தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள்

தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள், முத்தாலங்குறிச்சி காமராசு,காவ்யா பதிப்பகம், பக்.244, விலை ரூ. 240. நெல்லைச் சீமையைப் பற்றி, தாமிரவருணி நதிக் கரையோரம் பற்றி படிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு நல்லதொரு தகவல் கருவூலம் இந்நூல்.எங்கெங்கோ தேடித் தனித்தனி நூல்களில் படிக்க வேண்டிய விஷயங்களை ஒரே நூலில் திரட்டித் தந்துள்ளார் நூலாசிரியர். ஏற்கெனவே, தாமிரவருணி சார்ந்து இவர் எழுதிய, தாமிரபரணிக் கரையினிலே “தாமிரபரணி கரையில் சித்தர்களுடன் பயணிப்போம்  என்ற தொடர்கள் இணைந்து நூலாகியிருக்கிறது. நன்றி: தினமணி, 2/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   […]

Read more

உன்னை நீ அறிந்து கொள்வது எப்படி

உன்னை நீ அறிந்து கொள்வது எப்படி,  தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், இன்டகரல் யோகா இன்ஸ்டியூட், பக்.360, நன்கொடை ரூ.100. தமிழகம் பெற்ற ஆன்மிக பெரியவர்களுள் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும் ஒருவர். நூலில் 3 பாகங்களில் 26 தலைப்புகளில் ஆன்மிக வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ஆன்மிகத்தில் அடியெடுத்து வைப்பவர் முதலில் விடவேண்டியது பேராசை, ஆணவம் என்பதை எடுத்துக்கூறும் சுவாமிகள், ஆன்மிக சாதகர்கள் பெற வேண்டிய மந்திர தீட்சை என்றால் என்ன? தீட்சை அளிக்கும் குருவின் தகுதி, குருவின் பெருமை, தீட்சை பெறும் […]

Read more

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம், அதிசயக் கோவில் அங்கோர் வாட், அமுதன், தினத்தந்தி பதிப்பகம், பக்.272, விலை ரூ.150. கம்போடியா நாட்டுக்குச் சென்று ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கம்போடியா நாட்டில் உள்ள பல கோயில்களைப் பற்றி மிக விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. கம்போடியா நாட்டு வரலாற்றையும், தமிழகத்துக்கும் கம்போடியாவுக்கும் இருந்த தொடர் புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. கம்போடியா நாட்டின் மன்னராக பல்லவநாட்டில் இருந்து இடம் பெயர்ந்த ஒருவர் இருந்திருக்கிறார். கம்போடியா நாட்டின் சியம் ரீப் நகரில் இருக்கும் அங்கோர் வாட் கோயிலுக்கும் காஞ்சிபுரத்தில் […]

Read more

கல்வியா? செல்வமா?

கல்வியா? செல்வமா?, உதயை மு.வீரையன்; பாவை பப்ளிகேஷன்ஸ், பக்.160; விலை ரூ.125. நம்நாட்டின் கல்விமுறை குறித்து தினமணி உள்பட பல்வேறு இதழ்களில் 1996 முதல் 2017 வரை வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்று நம் அரசியல் சட்டம் கூறினாலும் அவை இன்னும் எட்டப்படாத இலக்காகவே இருக்கிறது. “பணம் இருந்தால்தான் படிக்கவே முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழில் என்றே பெற்றோரும், மற்றோரும் எண்ணுகின்றனர். இந்தியக் கல்வித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை […]

Read more

ரமணரின் பார்வையில் நான் யார்?

ரமணரின் பார்வையில் “நான் யார்?, வேதகாலம் முதல் ரமணர் காலம் வரை…- அபிநவ ராஜகோபாலன், நர்மதா பதிப்பகம், பக்.280; விலை ரூ.175. அகங்காரம் (நான்), மமகாரம் (இது என்னுடையது) என்ற மனப்போக்கு வேத காலத்தில் நேர்மறைச் சிந்தனையாக முன்னெடுக்கப்பட்டு தனிப்பட்ட, சமுதாய வாழ்வியலில் மனிதன் உன்னத நிலையில் இருந்தான். வாழ்வில் மிகுந்த துயருற்று, தத்துவ விசாரத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு மட்டுமே நான் யார்? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி எழும்போதே, தேடலும் பயணமும் ஆரம்பமாகி இறுதியில் முக்தி எனும் விடை கிடைக்கிறது. நான் […]

Read more

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் (ஆய்வுக் கட்டுரைகள், இரு தொகுதிகள்), தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன்,  தமிழ்த்துறை, முதல் தொகுதி-பக்.520; ரூ.500; இரண்டாவது தொகுதி- பக்.496; ரூ.500. சென்னையில் இரு நாள்கள் நடந்த அனைத்துலக தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட 140 ஆய்வுக் கட்டுரைகள் (தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உட்பட) இவ்விரு தொகுதிகளிலும் உள்ளன. இறைவன், அரசன், வள்ளல் முதலிய யாரேனும் ஒருவரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கையில் சுருங்கியதாக அமைவது; அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப்பற்றியதாகவும்; அறம், பொருள், […]

Read more

நமது கடவுள் மனிதனே

நமது கடவுள் மனிதனே,சுவாமி விவேகானந்தரின் உரத்த ஆன்மிகச் சிந்தனைகள், தொகுப்பாசிரியர்: ஜாநிசிவம், ஜனனி நூல் பதிப்பு, பக்.332, விலை ரூ.250. மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த மத, பண்பாடு, கலாசாரப் பழக்கங்களை ஒதுக்கித் தள்ளாமல், தெய்வ பக்தியோடு கலந்த தேசபக்தியை வலியுறுத்தி விவேகானந்தர் ஆற்றிய உரைகளே அவரை இந்த உலகுக்கு அடையாளப்படுத்தின. என்னிடம் 100 வீர இளைஞர்களைக் கொடுங்கள். இந்த உலகையே மாற்றி காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். அவர் போதித்த செய்திகள் அனைத்தும் அவரது குருவான சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்தை எதிரொலிப்பதாகத்தான் இருந்தன. […]

Read more

தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்

தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்,  தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., பக்.248, விலை ரூ.275. தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றை பல்வேறு கோணங்களில் தொகுத்துக் கூறும் முயற்சியாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.கலை இலக்கியம் பற்றி வெவ்வேறு பார்வைகளைக் கொண்ட கா.நா.சுப்ரமண்யம் கட்டுரையும் கா.சிவத்தம்பி கட்டுரையும், கோ.கேசவனின் கட்டுரையும், சுந்தரராமசாமியின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. ராஜ்கெüதமன், பிரமிள், எம்.ஜி.சுரேஷ், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், வீ.அரசு, இரா.கந்தசாமி, சுப்பிரமணி இரமேஷ் ஆகியோரின் கட்டுரைகள் தமிழ்ச் சிறுகதைகளின் வெவ்வேறு போக்குகளைப் பற்றி பேசுகின்றன.மணிக்கொடி காலத்தில் வெளிவந்த சிறுகதைகள், […]

Read more

தேசத் தந்தைகள்

தேசத் தந்தைகள் – விமரிசனங்கள், விவாதங்கள், விளக்கங்கள், ராஜ்மோகன் காந்தி, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.168, விலை ரூ.180. மிகப் பெரிய தலைவர்களாக விளங்கிய காந்தி, நேரு, அம்பேத்கர், பட்டேல் ஆகியோரின் சிந்தனைகளின், நடவடிக்கைகளின் விளைவாக அந்நாளில் நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் பிரிவினை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றை – வேறு மாதிரியாக உருவாக்கியிருக்க முடியுமா? என்பதை ஆராயும் நூல். குஜராத்தைச் சேர்ந்த ஸ்வாமி சச்சிதானந்த், காந்தி மற்றும் நேருவைப் பற்றி வைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெர்ரி […]

Read more

சிகரம் பேசுகிறது

சிகரம் பேசுகிறது, வி.கிருஷ்ணமூர்த்தி, தங்கத்தாமரை பதிப்பகம், பக்.424, விலை ரூ.300. கும்பகோணம் அருகிலுள்ள கருவேலி என்னும் கிராமத்தில் பிறந்த நூலாசிரியர், தனது 11 ஆவது வயதில் தாயை இழந்தார். சென்னையில் ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்று தந்தை சென்றுவிட, தனது மூத்த சகோதரர்களின் அரவணைப்பில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், பட்டப் படிப்பு படிக்க வசதியில்லாததால், எலெக்ட்ரிகல் என்ஜினிரிங் பட்டயப்படிப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் அவரே பின்னாளில் பிஎச்இஎல், மாருதி, ஸெயில் என்னும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆகிய நிறுவனங்களில் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். “உற்பத்தித்துறையில் […]

Read more
1 28 29 30 31 32 180