நிலத்தின் மீதான போர்

நிலத்தின் மீதான போர், தேனி மாறன், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, விலை: ரூ.60. ஹைட்ரோகார்பன் திட்டம் , எட்டு வழிச் சாலை திட்டம், மீத்தேன் திட்டம் என அரசின் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர் என இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் தங்கள் நிலங்களின் மீது கார்ப்பரேட்டுகள், அரசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் போரை மக்கள் வலுவான குரல் எழுப்பி […]

Read more

உயர்ந்தவர்கள்

உயர்ந்தவர்கள், ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள், கோபாலஸ்வாமி, ப்ளு ஓசன் புக்ஸ் பிரிசம் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், விலை 180ரூ. பாரபட்சமான உலகில், ஆராதிக்கப்படாமலும், அங்கீகாரம் கிடைக்காமலும் தங்களுக்குள் இருக்கும் தனித்தன்மையுடன் வளர்ந்து வரும் சாதனையாளர்களின் சாகசங்களை விவரிக்கிறது இந்நுால். இச்சாகசங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள துன்பங்களை எல்லாம் பார்க்கும்போது, நாம் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் துளியிலும் மிகச் சிறிது என்பதை உணர முடிகிறது. ‘பல்மனரி பைப்ரோசிஸ்’ நோயால் அவதிப்பட்டுக் கொண்டே, பிராண வாயு மூகமூடியை அணிந்து, ‘நிகழ் காலத்தில் வாழ்வதும், மகிழ்ச்சியாக […]

Read more

நிறம் மாற்றும் மண்

நிறம் மாற்றும் மண்,  இயகோகா சுப்பிரமணியன்; நமது நம்பிக்கை வெளியீடு,பக்.208; விலை ரூ.120. அமெரிக்காவுக்குப் பலமுறை சென்ற நூலாசிரியர், பயணக் கட்டுரையாக எழுதாமல், அமெரிக்காவில் போக்குவரத்து காவலரின் பணிகள், நீதித்துறையின் செயல்பாடுகள், சிறைச்சாலைகள் செயல்படும் விதம், துப்பாக்கி வைத்துக் கொள்ளும் முறை, கருப்பின மக்களின் வாழ்க்கை முறை, அங்கு வாழும் தமிழரின் பண்பாட்டுச் செயல்பாடுகள், பெண்களின் நிலை, மருத்துவத்துறை செயல்படும் விதம், அரசியல்வாதிகளின் செயல்கள் என அமெரிக்காவின் பல்வேறு முகங்களை நமக்கு விளக்கிச் சொல்கிறவிதத்தில் இந்நூலை எழுதியிருக்கிறார். அங்குள்ள நிலைமைகளையும், இங்குள்ள நிலைமைகளையும் விளக்கும் […]

Read more

மலை உச்சியில் மறுபிறப்பு

மலை உச்சியில் மறுபிறப்பு, அருனிமா சின்ஹா, தமிழில் ஆண்டாள் பிரியதர்ஷினி, விலை 140ரூ. ரெயில் பயணத்தின் போது, சங்கிலி திருடர்களுடன் போராடியதால் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு இடது காலை இழந்த அருனிமா சின்ஹா என்ற வீராங்கனை, சிகிச்சைக்குப் பிறகு ஊனமுற்ற காலுக்கு செயற்கை கால் பொருத்தி புது வாழ்வு பெற்றதோடு, அந்தக் காலுடன் இமயமலை சிகரம் ஏறி அதன் உச்சம் தொட்ட உண்மையான சாதனை வரலாறு. அவரது வார்த்தைகளால் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் இந்த […]

Read more

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்), சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இளம் பெண்களின் பாதுகாப்பு, சமூக வலைத்தளத்தின் மூலம் ஏற்படும் குற்றங்கள், வரதட்சணைக் கொடுமை, சிசுக் கொலை, பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் மட்டும் அல்லாமல் சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இதில் அடங்கி உள்ளன. நன்றி: தினத்தந்தி, 6-3-19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

எக்சைல்

எக்சைல், தஸ்லிமா நஸ்ரின், ஆங்கிலத்தில்: மஹார்க்யா சக்ரவர்த்தி பெங்க்வின், விலை: ரூ.599. சுதந்திரம் என்பதே பேச்சு ஆணாதிக்கச் சமூகத்தில் மத அடிப்படைவாதமும் சேர்ந்துகொண்டால் நவீனச் சிந்தனைகளுக்கு எத்தகைய எதிர்ப்புகள் காத்திருக்கின்றன என்பதற்கான நம் காலத்து உதாரணமே தஸ்லிமா நஸ்ரின். ஒரு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் இருந்த அவர் பெண்ணுரிமை பேசியதற்காக வங்க தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆட்சியாளர்களோ அவரது நூல் ஒன்றுக்குத் தடைவிதித்து அவரை கொல்கத்தாவிலிருந்து விரட்டினார்கள். அன்றிலிருந்து சுமார் ஏழு மாத காலம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வீட்டுக் காவலிலும் அரசின் ரகசிய இல்லங்களிலும் தங்கவைக்கப்பட்டு […]

Read more

சோத்துக் கட்சி

சோத்துக் கட்சி, கஸ்தூரி, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஏப்ரல் வரை நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் போது, நடிகை கஸ்தூரி வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இப்போது தனி புத்தகமாக வந்து இருக்கிறது. நித்தியானந்தா, அரசியலில் ரஜினி, கமல், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் நடிகை கஸ்தூரி அலசி ஆராய்ந்த அவற்றுக்குப் பொருத்தமான கதைகளுடன் சொல்லி இருப்பதால் காலம் கடந்த பின்னரும் ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/4/19. இந்தப் […]

Read more

காலனிய வளர்ச்சிக் காலம்

காலனிய வளர்ச்சிக் காலம் – புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை, எஸ்.ஜெயசீல ஸ்டீபன்; தமிழில்: ரகு அந்தோனி,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.188, விலை ரூ.175. இயற்கைச் சீற்றம், போர்கள், வாழ வழியில்லாமற் போதல், அரசின் நடவடிக்கைகள் என மனிதர்கள் புலம்பெயர நிறையக் காரணங்கள் இருக்கின்றன. பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் பாண்டிச்சேரி, காரைக்காலில் இருந்து மொரீசியசுக்கு இடம் பெயர்ந்த மக்களைப் பற்றியும், பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகளுக்கு கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய அனுப்பப்பட்ட தமிழ் ஒப்பந்த குடியேற்றத் தொழிலாளர்களைப் பற்றியும், 1829 -1891 […]

Read more

வீரப்பன்

வீரப்பன், (16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை), நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 456, விலை 360ரூ. கடந்த, 1988ம் ஆண்டு, வீரப்பன் குறித்த செய்திகள் பத்திரிகையில் வெளிவரத் துவங்கின. 1991ல் கர்நாடக மாநில, டி.எப்.ஓ.,வை கொடூரமாக கொலை செய்தது; 1993ல் வைத்த கண்ணிவெடியில், தமிழக கர்நாடக அதிரடி படை வீரர்கள், 22 பேரை பலியாக செய்தது உள்ளிட்ட சம்பவங்கள், இந்தியாவையே அதிர வைத்தன. யார் இந்த வீரப்பன் என்பதை அறியும் ஆர்வம், மக்களிடம் அதிகரித்தது. இங்ஙனம் ஆரம்பிக்கிறது, […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 360ரூ. தமிழகம், கர்நாடக அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றொரு முகத்தை தெளிவாகக் காட்டும் நூலாக இது வெளியாகி உள்ளது. ‘ காட்டில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் நடத்திய ஆட்கள் கடத்தல், தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை கொன்றது ஆகிய பரபரப்பான சம்பவங்கள், நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று வீரப்பனை முதல் முறையாக சந்தித்து எடுத்த பேட்டிகள், புகைப்படங்கள், வீரப்பன் கூறிய கதைகள் ஆகிய அனைத்தும் நேரடித் […]

Read more
1 2 3 15