வங்கி சேவைகள்

  வங்கி சேவைகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்களை “பொக்கிஷம்” என்ற பொதுத் தலைப்பில் புத்தகங்களாக ரேவதி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது வெளிவந்துள்ள புத்தகம் வங்கி சேவைகள் பாகம் 1. வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கும் சேவைகள் குறித்த விவரங்களும், கடன் உதவிகள் பற்றிய விவரங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. கடன்கள் பெறுவதற்கான தகுதிகள், ஆவணங்கள், அரசு தரும் மானியங்கள் பற்றிய விவரங்களும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி)

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி), வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 420ரூ. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட “ஜி.எஸ்.டி.” வரி பற்றி முப விவரம் அறிந்தவர்கள் மிகச் சிலரே. ஜி.எஸ்.டி. பற்றி பொதுமக்களிடையே குழப்பங்களும், சந்தேகங்களும் நிலவி வருகின்றன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 501 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை “பொக்கிஷம்” என்ற தலைப்பில் தகவல் களஞ்சியங்களை வெளியிட்டு வரும் வடகரை செல்வராஜ் உருவாக்கியுள்ளார். “ஜி.எஸ்.டி.” பற்றிய சந்தேகங்களை போக்கும் வகையில் 700-க்கும் மேற்பட்ட கேள்வி – பதில்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: […]

Read more

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 242, விலை 220ரூ. மக்களுக்குப் பயனுள்ள நூல்களை வெளியிட்டு வரும் இந்நூலாசிரியர், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த இந்நூலை வெளியிட்டுள்ளார். மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு நடத்தும் ஆட்சி மக்களாட்சி. இது கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்த வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதே, இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74-ஆவது திருத்தங்கள். இதன்மூலம், அரசின் உயர்மட்ட அதிகார மையத்திலிருந்து அடிமட்ட நிர்வாகம் வரையிலான அதிகாரப் பரவல், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Read more

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. மக்களுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி, “பொக்கிஷம்” என்ற பொதுத் தலைப்பில் ‘புத்தகங்களாக வெளியிடும் பணியை வடகரை செல்வராஜ் செய்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புத்தகம், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள்”. இதில் சட்டப்போரவை நடைமுறைகள், சட்ட மன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் முதலிய விவரங்கள் அடங்கியுள்ளன. தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் டெலிபோன் எண்களுடன் இடம் […]

Read more

கிராம ஊராட்சி நிர்வாகம்

கிராம ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 344, விலை 260ரூ. ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. நாட்டின் முதுகெலும்பு கிராமம்தான். கிராமம் உயர்ந்தால்தான் நாடு முன்னேறும்’ என்பது தேசத்தந்தை காந்திஜியின் உறுதியான கருத்து. இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால், அவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு ஊரக வளர்ச்சி மிக முக்கியம். எனவே ஊரக வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், விதிகளையும் வகுத்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மாவட்டம் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், […]

Read more

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை, டி.ராம்பாபு, நர்மதா பதிப்பகம், பக். 200, விலை 100ரூ. இன்றைய இளைய தலைமுறைக்கு, எச்சரிக்கையாக, செய்தியாகவுள்ள பல விஷயங்களின் தொகுப்பு இந்நூல். நன்றி: தினமலர், 2/10/2016   —- வெளிநாட்டு கல்வி வழிகாட்டி, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 464, விலை 350ரூ. எந்த கல்வியை, எந்த நாட்டில் பயிலலாம் என்பதை விளக்கி, உலக நாடுகளில் கல்வி பயில வழிகாட்டியாக அமையும் நூல் இது. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

வாருங்கள் வெல்லலாம்

வாருங்கள் வெல்லலாம், மதுமிதா, மணிமேகலைப் பிரசுரம், விலை 40ரூ. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்ந்த மதுமிதா தன் அனுபவங்களையும், கற்பனை வளத்தையும் கலந்து கவிதைகளை எழுதியுள்ளார். சிறிய கவிதைகளிலும், பெரிய கருத்துக்கள் புதைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- வெளிநாட்டு கல்வி வழிகாட்டி, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில எண்ணும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல். வெளிநாட்டுக் கல்விக்குத் தயாராவது எப்படி, வெளிநாடுகளில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள், கல்வி உதவித்தொகைகள் முதலான விவரங்கள் இதில் […]

Read more

கிராம ஊராட்சி நிர்வாகம்,

கிராம ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.344; ரூ.260. அரசின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், பணிகளைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள், நிதி ஒதுக்கீட்டு முறை ஆகியவை குறித்த விவரங்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கிராமப் பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியம். இது குறித்து இந்த நூல் அலசி ஆராய்கிறது. ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோரின் செயல்பாடுகள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள், மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் எளிய நடையில் […]

Read more

தமிழி

தமிழி, வி.ஆனந்தகுமார், வி. ஆனந்தகுமார் வெளியீடு, விலை 250ரூ. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று ஆதிமனிதனான ஆதிபகவன், பிறப்பித்த முதல் சொல் எது என்பதிலிருந்து ஆரம்பித்து குகைகளில் அவன் வைத்த அடையாளக் கோடுகள் பிற்காலத்தில் அவை எழுத்துக்களாக மாறின. இது தொடர்பாக அரிய தகவல்கள் அடங்கிய ஆராய்ச்சி நூலாகும். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.   —- தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி?, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டி இந்நூல். அரசு […]

Read more

கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள்

கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 416, விலை 330ரூ. தமிழக அரசின் அனைத்து துறைகள் குறித்து முழு விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி, வெளிநாட்டு கல்வி வழிகாட்டி என்று மக்களுக்கு பயனுள்ள பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளவர் இந்நூலாசிரியர். அதே முறையில் இந்நூலையும் உருவாக்கியுள்ளார். ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு உள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகள் போன்றே, ஒரு கிராமத்தை […]

Read more
1 2 3