வரப்பு

வரப்பு, அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், விலை 75ரூ. தொழில் அதிபர் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன், எழுத்தார்வம் மிக்கவர். சுய முன்னேற்ற நூல்கள் எழுதி புகழ்பெற்றவர். இப்போது 15 சிறுகதைகள் கொண்ட “வரப்பு” என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு கதையிலும், ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி இருப்பது, பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- பனையாளியும் மாடமாளிகையும், சாமி வெளியீடு, விலை 60ரூ. நூலாசிரியர் ஆத்மா கே. இரவி, ஓவியரும்கூட. எனவே தன் நாவலுக்கு உரிய படங்களை அவரே வரைந்துள்ளார். எனவே, […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல், மிக இயல்பான முறையில் மிக இனிமையான புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது இந்நூல். இலக்கணம் ஒரு மொழிக்கு ஆணி வேர் போல அவசியமானது என்பதையும் வலியுறுத்துகிறது. வழக்கமான அந்த இலக்கணப் பாடமுறையைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாமே என சிந்தித்ததின் விளைவாக, செய்யும் உதாரணங்களுக்குப் பதிலாக, நாம் தினமும் பயன்படுத்தும் சொற்கள், […]

Read more

நா. முத்துக்குமார் கவிதைகள்

நா. முத்துக்குமார் கவிதைகள், நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி பதிப்பகம், பக். 272, விலை 225ரூ. கவிதை காலத்தின் கண்ணாடியாகவும், சமூகத்தின் முகமாகவும் தனிநபர் தன் அனுபவங்களை தீட்டிடும் சித்திரமாகவும் பார்க்கப்படுகிறது. கவிதைக்கு மொழிவளம், அனுபவச் செறிவு மிகவும் அவசியம். நா.முத்துக்குமாருக்கு அவை இரண்டுமே வாய்த்திருப்பது வரம். நா.முத்துக்குமார் கவிதை, உரைநடை, திரைப்பாடல் என்று எழுத்தின் பல தளங்களிலும் இயங்குபவர். என்றாலும் கவிதை அவருக்கு தாய்வீடு. அந்தத் தாய் வீட்டில் அவரது பால்ய கால அனுபவங்களை அவர் பதிவு செய்திருக்கிறார். கவிதை மனம் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. […]

Read more

தெருவிளக்கும் மரத்தடியும்

தெருவிளக்கும் மரத்தடியும், ச.மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக். 88, விலை 80ரூ. கற்பித்தலின் நுட்பங்களை பேசுகிறது இந்த நூல். வகுப்பறை வடிவமைப்பை கலைத்துப் போட்டு, கற்கும் அனுபவங்களை புதுப்பிக்கும் வகையிலான கட்டுரைகள் இதில் உள்ளன. கல்லூரி பேராசிரியராக வகுப்பறை சார்ந்தும், அறிவொளி இயக்கத்தில் கிராமப்புறங்களில் கற்பித்தல் சார்ந்தும், பொதுவெளியில் மாணவர்களின் திறனை மதிப்பிடுவதில் நுட்பங்கள் சார்ந்தும், 17 பதிவுகள் இந்த புத்தகத்தில் உள்ளன. நூலாசிரியரின் பொறுப்புடைமை, சொற்களின் வழி ஒளிர்கிறது. தட்டையான தத்துவத்தில் பயணிக்கவில்லை என்பதை அவர் வரிக்குவரி உணர்த்திக் கொண்டே இருக்கிறார். […]

Read more

தி கர்ஸ் ஆப் சூர்யா

தி கர்ஸ் ஆப் சூர்யா, தேவ் பிரசாத், ரேண்டம் ஹவுஸ் இண்டியர், பக். 306, விலை 299ரூ. இதயத்தைத் துரிதகதியில் இயங்க வைக்கும் மர்ம நாவல்! ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டும்! வசீகரமான ஆங்கில நடை. மதுரா கிருஷ்ண ஜன்மஸ்தான் கோவில். ‘திபெத் லிபரேஷன் பிரன்ட்’ என்ற ரகசிய அமைப்பைச் சேர்ந்த டென்சிங், கிருஷ்ணர் கோவிலில் உள்ள, சியமந்தக மணியை திருட வருகிறான். கோஹினூர் வைரம் போன்ற விலை மதிக்க முடியாத கல் அது; நீல நிறம் கொண்டது. திருடும் முயற்சியில் அவன் […]

Read more

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள், டாக்டர் கலைமாமணி யோக, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், பக். 184, விலை 150ரூ. பிழைப்பு தேடி தென்னாப்ரிக்கா சென்ற தமிழர்கள், பல தலைமுறைகளாக அங்கே வாழ்ந்து, தமிழர் பண்பாட்டை மறக்காமல் பின்பற்றுவதை, இதில் விவரித்துள்ளார் நூலாசிரியர். டர்பன் நகருக்கு, 16ம் நூற்றாண்டில் பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள், வழிபாட்டிற்காக ஆலயங்களை நிறுவி, தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளை அங்கும் கொண்டாடி வருவதை விளக்கமாக கூறியுள்ளார். நம்மூர் பட்டு புடவைகளுக்கு அங்கு மவுசு இருப்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் விவரித்துள்ளார். […]

Read more

அடையாளம் தேடி

அடையாளம் தேடி, மு. வித்யா பெனோ, சந்தியா பதிப்பகம், பக். 72, விலை 80ரூ. ஆற்றங்கரை, திருவிழா, கோவில் படித்துறை இங்கெல்லாம் சந்தித்து காதலர்கள் காதல் வளர்த்த காலம் மலையேறி விட்டது. அலைபேசி, வாட்ஸ் ஆப், இணையம் வழியாகத்தான் இப்பொழுது காதல் வழிகிறது. அப்படி வழியும்பொழுது, அவர்கள் அருகில் இருப்பவர்களை, பல நேரம் சங்கடத்தில் தான் ஆழ்த்துகிறது. அதனை, ‘சிநேகிதியின் தூக்கத்தையும் / சேர்த்து கெடுக்கிறது / நம் செல்போன் முத்தங்கள்’ என்று அழகாக பதிவு செய்திருக்கிறார் வித்யா பெனோ. வாழை இலை காற்றில் […]

Read more

சயமாம் பர்மா மரண ரயில் பாதை

சயமாம் பர்மா மரண ரயில் பாதை, (மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு), சீ. அருண், தமிழோசை பதிப்பகம், பக். 232, விலை 180ரூ. நல்வாழ்வை நினைத்து நகரத்துக்கு போன கதை! ஒருமுறை சயாம் நாட்டுக்குச் சென்ற நம் தேசியகவி ரவீந்திரநாத் தாகூர், அந்த மண்ணைத் தொட்ட தும் காதலுக்கு நிகர்த்த ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘உன்னை என்னுடையதென்று நொடியில் கண்டுகொண்டேன்’. ஆனால், ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாகத்தான் இருக்கிறது. இந்த நூலிலே வரும் தொழிலாளக் கொத்தடிமைகள் சயாமுக்கு வைத்த பெயர், ‘சாவூர்’ என்பதாகும். மரண ரயில் […]

Read more

தமிழ் மலாய் சொல் அரங்கம்

தமிழ் மலாய் சொல் அரங்கம், க. கந்தசாமி, ஸ்ரீ விஜயன் பதிப்பகம், ‘சுமா’ என்றால் என்ன அர்த்தம்? வயது வரம்பின்றி அனாயாசமாக எல்லாரும் பயன்படுத்துவது ‘சும்மா’ என்ற சொல். மடைமையாக ஏதாவது செய்து, மிகச் சாதாரணமாக ‘சும்மாதான் செய்தேன்’ என்று சொல்லும் பலரை நாம் பார்த்திருப்போம். உங்களுக்கு தெரியுமா? மலாய் மொழியிலும் அந்த வார்த்தையை அப்படித்தான் சொல்வார்கள். ஆனால், உச்சரிப்பில் மட்டும் சிறிய மாற்றம். அவர்கள் ‘சுமா’ (Cuma) என்று சொல்வார்கள். Cuma என்றால், ‘அது மட்டும்தான்’ என்று அர்த்தம். அதுவே ‘பெர்சுமா’ (percuma) […]

Read more

அன்னை தெரசா

அன்னை தெரசா, பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 168, விலை 125ரூ. தெரசாவின் தாயகம் அல்பேனியா. இருப்பினும் அவர், 1948ம் ஆண்டிலேயே இந்தியப் பிரஜை ஆகி விட்டார். தெரசாவும் ஒருமுறை, ‘ரத்த சம்பந்தத்தால் நான் அல்பேனியன். மதநம்பிக்கையில் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி. மற்றபடி எப்போதும் நான் இந்தியப் பெண்மணி’ என்று கூறியிருக்கிறார். மற்ற இளம்பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பருவத் தொல்லைகள் எதனையும் தெரசா அனுபவித்ததில்லை. அது, இயற்கை அவருக்குத் தந்த கொடை என்று தான் சொல்ல வேண்டும். மாறாக, துறவறம் பூண்டு ஏழை, எளிய […]

Read more
1 2 3 4 5 7