அபாயப்பேட்டை

அபாயப்பேட்டை, ரமேஷ்வைத்யா, டிஸ்கவரி புக் பேலஸ், பக். 102, விலை 90ரூ. மனோதைரியத்தை வளர்க்கும் கதை! குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் தமிழ் இலக்கியச் சூழலில் மிகவும் குறைவு. அப்படியே எழுதினாலும் அந்தச் சின்ன வாசகர்களுக்கு, எளிதில் புரியும் சொற்களில், செறிவான தமிழ் நடையில் எழுதுவது மிக மிக அபூர்வம். அந்த இரண்டையும் பூர்த்தி செய்யக்கூடிய எழுத்தாளராக ரமேஷ் வைத்யா இருக்கிறார். ‘அபாயப்பேட்டை’ கதை சுட்டி விகடனில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் மனதை வெற்றிகொண்ட கதை. கதை மட்டும் அல்லாது மொழியறிவையும் குழந்தைகளுக்கு ஊட்டுவது மிக […]

Read more

முருகன் விநாயகன்

முருகன் விநாயகன், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ. மீண்டும் தலைதூக்கும் கலாசாரவாதம்! தமிழகத்தில் சமூக மற்றும் அரசியல் தளத்தில், முருகன் எனும் பிம்பம் மெல்ல கலைந்து, விநாயகர் எனும் பிம்பம் மேலெழுந்து வருவதை, பல்வேறு சான்றாதாரங்கள் மூலம், இந்த நூலில், கவுதம சித்தார்த்தன் சுட்டிக்காட்டி ஆய்வு செய்கிறார். விநாயக பிம்பத்தின் மூலத்தைச் சரியாகக் கணக்கிட்டுவிட முடியாது. எனினும், பிள்ளையார் வழிபாடாக தமிழ்ச் சமூகத்தில் பரவிய அவ்வணக்கத்தின் காலத்தை, இலக்கியங்கள் வழியே ஒரளவு சரியாகவே கணிக்க முடியும். அக்கணிப்பைச் செவ்வனே […]

Read more

மகராஜனா இரு

மகராஜனா இரு, அமரர் கல்கி, வானதி பதிப்பகம், பக். 292, விலை 200ரூ. கடந்த, 1930களில், தேசியம், காந்தியம், சமுதாயப் பொறுப்புணர்வு போன்ற விஷயங்களைப் பற்றி, அப்போது நிலவிய சூழலுக்கு ஏற்ப, ஆனந்த விகடனில் கட்டுரைகள் எழுதினார் கல்கி. அவற்றின் தொகுப்புதான் இந்த நூல். அன்று பேசப்பட்ட பல பிரச்னைகள், இன்று வரை நீடிக்கின்றன என்பதே யதார்த்தம். எவரையும் புண்படுத்தா நகைச்சுவை எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்பதை உணர, இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழக நூலகத்திற்குள் பட்டதாரிகள் அல்லாதோர் […]

Read more

ஒற்றை மார்பு

ஒற்றை மார்பு, எஸ்.கே. முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 216, விலை 175ரூ. அமானுஷ்யம், நாட்டுப்புறக் கதை, காதல், சஸ்பென்ஸ், நகைச்சுவை, விஞ்ஞானம் என்று பல்சுவைக் கதைகள், இந்தத் தொகுப்பில் உள்ளன. சிறப்பாக முதலிடம் பெறும் கதை, ‘ஒற்றை மார்பு!’ மார்பகப் புற்றுநோயால், ஒரு மார்பை இழந்த கதாநாயகி, வாழ்க்கையைப் புத்துணர்ச்சி உள்ளதாக மாற்றிக் கொள்வதற்காக, ஒரு ஏழை மாணவியிடம் அன்பு காட்ட துவங்குவதை உருக்கமாகச் சொல்கிறார் கதாசிரியர். முதல் கதையான, ‘சிவப்பு ராத்திரிகள்’ ஒரு மர்ம நாவலைப் படிப்பதைப் போன்ற உற்சாகத்தைத் தருகிறது. […]

Read more

திருப்புகழில் திருமால்

திருப்புகழில் திருமால், டாக்டர் எஸ். ஜெகத் ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம் வெளியீடு, பக். 128, விலை 80ரூ. திருப்புகழ், முருகப் பெருமான் மீது பாடப்பட்ட கவியானாலும், அதில், கணபதி, சிவன், அம்பிகை, சூரியன், திருமால் ஆகிய எல்லா கடவுளுக்கும் இடமுண்டு. ‘முத்தைத்தரு’ என்ற முதல் பாடலிலேயே, ராமன் மற்றும் கண்ணனை, அருணகிரிநாதர் போற்றுவதை, நூலாசிரியர் மிக அழகாக விளக்குகிறார். பாற்கடல் வாசம், பாம்பணை நேசம், ராமனின் வீரம், கண்ணனின் கருணை, மகாலட்சுமியின் மாண்பு, கஜேந்திரனுக்கு அருளியது, அனுமனது வீரம், ஆழ்வாரின் சொல் கேட்டு […]

Read more

ஜெயகாந்தனும் நானும்

ஜெயகாந்தனும் நானும், தேவபாரதி, கலைஞன் பதிப்பகம். ஜெயகாந்தனின் காலம் பொற்காலம்! தேவாரதி எழுதிய ‘ஜெயகாந்தனும் நானும்’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜெயகாந்தன் என்ற ஆளுமை, தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமானவர். அவர், மற்றவர்களை போல அல்லாமல், அரசியல்வாதியாக, இயக்குனராக, பேச்சாளராக, எழுத்தாளராக புகழ் பெற்றவர். தேவபாரதி, ஜெயகாந்தனுடன் பழகியபோது நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வுகளை, நாவல்போல, சுவைபட இந்த நூலில் கூறுகிறார். கண்ணதாசனின் ‘வனவாசம்’ மிகவும் வெளிப்படையாக இருக்கும். அது, ரகசியமான அழகியலோடு பேசுகிறது. ஒருமுறை தேவபாரதி, ஜெயகாந்தனின் […]

Read more

வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி, வழக்கறிஞர் ந. இராஜா செந்தூர் பாண்டியன், குமுதம் பு(து)த்தகம், பக். 296, விலை 350ரூ. நீதி இலக்கியத்துக்கு ராஜபாட்டை! ‘இந்திய அரசியலமைப்பு சட்டம்’ எனப்படும், நமது நாட்டின் அதிகாரப்பூர்வமான சட்ட வேதத்தின் சாரமாக, சமீபகால தமிழ் வரலாற்றில் கிடைக்காத பொக்கிஷமாக அமைந்திருக்கிறது வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன் எழுதிய, ‘வாதி, பிரதிவாதி, நீதி!’ நூல். ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் தொடராக வெளிவந்து, தற்போது சில நாட்களுக்கு முன் நூல் வடிவம் பெற்றது. சமீபத்திய சென்னை புத்தக கண்காட்சியில், அதிக பிரதிகள் […]

Read more

கவிஞர் அறை சுஜா – கோபி

கவிஞர் அறை சுஜா – கோபி, கோபி கண்ணதாசன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 112, விலை 90ரூ. கண்ணதாசனின் மட்டுப்பட்ட மதுப்பழக்கம் பிரபலமான மனிதர்களின் சாதாரண விஷயங்கள் கூட பதிவாகி விடுகின்றன. சாதாரணமான மனிதர்களின் அபூர்வமான விஷயங்கள் கூடப் பதிவாவதில்லை. இது ஒரு சமூக முரண். இந்தச் சூழலில், கவிஞர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் சேர்ப்பது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கவிஞரின் உணவுப் பழக்கம், மட்டுப்பட்ட மதுப் பழக்கம் எனப் பல சுவாரசியமான […]

Read more

பிம்பச் சிறை, (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்)

பிம்பச் சிறை, (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்), எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை, விலை 225ரூ. “மூன்றெழுத்தில் மூச்சு இருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்” என்று பாடியவர் எம்.ஜி.ஆர். அவரது மூச்சுக்காற்று முடிந்தபிறகும் அவரைப் பற்றிய பேச்சு மட்டும் குறையவே இல்லை. இன்னும் சொன்னால், அவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். ‘எம்.ஜி.ஆருக்கு சாவு கிடையாது’ என்பது கிராமத்து ஐதீகங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. எம்.ஜி.ஆரைப் போல எத்தனையோ கதாநாயகர்களைத் தமிழ் சினிமா பார்த்துவிட்டது. […]

Read more

கிளாரிந்தா

கிளாரிந்தா, அ. மாதவையா, தமிழில் சரோஜினி பாக்கியமுத்து, அடையாளம், பக்.284, விலை ரூ.230. இந்த புதினம், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் வரலாற்று நாவலாகும். 1978-இல் முதல் பதிப்பாக கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சார்பில் இந்நாவல் வெளியிடப்பட்டது. அதன் மறுபதிப்பு இந்நூல். கி.பி.1746-ஆம் ஆண்டு தொடங்கி 1806-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், கர்நாடக நவாபின் வாரிசு மயூஸ்கான் தலைமையில் இந்தியப் படைக்கும், என்ஜினியர் பராடிஸ் தலைமையில் பிரெஞ்சுப் படைக்கும் நடந்த கடும் போருடனும், தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மரின் ஆட்சியின் பின்னணியில், “கிளாவரிந்தாபாய்’ […]

Read more
1 2 3 4 5 6 7