்றி நமக்கென்ன தெரியும் என்ற கேள்வியை நாவல் மூலம் எழுப்புகிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகாதா, நக்கீரன், விலை 150ரூ. அண்மையில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்று, இந்தியாவை மட்டுமல்ல, உலகின் விழிகளையே வியப்பால் விரியச் செய்தவர், அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை அன்னா ஹசாரேயுடன் இணைந்து உருவாக்கியது முதல், மீண்டும் டெல்லி அரியணையில் அமர்ந்தது வரையிலான கெஜ்ரிவாலின் வாழ்க்கையை எழுத்தாளர் ஜெகாதா சுவைபட எழுதியுள்ளார். சாமானியனாக இருந்த சாதனை படைத்த அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்ட குணம், துணிச்சல் ஆகியவற்றை பாராட்டும் ஆசிரியர், அவரது ஆரவார […]

Read more

ஈழக்கனவும் எழுச்சியும்

ஈழக்கனவும் எழுச்சியும், ஜெகாதா, நக்கீரன், சென்னை, விலை 300ரூ. தனி ஈழம் கோரி, இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டம் முடிவடைந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப்புலிகளின் வீரப்போரை விரிவாகக் கூறுகிறது இந்நூல். சம்பவங்களை ஆதாரங்களுடனும், தெளிவாகவும் விவரிக்கிறார் ஆசிரியர் ஜெகாதா. பிரபாகரனுக்கும் மாத்தையா செய்த துரோகத்தைப் படிக்கும்போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாத்தையா, கடைசி முறையாக மனைவியைப் பார்க்க விரும்பியபோது, அந்த துரோகியைக் காண நான் விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார் அந்த வீரப்பெண். […]

Read more

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத்

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத், என்.எஸ். அப்துல் ஜலீல், சிராக் ஃபவுன்டேஷன் ட்ரஸ்ட், சென்னை, விலை 150ரூ. குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்து கல்வி, விவசாயம், கிராம முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் நிலையை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் விளக்குகிறது இந்நூல். ஆனால் நூலின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எதிரானதுபோல் உள்ளது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.   —- மழைக்காடுகளின் மரணம், நக்கீரன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 20ரூ. காடுகள் குறித்த ஒரு விரிவான பார்9வையை அளிக்கிறது இந்நூல். […]

Read more

அரசியல் சதுரங்கம்

அரசியல் சதுரங்கம், சோலை, நக்கீரன், 105 ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 140ரூ. அரசியல் விமர்சகர் சோலை நக்கீரன் வார இதழில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரை தொடர் வெளியான காலகட்டத்தில் பரபரபப்பாக பேசப்பட்ட உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலான விஷயங்களை தனது பாணியில் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார். கட்சிபேதமின்றி உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் தைரியம் அவரது எழுத்தில் பளிச்சிடுகிறது. சமுதாய நோக்குடன் உண்மைகளை ஆணித்தரமாக எழுதியிருப்பது சிறப்பு.   —-   […]

Read more

கல்கியின் சிறுகதைகள்

கல்கியின் சிறுகதைகள், நக்கீரன், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை மூன்று புத்தகங்களும் முறையே 100ரூ, 120ரூ, 130ரூ. சரித்திரக் கதைகள் எழுதுவதில் ஈடுஇணையற்றவராகத் திகழ்ந்த கல்கி சிறுகதைகள் எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். காதல், வீரம், சோகம், நகைச்சுவை… இப்படி நவரசங்களும் கலந்தவை அவருடைய சிறுகதைகள். கல்கியின் மிகச்சிறந்த 55 கதைகளை தேர்ந்தெடுத்து 3 புத்தகங்களாக வெளியிட்டுள்ளது நக்கீரன். கல்கியின் மிகப் பிரபலமான வீணை பவானி, திருவழுந்தூர் சிவக்கொழுந்து, கேதாரியின் தாயார், அமரவாழ்வு, பொங்குமாங்கடல், புவிராஜா, சுபத்திரையின் சகோதரன் ஆகிய கதைகளும் […]

Read more
1 2