தமிழ்ச்சுரபி

தமிழ்ச்சுரபி (தொகுதி 1), தொகுப்பாசிரியர் விக்கிரமன், இலக்கியபீடம், சென்னை, பக். 544, விலை 450ரூ. 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமுதசுரபி இதழின் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பாக இந்த தமிழ்ச்சுரபி வெளிவந்திருக்கிறது. இது முதல் தொகுதி. கட்டுரைகளில் ரா.பி. சேதுப்பிள்ளை, கி.வா. ஜகந்நாதன், கி.ஆ.பெ. விசுவநாதம், யோகி சுத்தானந்த பாரதியார், பி.ஸ்ரீ. போன்றோர் எழுதியவை தமிழர்களின் மனதில் பதிய வேண்டியவை. பசியற்ற, பண்புள்ள நாடாக தமிழகம் அமைய வேண்டும் என்கிறார் ரா.பி. சேதுப்பிள்ளை. எனது தலை சிலருடைய திருவடிகளில் மட்டுமே […]

Read more

எழுச்சி பெறு யுவனே

எழுச்சி பெறு யுவனே, தொகுப்பாசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 324, விலை 125ரூ. பெரும் இளைஞர் சக்தியைக் கொண்ட நம் நாட்டில், அவர்களை வழி நடத்துவது யார் என்பது மிகப் பெரிய கேள்வி. இன்றைய இளைஞர்களில் சிலர் தவறான பாதையில், செல்வதற்கான ஈர்ப்புகள், திசை திருப்பல்கள் அதிகம். ஒட்டுமொத்த இளைஞர் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. எனவே ஒட்டுமொத்த இளைஞர் சக்தியும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கான முயற்சியாக இந்நூல் அமைந்திருக்கிறது. வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கின்ற, சாதித்த, […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், சென்னை, பக். 256, விலை 220ரூ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 65 திரைப்படங்களை இயக்கி வெற்றிகரமான திரை ஆளுமையாளகத் திகழ்ந்தவர் ஏ.சி. திருலோகசந்தர். அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளவாறு பதிவு செய்துள்ள புத்தகமே நெஞ்சம் நிறைந்த நினைவுகள். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.சி. திருலோகசந்தர் இந்தப் புத்தகத்தையும் அவருடைய படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போன்றே அழகுற ஆவணப்படுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், ஏவி. […]

Read more

பிணங்களின் முகங்கள்

பிணங்களின் முகங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 248, விலை 200ரூ. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அத்துடன் ஏழை பிள்ளைகளுக்கும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டு வசதியையும் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இன்று கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், நாம் நம் சமூகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் ஒழிந்த பாடில்லை. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் […]

Read more

ஆன்மாவின் பயணங்கள்

ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 280, விலை 210ரூ. ஆன்மா பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; என்றும் இருப்பது. நமது ஆடை நைந்து போன பிறகு அதனைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய ஆடையை அணிவதுபோல, ஆன்மாவின் ஆடை போன்ற இந்த உடல் சாய்ந்துபோன பிறகு புதிய உடலுக்குள் புகுந்து ஆன்மா இயங்குகிறது என்று கூறுகிறது பகவத்கீதை. அமெரிக்க மனநல மருத்துவரான பிரைன் வைஸ் எழுதிய Many lives Many Matters. Only love is Red ஆகிய நூல்கள் […]

Read more

இந்தியா 1948

இந்தியா 1948, அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 120ரூ. 1948ஆம் ஆண்டு மும்பையில் ஒரு குடும்பத்தில் நிகழும் கதைதான் நாவல். சென்னையிலிருந்து குடும்ப வறுமையால் வேலைக்காக மும்பைக்குக் குடிபெயரும் பாலக்காடு குடும்பத்தின் நாயகன் சுந்தர், கார் கம்பெனியில் வேலை செய்கிறார். கூடுதல் பயிற்சிக்காக விடுதலைக்கு முன்பே அமெரிக்கா செல்லும் அவரை, அங்கு படிக்கும் (பால்ய விதவை) குஜராத்தி பெண் சுயவரம் செய்துகொள்கிறாள். அந்நாளில் இரண்டாவது திருமணம் குற்றமல்ல. இருப்பினும் அந்த உண்மையை குடும்பத்தில் வெளியிடத் திணறுவதும், அதனிடையே குடும்பத்தின் சுக […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 130ரூ. நூலாசிரியர் பல்வேறு கட்டங்களில் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். முதல் கட்டுரையில் பாரதியே நவீன சிறுகதையின் முன்னோடி என விளக்குவதோடு நிற்காமல் வ.வே.சு. அய்யரின் ஐரோப்பியத் தாக்கத்தை ஆதாரப் பூர்வமாகக் கூறியிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். புதுமைப்பித்தனும், சமீபத்தில் மறைந்த ஜெயகாந்தனும் எந்த அடிப்படையில் வேறுபடுகிறார்கள், அவர்களது வாழ்க்கைச் சூழல் அவர்களது எழுத்தை எந்த வகையில் வேறுபடுத்துகிறது என்பதை மிக நுட்பமாக விளக்கியிருக்கிறார். கயல் பருகிய கடல் எனும் […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, பக். 208, விலை 180ரூ. நாவலின் மையம் தேவி. நாவலின் முதுகுத்தண்டும், பொருள்பரப்பும் அவளே. கல்விக்குத் தடை விதிக்கும் குடும்பம் மற்றும் சமகத்தின் கொடுமைகளை அசாதாரண வலுவுடன் சகித்தபடி கல்வியே குறியாக அவள் செயல்படுகிறாள். சிறிய வயதிலேயே தாயின் வற்புறுத்தலால் மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவள் விதவையான பிறகு அந்தக் குற்றவுணர்ச்சி தாங்க முடியாது அவளை வெறி கொண்டு படிக்க வைக்கும் சாம்பசிவம் போன்ற எளிய மனிதர்களாலும்தான் பெண் விடுதலை சாத்தியமாகிறது. தனக்கான பாதையைத் தானே […]

Read more

காந்தியைக் கொன்றவர்கள்

காந்தியைக் கொன்றவர்கள், மனோகர் மல்கோங்கர், தமிழில் க. பூர்ணசந்திரன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 332, விலை 300ரூ. காந்தி கொலை வழக்கு தொடர்பாக மனோகர் மல்கோங்கர் ஆங்கிலத்தில் எழுதி, 1978இல் வெளியான தி மென் ஹு கில்டு காந்தி என்ற நூலின் தமிழாக்கம். 1948, ஜனவரி 12ஆம் தேதி காந்தி கொலை வழக்குச் சதி தொடங்கியதிலிருந்து 1949, நவம்பர் 15ஆம் தேதி நாதுராம் கோட்ஸேவும், நாராயண ஆப்டேவும் தூக்கிலிடப்படும் வரை நிகழ்ந்தவற்றை, காவல் துறையின் விசாரணைத் தகவலின் அடிப்படையிலும், கொலைச் சதியில் ஈடுபட்டவர்களில் […]

Read more

51 அட்சர சக்தி பீடங்கள்

51 அட்சர சக்தி பீடங்கள், ஜபல்பூர் ஏ. நாகராஜ சர்மா, வானதி பதிப்பகம், சென்னை, பக். 710, விலை 400ரூ. சிவனின் பேச்சை மீறி தட்சனின் யாகத்திற்குச் செல்கிறார் தாட்சாயிணி. அங்கு தந்தையான தட்சனால் அவமானம் நேர்கிறது. கொழுந்து விட்டெரியும் யாகத் தீயில் பாய்ந்து தன்னுயிரை விடுகிறார். செய்தி அறிந்த சிவபெருமான், தீ தீண்டாத உயிரற்ற உடலாய்க் கிடந்த தாட்சாயிணியின் உடலைத் தன் தோள்மீது தூக்கிப் போட்டுக் கொண்டு மிக உக்கிரமாக பித்துப் பிடித்தவர் போல் கூத்தாடுகிறார். அச்சமயம் தேவியின் உடல் பல கூறுகளாக […]

Read more
1 123 124 125 126 127 180