கவிதை ஒளி

கவிதை ஒளி, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 198, விலை 130ரூ. உரைநடை இலக்கியத்தில் தனிமுத்திரை பதித்துள்ள பேராசிரியர் இரா.மோகனின் 22 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தொன்மை இலக்கியத்திலும், புதுமைஇலக்கியத்திலும் நிறைய ஆய்வுக் கட்டுடிரைகள் எழுதியுள்ள இவர், இந்நூலில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ, சங்க இலக்கியம் பற்றிய கட்டுரைகள் தந்துள்ளார். ‘கவி ஆளுமைகள், கவிதைக் கீற்றுகள்’ என்ற தலைப்பிலான அத்தியாயங்களில், 13 கவிஞர்களின் சொல் ஆளுமையை, நேர்த்தியான ஒப்பீடுகளுடன் விளக்கி உள்ளார். ‘கேட்டிசின் வாழி தோழி’ என்ற குறுந்தொகை […]

Read more

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம், விகடன் பிரசுரம், விலை 125ரூ. புதிதாக மணம் செய்து கொண்டவர்கள், மணம் செய்யப்போகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல டாக்டர் டி. நாராயண ரெட்டி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். கேள்வி – பதில் பகுதியும் அடங்கியுள்ளது. ஷ்யாம் வரைந்துள்ள படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/3/2017   —-   இரா. இரவியின் படைப்புலகம், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், விலை 70ரூ. இரா.இரவி எழுதிய 10 நூல்களுக்கு இரா. மோகன் எழுதிய அணிந்துரைகள் […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், பேராசிரியர் இரா. மோகன், திருவரசு புத்தகநிலையம், பக். 282, விலை 180ரூ. மனித குலம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையை, நெறியை ஏடுத்தியம்பும் இலக்கிய கட்டுரைகள் முப்பதைக் கொண்ட நூல். கவிஞர்களைப் பற்றிய கவி அமுதம், சங்க இலக்கியம் குறித்த செவ்வியல் அமுதம், இக்கால நடப்பியலை பதிவு செய்யும் சிந்தனை அமுதம் என இலக்கிய அமுதத்தை மூவகையாகத் தந்து சுவைக்க சுவைக்க இன்பமூட்டுகிறார் பேராசிரியர் இரா. மோகன். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.

Read more

அமுதும் தேனும்

அமுதும் தேனும், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 242, விலை 150ரூ. முப்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘மூத்தோர் சொல்’ என்ற அத்தியாயத்தில், விவேகானந்தர், ரமண முனிவர், ராஜாஜி, நாமக்கல் கவிஞர், தமிழறிஞர் வ.அய். சுப்பிரமணியன், ஏர்வாடியார் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் அத்தனையும் அற்புதம். ‘இலக்கிய அமுது’ என்ற தலைப்பில் அகநானூறு, புறநானூறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் அறிவுக்கு சான்றாய் அலங்கரிக்கின்றன. இக்கால கவிஞர்களின் படைப்புகள் பற்றி தனி ஒரு அத்தியாயம். அதில் புதுக்கவிதை, மரபுக்கவிதை, […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல, உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தியலின் ஒளியில் ஆன்மாவின் – உயிரின் – தரத்தை மேம்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இக்காலத்திலே மனிதன் மன அழுத்தத்திலும், கவலையிலும் சிக்கித் தவிக்கிறான். புற வளர்ச்சியில் இமாலய உச்சியைத் தொட்டிருந்தாலும், அக உலகில் மயக்கத்திலும், கலக்கத்திலும், குழப்பத்திலும், நடுக்கத்திலும் அகப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது புலம்புகிறான். […]

Read more

நூலின்றி அமையாது உலகு

நூலின்றி அமையாது உலகு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 244, விலை 150ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-233-3.html வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களை வாசிக்க செய்யும் இரா. மோகன் எழுத்தில், வானதி பதிப்பகம் வெளியிட்டு உள்ள நூலின்றி அமையாது உலகு என்ற புத்தக வாசிப்பு தொடர்பான புத்தகத்தை, சமீபத்தில் படித்தேன். பேசுவதை போன்ற எளிய  நடையுடன் பயணிக்கும் அந்த நூல், புத்தகங்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், புத்தகம் பற்றிய அறிஞர்களின் கருத்து, புத்தகம் பற்றிய பழமொழிகள் என, பல தடங்களில் […]

Read more

வேலி மேல் வாச மலர்

வேலி மேல் வாச மலர் (பிறமொழிக் கதைகள்), வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, பக். 160, விலை 120ரூ. கணையாழி, படித்துறை, தளம் இதழ்களில் வெளிவந்த மொழியாக்க சிறுகதைகளில், இந்தியில் இருந்து 6, ஆங்கிலம், வங்கம், மைதிலி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி மொழிகளில் இருந்து தலா ஒன்று வீதம் மொத்தம், 12 சிறுகதைகள் ஆகியவை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில், 100 ஆண்டுகளுக்கு முன், பிரேம்சந்த், இந்தியில் எழுதிய, பண்ணையாரின் கிணறு, மருமகளால் அடிபட்டு இறந்து போன பூனைக்கு பிராயச்சித்தம் செய்ய முற்படும் […]

Read more

சங்க இலக்கிய மாண்பு

சங்க இலக்கிய மாண்பு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 186, விலை 85ரூ. சங்க இலக்கியத்தின் மாண்பும், அதன் ஆளுமை பண்பும், இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு புனையப்பட்டிருக்கின்ற பாங்கும், இளைய தலைமுறை அறிய வேண்டியது அவசியம். சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் சொற்கள், பொருள் கடினமாக, நடை சிரமமாக இருப்பதால், அதன் கருத்துக்கள் இன்றைய தலைமுறையை எளிதாக எட்டவில்லை. எனவே, அவை கூறும் அரிய கருத்துக்களை, எளிய தமிழ் நடையில் கட்டுரையாக தந்துள்ளார் ஆசிரியர். ஆழிபெருஞ்சித்திரனாரின் சான்றாண்மையும், கோப்பெருஞ்சோழனின் கவித்திறமும், சங்க சான்றோர்களின் […]

Read more

தமிழருவி

தமிழருவி, தமிழருவி மணியன், விகடன் பிரசுரம், 757, அட்ணணாசாலை, சென்னை 2, பக். 320, விலை 115ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-6.html தமிழருவி மணியனின் துணிச்சலான அரசியல் விமர்சனங்கள், இந்த நூலில் காணப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் தனி மனிதர் ஒருவர் தவறு செய்தால், பாதிக்கப்படுவது அந்த குடும்பத்தினர் மட்டுமே. ஆனால் அரசியலில் நுழைந்து பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தவறு செய்தால், அதனால் பாதிக்கப்படுவது, நாடும், நாட்டு மக்களும்தான் என அரசியலில் உள்ள அழுக்கை கட்டுரைகளில் இவர் […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை 4, பக். 200, விலை 90ரூ. நகைச்சுவை உணர்வு நமது மன இறுக்கங்களைத் தளர்த்தும் ஆற்றல் மிக்கது. கடுமையான விஷயங்களையும் கூட நகைச்சுவையுடன் கூறினால், அதில் தொடர்புள்ளவர்களே தன்னை மறந்து சிரித்துவிடுவர். எந்த ஒரு நிகழ்வையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு கடந்துவிட்டால், மனவேதனையிலிருந்து தப்ப முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். நகைச்சுவையை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு இந்நூலை எழுதி இருக்கிறார் ஜே.எஸ். ராகவன். சுமார் 40 ஆண்டுகளாக பத்திரிகைகளில் கட்டுரை எழுதிவரும் நூலாசிரியர், சென்னையில் […]

Read more
1 2 3