மீண்டும் பச்சைப்புடவைக்காரி

மீண்டும் பச்சைப்புடவைக்காரி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 280, விலை 300ரூ. பச்சைப்புடவைக்காரியின் மேல் பித்தனாகி போன நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமியின் மற்றொரு படைப்பு மீண்டும் பச்சைப்புடவைக்காரி. அதென்ன… வாய் ஓயாமல் அன்னை மீனாட்சி, பராசக்தி, உமா மகேஸ்வரி, பார்வதி என அன்னையின் சொரூபங்களை, ஆனந்த ஆராதனைகளை அடுக்கி கொண்டே போகிறார் எனத் தோன்றலாம். அம்மாவை எத்தனை முறை அழைத்தாலும் அத்தனை முறையும் உள்ளிருந்து ஊற்றெடுக்கும் பாச உணர்வு தான், நுால் ஆசிரியரின் மீனாட்சியின் மீதான பக்தி உணர்வு. இந்த பக்தியை தராசு […]

Read more

அருள்மழை தாராயோ

அருள்மழை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 216, விலை 220ரூ. இந்த எண்ணம் நமக்கும் அடிக்கடி வரும். கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல, பலர் விழிபிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை நகராதா என ஏங்கிக் கொண்டே செல்வர்.ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமிக்கும் இந்த சிந்தனை வந்தது. தாயே… மீனாட்சி… ஒரு நாளாவது நீயா சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டியா என, உள்ளுக்குள் கோபமும் சலுகையுமாய் கேட்க, மகனின் அசைவுக்கு இசையும் தாயாய், அர்ச்சகர் வடிவில் வந்து […]

Read more

வீணையடி நீ எனக்கு

வீணையடி நீ எனக்கு, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 220, விலை 240ரூ. நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என்று சிறுபிள்ளையாய் கேட்கும் மாணவியிடம், அன்னை ராஜராஜேஸ்வரி சொல்லும் எளிமையான விளக்கம், நம்மை உருகச் செய்துவிடும். அன்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். கர்மக்கணக்கும் அந்த அன்புக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவிக்கும் என்பதுதான் கதையோட்டத்தின் சிறப்பு. வழக்கம்போல விறுவிறுப்பான எழுத்தோட்டத்தாலும், எளிமையான கதையின் ஓட்டத்தாலும் கதையோடு பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் […]

Read more

பச்சைப்புடவைக்காரி

பச்சைப்புடவைக்காரி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 328, விலை 300ரூ. பக்தர்களின் பக்தியை அளவிடுகிறாள் பச்சைப்புடவைக்காரியாக வலம் வரும் மதுரை அன்னை மீனாட்சி. அவளின் தராசில் கடமைகளும், பொறுப்புகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அளவுகோல் இருக்கிறது. அதை எப்படித் தெரிந்து கொள்வது என வழிகாட்டுகிறார் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. மனித முயற்சியால் முடிந்த அளவு செய்துவிட்டு பின், அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடுவதே சரியான பக்தி. இத்தகைய பக்தியை தான் அன்னை மீனாட்சி விரும்புவதாக ஆசிரியர் தன் பக்கங்களில் தன்னம்பிக்கை விதையை விதைத்துக் […]

Read more

வானமே எல்லை

வானமே எல்லை, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 170ரூ. விறுவிறுப்பான நடையில் வாழ்க்கைச் சம்பவங்களை சுவை குன்றாமல் தரும் இந்நுாலாசிரியர், தம் வாழ்க்கை அனுபவங்களைச் சிறு சிறு துணுக்குகளாக, சிறு குறிப்புகளாகப் படைத்து அளித்துள்ளார். எதையும், மெல்லிய நகைச்சுவையோடு சொல்லக்கூடிய இந்த எழுத்தாளரின் சிந்தனை, பல கோணங்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கோள்களாகப் பயன்படும் விதத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு கருத்தை உணர்த்திச் செல்வது, நம் சிந்தனையைத் துாண்டுவதாக உள்ளது. ‘காதலைச் சொல்லத் தான் வார்த்தை தேவை: அதைத் துய்க்க மவுனம் போதும்; […]

Read more

சொல்லடி சிவசக்தி

சொல்லடி சிவசக்தி, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 272, விலை 200ரூ. இது ஒரு வித்தியாசமான பக்தி நுால். அம்பிகையோடு நுாலாசிரியரே உரையாடுவது போன்று அமைந்திருப்பது புதுமையானது. அம்மன் மீது அளவிலாப் பக்தியைக் கொண்டிருப்பவர்களைப் பரவசப்படுத்தும்படியான நுால். தாயினும் சாலப்பரிந்து, கோலக்கிளியே சரணம், பாலா திரிபுரசுந்தரி, யாதுமாகி நின்றாய், நீயும் நானும் வேறில்லை ஆகிய ஐந்து தலைப்புகளைக் கொண்டிருக்கும் இந்நுால். அம்பிகையை வினாவுவதாகவும், அவளே நேரடியாகப் பச்சைப் புடவைக் காரியாகக் காட்சி தந்து, நுாலாசிரியரின் ஐயங்களைத் தடை விடைகளால் விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது. அம்பிகையின் […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. வாசகர் உலகம் நன்கறிந்த சிறுகதை எழுத்தாளரான, வரலொட்டி ரெங்கசாமி, பகவத்கீதையைக் கையில் எடுத்திருக்கிறார். அத்துடன்கூட, மிகச் சிறந்த சிந்தனையாளர்களின் ஆன்மிக நூல்களையும், கருத்தூன்றிப் படித்திருக்கிறார். நிதானமாக உட்கார்ந்து சிந்தித்துவிட்டு, பகவத் கீதையின், 702 சுலோகங்களுக்கு எளிய தமிழ் நடையில் விளக்கம் (விரிவுரை? பாஷ்யம்?) எழுதியிருக்கிறார். ஏராளமான மேற்கோள்களைப் பொருத்தமான இடங்களில் சரியான விகிதத்தில் கோர்த்திருக்கிறார். மறக்காமல், அவர்களின் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார். பகவன் ஸ்ரீ ராமகிருஷ்ணர், மகாகவி பாரதியார், […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு பகவத் கீதையைப் புனித நூலாக்கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கியுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன என்கிறார் ஆசிரியர். பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. […]

Read more

த லவ்வர்ஸ் பார்க்

த லவ்வர்ஸ் பார்க், வரலொட்டி ரெங்கசாமி, வி.எஸ்.ஆர். பப்ளிகேஷன்ஸ், 11, வெங்கட்ராமன் ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை 625 002, பக். 224, விலை 200ரூ. பிரபல தமிழ் நாவல், சிறுகதை எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, எளிமையான ஆங்கிலத்தில் எழுதியுள்ள அருமையான நாவல். எல்லோருக்கும் புரியும்படியான ஆங்கில உரையாடல்கள். நாம் சிரிக்க, அழ, சிந்திக்க வைக்கின்றன கதாபாத்திரங்கள். இவர்கள் நமக்கு அன்னியமாக தெரியவில்லை. நாம் சந்திக்கும் அன்றாட மனிதர்கள்… கதைக்களமான மதுரை ஈகோ பார்க்கில் வலம் வருகிறார்கள். இந்த நாவலை படித்து முடிக்கும்போது, நம்மை […]

Read more

வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தனலட்சுமி பதிப்பகம், எஸ்-17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. ஆண்டவனிடம் வியாபார புத்தியுடன் பக்தி செய்வதால் எந்தப் பயனும் இல்லை. கடவுளை கடவுளுக்காகவே காதலித்து, அன்பு செலுத்துபவர்களின் பக்தி எப்படிப்பட்டதாக இருக்கும்? மரணம் என்பது நம் முடிவில்லை. ஜனனம் என்பது நம் தொடக்கமும் இல்லை. இந்த ஞானத்துடன் கடவுளின் செயல்களைக் காண்பவர்களுக்கு அன்பைத் தவிர, வேறு எதுவுமே தெரியாது. பாரசீகக் கவிஞன் ஜலாலுதீன் […]

Read more