மனிதர்களைப் படியுங்கள்

மனிதர்களைப் படியுங்கள், சீத்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 76, விலை 85ரூ. ஒவ்வொரு மனிதனிடமும் தனித்த வரலாறு உண்டு. அந்த வரலாறுகளால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன் ஏற்படலாம். வங்கித் துறையில் பணியாற்றியவர், ஓய்வுக்கு பின் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.நிதி நிறுவனம், பங்குச் சந்தை, ஆலயப் பணி, பத்திரிகைப் பணி என துவங்கி, அவற்றில் பார்த்த ஏற்றத்தையும், இறக்கத்தையும் உள்ளது உள்ளபடி தந்துள்ளார். மொழியையும் சிக்கனமாகப் பயன்படுத்தியுள்ளார். – முகிலை ராசபாண்டியன் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும், டாக்டர் எம்.பிர்லா பவளம், மணிமேகலைப் பிரசுரம், பக். 192, விலை 160ரூ. மனிதனின் வாழ்க்கையில் கவனம் பெறும் இடத்தைக் கவன வேல் என்னும் தலைப்பில் நுணுக்கமாக ஆய்ந்துள்ள நூல். தலைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் கனமாக்காமல் எளிமையாக உணர்த்துவதற்கு இசையைத் துணைக்கு அழைத்துள்ளார். எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, இளையராஜா, எம்.எஸ். சுப்புலட்சுமி என்று பல இசைக் கலைஞர்களின் இசை லயத்தை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். மூன்று பாகங்களாகப் பகுத்து அவற்றில் பதினொரு அத்தியாயங்களை வகுத்துத் தந்துள்ளார். மருத்துவ ஆர்வலர்களை நிச்சயம் கவரும். ஆங்கிலத்தில் […]

Read more

எழுதாப் பயணம்

எழுதாப் பயணம், லக்ஷ்மி பாலகிருஷ்ணன், கனி புக்ஸ், விலை 100ரூ. இந்த விமர்சனத்தைப் படிப்பவர் யாரும், ‘அச்சோ… இப்படி ஆகிடிச்சே…’ என, ‘உச்’ கொட்ட வேண்டாம். படித்த பின், ‘தேவைப்படுவோருக்கு பேருதவியாக இதைச் செய்வோம்’ என உறுதி பூண்டு, அத்தகையவர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள் என, பகிரங்க அறிவிப்பு விடுகிறேன். இந்தப் புத்தகம், ‘ஆட்டிசம்’ பாதிப்புடன் இருக்கும் குழந்தையை வளர்ப்பது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறது. ஆசிரியர், அத்தகைய குழந்தையை அணு அணுவாய் ஆராய்ந்து வளர்த்து வருபவர். ‘கழிவிறக்கமே வேண்டாம் எனக்கு… உங்கள் […]

Read more

பிள்ளை பாடிய தந்தை தமிழ்

பிள்ளை பாடிய தந்தை தமிழ், ஐயா (எ) 95 வயது குழந்தை, வடிவரசு, விஜயா பதிப்பகம், விலை: ரூ.80 கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வீட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, […]

Read more

நானும் என் சூரியனும்

நானும் என் சூரியனும்,  சுப்ர.பாலன், வானதி பதிப்பகம்,  பக்.168, விலை ரூ.150. புலர் காலை நேரத்தில் வானம் பார்க்கும் வழக்கம் பல ஆண்டுகளாய் உள்ள நூலாசிரியரின் உரைநடைக் கவிதை நூல். 2019 மே 11- ஆம் தேதி தொடங்கி 2019 ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரையிலான பதிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன. சென்னை, வேலூர், பெங்களூரு, திருச்சி மட்டுமல்ல பாரீஸ் உள்ளிட்ட நகரங்களிலும் சூரிய தரிசனம் கண்டுள்ளார் நூலாசிரியர். எங்கேயும் ஒரே சூரியன்தான் என்றாலும் அவரது அனுபவங்கள் நாளும் நாளும் புதியன. காலை நேரத்து […]

Read more

காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்

காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள், சிங்கம்பட்டி பெ.மாடசாமி, மணிமேகலை பிரசுரம், பக். 200, விலை 125ரூ. காவல்துறை பணி ஒரு சவால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை. காவல்துறையினர் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதை பலரும் சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஒரு கொலை, திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதை நேரடியாக கேட்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அந்த வகையில், போலீஸ் அதிகாரி மாடசாமி, தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள், மற்ற போலீசார் கண்டுபிடித்த குற்றங்களை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் தந்துள்ளார். இந்த புத்தகத்தை […]

Read more

பூர்ணிமா.காம்

பூர்ணிமா.காம், பட்டிமன்றம் ராஜா, கவிதா பப்ளிகேஷன், பக்.184, விலை ரூ.130. வங்கிப் பணியாளராக இருந்த ராஜா, பட்டிமன்றப் பேச்சாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், திரைப்பட நடிகர் என்ற பன்முகத் திறன் படைத்தவர். மதுரை அருகே உள்ள சிறிய கிராமமான கீழமாத்தூரில் பிறந்து வளர்ந்தவர். தனது வாழ்க்கை அனுபவங்களை மங்கையர் மலர் இதழில் தொடராக எழுதினார். அதனுடைய நூல் வடிவம் இது. இளம் வயதில் மின்சார விளக்கு இல்லாத வீட்டில் மிகவும் கஷ்டப்பட்டு படித்து தனது முயற்சியினால் முன்னேறிய நூலாசிரியர், தனது வாழ்க்கை அனுபவங்களை மிகவும் சுவையாக […]

Read more

திரிசங்கு நரகம்

திரிசங்கு நரகம், இரா. ஜெயப்பிரகாசம், பொற்செல்வி பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. செவி வழி செய்தி எப்படி இனிமை சேர்க்கிறதோ, அதேபோல் கடல் கடந்து ஆகாய வழியில் அயல்நாடு பயணம் செய்து, மறக்க முடியாத நினைவுகளை பகிர்வது புதுமை சேர்க்கிறது. ஆங்கிலம் என் தாய்மொழி அல்ல; அது தெரிந்தும் இம்மொழி பேச மாட்டேன் எனச் சபதமிட்டு, பயணத்தின் போது உடல் நலிவுற்று, பாரிஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் நேர்ந்த மருத்துவமனை அனுபவங்களின் தொகுப்பு இந்நுால். நன்றி: தினமலர், […]

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், ஏ.ஆர்.எஸ்., ஏ.ஆர்.சினீவாசன் வெளியீடு, விலை 200ரூ. ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்துகொண்டே, சின்னத்திரை, வெள்ளித்திரை, நாடக மேடை ஆகியவற்றில் நடிகராக இருந்து பிரபலமான ஏ.ஆர்.எஸ். என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.சீனிவாசன், கலைத்துறையில் தன்னுடன் பணியாற்றியவர்கள் பற்றியும், அவர்களுடன் பழகிய 50 ஆண்டுகால அனுபவங்களையும் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, சோ, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்ற பலருடன் கொண்டு இருந்த நட்பின்போது நடைபெற்ற ருசிகரமான நிகழ்வுகளை அவர் வெளியிட்டு இருக்கும் விதமும், கலைத்துறையில் சிலர் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை அவர் தந்து […]

Read more

நெஞ்சோடு கிளத்தல்

நெஞ்சோடு கிளத்தல், பாதசாரி, தமிழினி பதிப்பகம், விலை 70ரூ. ‘மீனுக்குள் கடல்’ தொகுப்புக்குப் பிறகு நீள்மௌனத்தில் ஆழ்ந்திருந்த பாதசாரி புதிய உற்சாகத்துடன் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை என்று எந்த வகைக்குள்ளும் அடங்காத பாதசாரியின் மனநிழல் குறிப்புகள் வரிசையில் சமீபத்திய வரவு இது நன்றி: தி இந்து, 10/1/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 5