கிராமத்து தெருக்களின் வழியே

View Post கிராமத்து தெருக்களின் வழியே…, ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.350. தமிழக கிராமிய வாழ்வியல் முறையை விவரிக்கும் நுால். முற்றிலும் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. எளிய நடையில் காட்சிப் பூர்வமாக உள்ளது. மதுரை நகர் அருகே, 60 முதல், 80 வரையான காலத்தில், ஒரு கிராமத்தின் இயக்கம் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அன்றாட வாழ்வியல் மிக இயல்பாக வரையப்பட்டு உள்ளது.புத்தகத்திலிருந்து… எழுபதுகளின் இறுதியில், மலையாளிகள் சிலர் எங்கள் ஊருக்கு வந்தனர். மந்தையில் கொட்டகை போட்டு, பல சரக்கு, […]

Read more

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 4

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 4, பெ.சிவசுப்ரமணியம், சிவா மீடியா வெளியீடு, விலை 500ரூ. சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய பரபரப்பான தகவல்களைக் கொண்ட நூல்களின் 4- வது பாகமாக இது வெளியாகி இருக்கிறது. இந்த புத்தகத்திலும் வீரப்பன் தொடர்பான திடுக்கிடும் செய்திகள் நிறைந்து காணப்படுகின்றன. கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலைக்குப் பின் நடந்த நிகழ்வுகளும், இறுதியில் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதும் விவரிக்கப்பட்டு இருக்கிறது. வீரப்பன் ரூ.13 கோடி வைத்து இருந்தார் என்பதும் அவரால் கடத்தப்பட்ட நாகப்பா எவ்வாறு கொலையுண்டார் என்பதும் […]

Read more

சவுதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும் பிழைப்பும்

சவுதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும் பிழைப்பும், விஜயலெட்சுமி மாசிலாமணி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.60 சவுதி அரேபியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய புத்தகம். இந்திய – சவுதி அரேபிய உறவின் வரலாறு, அங்கு வாழும் இந்தியர்கள் பற்றிய புள்ளி விபரம் தனி அத்தியாயமாக தொகுக்கப்பட்டுள்ளது. மக்களின் உழைப்பு பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. சவுதியில் தமிழ்ப் பெண்களின் நிலை பற்றி தனியாக ஒரு கட்டுரை உள்ளது. மொத்தத்தில் கடந்த காலத்தில் சவுதியில் வாழ்ந்த தமிழர்கள் பற்றிய வரலாறாக உள்ளது இந்த நுால். நன்றி: தினமலர், 28.3.21 இந்தப் […]

Read more

வீரப்பன் மரணம் யாரால் எப்படி?

வீரப்பன் மரணம் யாரால் எப்படி?, நக்கீரன் கோபால், நக்கீரன் வெளியீடு, பக். 312, விலை 300ரூ. சந்தன கடத்தல் வீரப்பன் மரணம் குறித்த புத்தகத்தின் இரண்டாம் பாகம். வீரப்பனை சந்தித்து நக்கீரன் குழுவினர் சேகரித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பிறன்மனை நோக்கா ஒழுக்க சீலன், பெண்களை மதிப்பவன் என்று நூல் முகப்பில் சித்தரிக்கப்படும் வீரப்பன், நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகளில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடிப் படையின் தேடலில் ராஜதந்திரம் தெரிந்தாலும், மலைவாழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் பதற வைக்கின்றன. அது […]

Read more

உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும்

உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும், பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. கொரோனா என்ற தீநுண்மி நோயால் உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். ஆண்டு தோறும், 30 நாட்கள் கட்டாய ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற பரிந்துரையுடன் முடித்துள்ளார். கொரோனா அச்சம் ஏற்பட்டதில் இருந்து, நடந்த எல்லா மாற்றங்களையும் தொகுத்துள்ளார். படங்களையும் இணைத்துள்ளார். மனிதாபிமானம் மற்றும் இயற்கை ஆர்வம் சார்ந்த கண்ணோட்டம் புத்தகம் முழுதும் உள்ளது. ஆய்வு பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. தொற்று நோய், உலகில் ஏற்படுத்திய மாற்றங்களை […]

Read more

ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்

ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம், சிங்கம்பட்டி பெ.மாடசாமி, மணிமேகலை பிரசுரம், பக். 196, விலை 170ரூ. அரசு பணி அனுபவம் சுவாரசியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பணி காலத்தில் நடந்த வழக்குகள் குறித்து, 21 தலைப்புகளில் விளக்குகிறார். ஒரு சம்பவம்: இரவு ரோந்து போலீசார் எதிரே வர, அவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்க, பங்களா வீட்டு சுவர் ஏறி குதித்து மறைகிறார் ஒரு திருடன். அது, நடிகர் ரஜினிகாந்த் வீடு என தெரியாமல் புகுந்து நகை, பணம் திருடி செல்கிறார். […]

Read more

நிலத்தின் மீதான போர்

நிலத்தின் மீதான போர், தேனி மாறன், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, விலை: ரூ.60. ஹைட்ரோகார்பன் திட்டம் , எட்டு வழிச் சாலை திட்டம், மீத்தேன் திட்டம் என அரசின் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர் என இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் தங்கள் நிலங்களின் மீது கார்ப்பரேட்டுகள், அரசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் போரை மக்கள் வலுவான குரல் எழுப்பி […]

Read more

உயர்ந்தவர்கள்

உயர்ந்தவர்கள், ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள், கோபாலஸ்வாமி, ப்ளு ஓசன் புக்ஸ் பிரிசம் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், விலை 180ரூ. பாரபட்சமான உலகில், ஆராதிக்கப்படாமலும், அங்கீகாரம் கிடைக்காமலும் தங்களுக்குள் இருக்கும் தனித்தன்மையுடன் வளர்ந்து வரும் சாதனையாளர்களின் சாகசங்களை விவரிக்கிறது இந்நுால். இச்சாகசங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள துன்பங்களை எல்லாம் பார்க்கும்போது, நாம் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் துளியிலும் மிகச் சிறிது என்பதை உணர முடிகிறது. ‘பல்மனரி பைப்ரோசிஸ்’ நோயால் அவதிப்பட்டுக் கொண்டே, பிராண வாயு மூகமூடியை அணிந்து, ‘நிகழ் காலத்தில் வாழ்வதும், மகிழ்ச்சியாக […]

Read more

நிறம் மாற்றும் மண்

நிறம் மாற்றும் மண்,  இயகோகா சுப்பிரமணியன்; நமது நம்பிக்கை வெளியீடு,பக்.208; விலை ரூ.120. அமெரிக்காவுக்குப் பலமுறை சென்ற நூலாசிரியர், பயணக் கட்டுரையாக எழுதாமல், அமெரிக்காவில் போக்குவரத்து காவலரின் பணிகள், நீதித்துறையின் செயல்பாடுகள், சிறைச்சாலைகள் செயல்படும் விதம், துப்பாக்கி வைத்துக் கொள்ளும் முறை, கருப்பின மக்களின் வாழ்க்கை முறை, அங்கு வாழும் தமிழரின் பண்பாட்டுச் செயல்பாடுகள், பெண்களின் நிலை, மருத்துவத்துறை செயல்படும் விதம், அரசியல்வாதிகளின் செயல்கள் என அமெரிக்காவின் பல்வேறு முகங்களை நமக்கு விளக்கிச் சொல்கிறவிதத்தில் இந்நூலை எழுதியிருக்கிறார். அங்குள்ள நிலைமைகளையும், இங்குள்ள நிலைமைகளையும் விளக்கும் […]

Read more

மலை உச்சியில் மறுபிறப்பு

மலை உச்சியில் மறுபிறப்பு, அருனிமா சின்ஹா, தமிழில் ஆண்டாள் பிரியதர்ஷினி, விலை 140ரூ. ரெயில் பயணத்தின் போது, சங்கிலி திருடர்களுடன் போராடியதால் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு இடது காலை இழந்த அருனிமா சின்ஹா என்ற வீராங்கனை, சிகிச்சைக்குப் பிறகு ஊனமுற்ற காலுக்கு செயற்கை கால் பொருத்தி புது வாழ்வு பெற்றதோடு, அந்தக் காலுடன் இமயமலை சிகரம் ஏறி அதன் உச்சம் தொட்ட உண்மையான சாதனை வரலாறு. அவரது வார்த்தைகளால் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் இந்த […]

Read more
1 2 3 4 17