தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள். சண்முகானந்தம் செயக்குமார்.  எதிர் வெளியீடு. பறவைகளுக்கும் தமிழ் மண்ணுக்குமான உறவு நெடியது, இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதும்கூட. இந்த உறவை சங்கப் பாடல்கள் தொடங்கி தற்போதுவரை காணலாம். தமிழகத்தில் பறவைகளைப் பாதுகாக்க பல்வேறு சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.. அவற்றைப் பற்றியும் அங்கு வரும் பறவைகள், அவை சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் விரிவாகவும் படங்களுடனும் உருவாகியிருக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

தாய்

தாய், மாக்சிம் கார்க்கி, தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 350ரூ. இருநுாறு முறைக்கு மேல் மறு பதிப்பும், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுமான மாக்சீம் கார்க்கியின், ‘தாய்’ உலகின் மிகச் சிறந்த செல்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ரஷ்யக் கலைஞன் கார்க்கி. ரஷ்ய இலக்கியத்தின் ‘பொற்கால’த்தின் கடைசிப் பிரதிநிதி கார்க்கி. ‘அலக்வி மாக்ஸிமோவிச் பெஷ்கோவ்’ என்னும் பெயர் பூண்ட கார்க்கி பிறந்தது, 1869ல்; இறந்தது, 1936ல். கார்க்கியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1892 முதல், […]

Read more

பாழ்நிலப் பறவை

பாழ்நிலப் பறவை, லீலாகுமாரி அம்மா, இரா.பாவேந்தன், கோ.நாகராஜ், சந்தியா பதிப்பகம்,  பக்.120; ரூ.115. கேரளாவின் காசர் கோடு மாவட்டத்தில் முந்திரி விளைச்சலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய பூச்சிகளை ஒழிக்க ஹெலிகாப்டரிலிருந்து எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கப்பட்டது. அது காற்றில் பரவி, ஆடு, மாடுகளை, மனிதர்களைக் கொன்றது. சிறுவர், சிறுமிகளை முடமாக்கியது. இது மாத்ரு பூமி நாளிதழின் புகைப்படக் கலைஞர் மதுவின் முயற்சியால் பரவலான மக்களுக்குத் தெரிய வந்தது. அரசுப் பணி செய்து கொண்டிருந்த, ஒரு குடும்பத் தலைவியான லீலாகுமாரி அம்மாவுக்கும் தெரிந்தது. அவர் மக்களைத் […]

Read more

கானலால் நிறையும் காவிரி

கானலால் நிறையும் காவிரி, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக்.104, விலை ரூ.120. காவிரி பிரச்னை குறித்து உணர்வுப்பூர்வமான கொந்தளிப்புகளும், போராட்டங்களும் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் அப்பிரச்னை பற்றி மிகவும் உயிரோட்டமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றத்தால் 2007 இல் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி., தண்ணீரில் இருந்து 14.75 டி.எம்.சி., தண்ணீரைக் குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு ஒதுக்கி, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு உத்தரவிட்டது. தமிழகத்தின் நிலத்தடி நீரை கணக்கில் […]

Read more

பொய் வழக்கும் போராட்டமும்

பொய் வழக்கும் போராட்டமும், பெ. சிவசுப்பிரமணியன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 395ரூ. சந்தன கடத்தல் வீரப்பன் வழக்கு தொடர்பாக தமிழக கர்நாடக அதிரடிப்படையின் அடக்குமுறைகளை எதிர்கொண்ட நக்கீரன் செய்தியாளரும், நூலாசிரியருமான பெ.சிவசுப்பிரமணியன் தான் சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட சிறைக்குறிப்புகள் அடங்கிய நூல். வண்ணபுகைப்படங்களுடன் 51 தலைப்புகளில் பல்வேறு தகவல்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026649.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தினத்தந்தி, 21/2/2018.

Read more

பெண் கல்விப் போராளி மலாலா

பெண் கல்விப் போராளி மலாலா, ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.208, விலை ரூ.180. மலாலா யூசப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரைச் சேர்ந்தவர். பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று தாலிபான் விதித்த தடையை மீறி பள்ளிக்குச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்யும் கொடூரச் செயல்களை குல்மகை என்ற புனைபெயரில் பிபிசியின் உருது வலைப்பதிவில் துணிச்சலாக எழுதினார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதினார். பள்ளிகளை தாலிபான்கள் தடை செய்த போதிலும், பள்ளி மாணவிகளை நச்சுப்புகையால் தாலிபான்கள் கொல்ல […]

Read more

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு, எஸ்.ஜெகன்னாதன், எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களை மகிழ்விக்கும் கால்நடைகளை போற்ற வேண்டும் என்று விவசாயப் பெருமக்களால் கொண்டாடப்படுவதுதான் மாட்டுப் பொங்கலும், அதையொட்டி கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றில் கால்நடைகளை வைத்து கொண்டாடும் விழாக்கள் குறித்து இந்த நூலில் எழுத்தாளர் எஸ்.ஜெகன்னாதன் சுவையாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/1/2018.

Read more

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம்

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம், முதல் தொகுதி. இராம் பொன்னு, சர்வோதய இலக்கியப் பண்ணை, பக்.224, விலை ரூ.150. மகாத்மா காந்தியின் சிந்தனைகள் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூறும் நூல். கான் அப்துல் கஃபார் கான், மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, ஆங் சான் சூ கி, லான்சா டெல் வாஸ்டோ (சாந்திதாஸ்), சீசர் எஸ்ட்ரடா சாவெஸ், லெக் வலெசா ஆகியோர் மக்களுக்காக உலக அளவில் போராடியவர்கள். அவர்கள் பல்வேறு போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலும் […]

Read more

சந்தோசம்

சந்தோசம், மு.ஞா.செ.இன்பா, பந்தள பதிப்பகம், விலை 299ரூ. கலை பேசும் சந்தோசம் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பாலும், நேர்மையாலும் வெற்றியின் சிகரத்தைத் தொட்டவர்கள் வி.ஜி.பன்னீர்தாஸ் சகோதரர்கள். அண்ணன் பன்னீர்தாஸ் எதிர்பாராதவிதமாக இளமையிலேயே மறைந்து விட, சோதனைகளைத் தாங்கி அந்த நிறுவனத்தை கோபுரம் அளவுக்கு உயரச் செய்தவர் வி.ஜி.சந்தோஷம். எதிர்நீச்சல் போட்டு முன்னேறிய சந்தோஷத்தின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா. ஏராளமான படங்களுடன், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகம் அமைந்துள்ளது. வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் அவசியம் படிக்க […]

Read more

நாட்டை உலுக்கிய ஊழல்கள்

நாட்டை உலுக்கிய ஊழல்கள், குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. சுதந்திரத்துக்கு பின், பல ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலிய ஊழல்கள் பல. 1952ம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் தேர்தலுக்கு பின், ஒவ்வொரு ஆட்சியிலும், குறைந்தது ஒரு ஊழலாவது பெரிய அளவில் பேசப்பட்டுள்ளன. போபர்ஸ் பீரங்கி, கால்நடை தீவனம், ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் என அடுக்கிக் கொண்டே போகலாம். நாட்டையே உலுக்கிய முக்கியமான ஊழல்களின் விபரத்தை எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் அளவில் ஆசிரியர் தந்துள்ளார். ஊழலுக்கு ஆட்சியும் அதிகாரமுமே […]

Read more
1 2 3 4 5 6 17