தமிழ் விருந்து

தமிழ் விருந்து, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. அறுசுவை விருந்து உண்டிருக்கலாம். அருந்தமிழ் விருந்து உண்டதுண்டா? அத்தகைய ஆனந்த அனுபவத்தை அளிக்கும் அற்புதமான தொகுப்பு நூல். சங்கத் தமிழ் முதல் இன்றைய ஹைகூ வரை பலப்பல கவிஞர்களின் கற்பனையில் ஊற்றெடுத்த உவகைத் தமிழின் உயர்வுகளை உணர்வுகளை உதாரணங்களுடன் சொல்லியிருக்கும் விதம் அருமை. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029544.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், பேராசிரியர் இரா.மோகன், பேராசிரியர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், விலை 120ரூ. நெஞ்சை அள்ளும் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பல்வேறு பகுதிகளைச் சுட்டி, அவற்றுள் பொதிந்திருக்கும் சொற்சுவை, பொருட்சுவை, கவிதை நயம், காப்பியத்திறன் என அனைத்தையும் எளிய தமிழில், இனிய நடையில் பதம் பிரித்து, இதமாய்த் தந்திருக்கும் புத்தகம். படிக்கப் படிக்க சிலம்பின் சிறப்பு மனதுக்குள் மகுடமாய் உயர்கிறது. நன்றி: குமுதம், 21/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027591.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

தமிழ் உலா

தமிழ் உலா, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 160ரூ. அருந்தமிழ் அன்று முதல் இன்றுவரை கவிதையாய் நடைபோட்டு வந்திருக்கும் நல்லிலக்கிய நூல்களில் இடம்பெற்ற தனிச்சிறப்பான வரிகளின் வர்ணனையாய் விளக்கக் கட்டுரைகள். செந்தமிழ்த் தேரில் செம்மாந்து உலாவரும் உவகை, பக்கங்களைப் புரட்டுகையில் மனதைப் பரவசப்படுத்துகிறது. அருந்தமிழ் விரும்பிகளுக்கு அற்புதமான விருந்து. நன்றி: குமுதம், 14/11/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027343.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. சொல்வேந்தராகப் பலரும் அறிந்த பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பல்வேறு நிலையான ஆளுமைத் தன்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனியென விளக்கும் வகையில், அவரது படைப்புகளில் இருந்து பொருத்தமானவற்றைச் சேர்த்துக் கோத்து உருவாக்கப்பட்டிருக்கும் நூல். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. சொல் மணக்க, பொருள் விளங்க உரைபல எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்த பத்மஸ்ரீ ஔவை நடராசன், சங்க இலக்கியம் முதல் கம்பர் வரை பலவற்றிலும் நயம் கண்டு கூறிய நல்லுரைகளின் தொகுப்பு. அவரது பன்முகம் குறித்த ஆய்வு நூலாக இருந்தாலும், தமிழை நேசிப்போரின் வாசிப்புக்கு ஏற்ற நூல். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

பன்முக நோக்கில் புறநாநூறு

பன்முக நோக்கில் புறநாநூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக்.252, விலை 160ரூ. மு.வ.,வின் செல்லப்பிள்ளை எனத்தகும் இரா.மோகன் எழுதியுள்ள இவ்வாய்வு நுால், புறநானுாற்றைப் பல்வேறு கோணங்களில் காட்டியுள்ளது. ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்நுாலில், 40 தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. சங்கச் சான்றோர்களின் ஆளுமைப் பண்புகள், புறநானுாற்றில் புதுமை, நீராதாரத்தின் அருமை, பண்டைத்தமிழர் மெய்யியல் திறம் எனப் பல்வேறு திசைகளில் ஆய்வு பரந்து விரிந்து செல்கிறது. மாசாத்தியார் காட்டும் மறக்குடி மங்கையர் மாண்பு, சான்றாண்மைக்கு ஆழி பெருஞ்சித்திரனார், உலகின் ஒப்பற்ற கவிஞர் அவ்வையார், […]

Read more

பன்முக நோக்கில் புறநானூறு

பன்முக நோக்கில் புறநானூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 160ரூ. செந்தமிழ் நூல்களுள் பழமையும் இனிமையும் வாய்ந்தது புறநானூறு. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றின் எளிமையும், அதில் மணக்கும் தமிழின் சீர்மையும் காலவளர்ச்சியில் படிப்பார் இன்றி மங்கிவிடாமல் தடுப்பதற்கான அரிய முயற்சியாக எழுதப்பட்டுள்ள நூல். புறநானூற்று நூல்களைப்பற்றி அறிந்தவர் அறியாதவர் என எல்லோரையும் கவர்ந்திழுக்கும் எளிய நடை. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

சங்க இலக்கியச் சாறு

சங்க இலக்கியச் சாறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 140ரூ. தொல்காப்பியம் எனும் இலக்கண நூல், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், பாரதியார் பாட்டு என்று இலக்கிய நூல்கள் பலவற்றில் எவ்வாறு இடம்பிடித்து இலக்கிய அந்தஸ்தினைப் பெற்றிருக்கிறது என்பதை விளக்கியிருப்பதோடு, சங்க இலக்கிய நூல்கள் பலவற்றின் சாறுபோல் அவற்றின் நயத்தினையும் சொல்லியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

பன்முக நோக்கில் புறநானூறு

பன்முக நோக்கில் புறநானூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக்.252, விலை ரூ.160. புறநானூறு தொடர்பான நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதிலுள்ள கட்டுரைகள் பன்முக நோக்கு, வாழ்க்கை வெளிச்சங்கள், சான்றோர் அலைவரிசை, கண்ணீர் ஓவியங்கள், உரை வளமும் பா நலமும் ஆகிய ஐந்து தலைப்புகளில் பகுக்கப்பட்டிருக்கின்றன. புலவர் பொன்முடியார் பாடிய ஒரு பாடலுக்கு, அற்புதமான விளக்கம் கூறுவதுடன் பொன்முடியார் கூறாத ஒரு கருத்தையும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். கணியன் பூங்குன்றனாரின்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலுக்கு சூஃபி கதையும், கவிஞர் கண்ணதாசனின் […]

Read more

கவிதை ஒளி

  கவிதை ஒளி, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 130ரூ. பேராசிரியர், பேச்சாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர் இரா.மோகன். அவர் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் கவி ஆளுமைகள் என்ற தலைப்பில் வ.சு.ப.மாணிக்கனார், ஈரோடு தமிழன்பன் போன்றோரின் ஆளுமைகள் குறித்தும் கவிதைக் கீற்றுகள் என்ற தலைப்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ பற்றியும் சுவைபட எழுதியுள்ளார். சங்கச் சித்திரங்கள் என்ற தலைப்பில் சங்க கால இலக்கியத்தின் சிறப்பை விவரிக்கிறார். இலக்கிய அன்பர்களுக்கு இனிய விருந்து. நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more
1 2 3