விடை தெரியாத மர்மங்கள்

விடை தெரியாத மர்மங்கள், குன்றில் குமார், குறிஞ்சி, விலை 110ரூ. இப்படிக்கூட நடக்குமா? இதையெல்லாம் யார் செய்கிறார்கள்? இவையெல்லாம் உண்மையா? வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? இந்த மாதிரி விடைதெரியாத ஆச்சரியமூட்டும், திகிலான, நம்பவே முடியாத அதேசமயம் நிஜமாகவே நடந்த நிகழ்சிகள் இந்த உலகில் எத்தனை எத்தனையோ உண்டு. அவற்றில் சில அரிய நிகழ்வுகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

நெஞ்சில் உரம் நேர்மைத் திறம் வி.ஆர்.லட்சுமிநாராயணன் ஐ.பி.எஸ்.

நெஞ்சில் உரம் நேர்மைத் திறம் வி.ஆர்.லட்சுமிநாராயணன் ஐ.பி.எஸ்.,  ப.திருமலை, சோக்கோ அறக்கட்டளை, பக்.272, விலை ரூ.200. புகழ்பெற்ற வி.ஆர்.கிருஷ்ணய்யரின் தம்பியான வி.ஆர்.லட்சுமிநாராயணன் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இந்நூல் அவருடைய வாழ்க்கை வரலாறு. பணியின்போது பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட போதும், மனிதாபிமானத்தை விட்டுக் கொடுக்காமல், அவர் எடுத்த முடிவுகள் வியக்க வைக்கின்றன. ‘1954 இல் மதுரை – சமயநல்லூர் அருகே வழிப்பறிக் கொள்ளையர்களை மக்கள் தாக்க, ஒரு கொள்ளையர் கொல்லப்படுகிறார். அப்போது அது குறித்து அறிக்கை அளித்த வி.ஆர்.லட்சுமிநாராயணன், தற்காப்புக்காக கொள்ளைக்காரனைக் […]

Read more

ஆனைமலைக் காடர்கள்

ஆனைமலைக் காடர்கள், முனைவர் ஜே.ஆர்.லட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 164, விலை 300ரூ. உலகில் மிகவும் தொன்மையானவர்கள் என்று கருதப்படும் ஆதிகுடியினர் இன்றும் காடுகளில் மலைவாழ் மக்களாகவே வசித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆனை மலையில் வாழும் காடர்கள் இன்றைய நாகரிகம் வளர்ந்த நிலையிலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்கின்றனர். அவர்களின் வரலாறும் தொன்மையும் வாய்மொழிச் சான்றுகளாகவே உள்ளன. சுதந்திர இந்தியாவில், இன்னும் சுதந்திரம் அடையாதவர்களாக வாழும் காடர்களின் வாழ்க்கையை களஆய்வு செய்து உணர்வுபூர்வமாகப் படைக்கப்பட்ட நுால் இது. ஜவ்வாது […]

Read more

அழிவின் விளிம்பில் அந்தமான்

அழிவின் விளிம்பில் அந்தமான், பேரா.பொ.முத்துக்குமரன், முனைவர் ம.சாலமன் பெர்னாட்ஷா, என்.சி.பி.ஹெச்., விலை 370ரூ. இயற்கையின் தாய்மடியாக திகழ்ந்த அந்தமான் தீவு பற்றிய முழுமையான ஆவணம் இந்நூல். இயற்கை வளமிக்க ஒரு தீவு, பேராசையும் சுயநலமும் மட்டுமே கொண்ட மனிதர்களின் ஆக்கிரமிப்பால் இன்றைக்கு சிதைந்துபோன அவலத்தை தக்க வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. வரலாற்றுச் சுவடுகளில் சோழர்களும் சைலேந்திர அரசர்களும் பலமுறை கடந்து சென்றபோதெல்லாம் சிதைவுறாத இந்த பூமி, ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் எப்படியெல்லாம் சூறையாடப்பட்டது என்பதை தெளிவாக இந்த நூல் எடுத்துரைத்துள்ளது. படங்கள், வரைபடங்கள் யாவும் […]

Read more

நெசவு

நெசவு, சுப்ரபாரதிமணியன், சிற்பி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களின் மானத்தைக் காக்கும் துணியை நெய்திடும் நெசவாளர்கள், தங்கள் தன்மானத்தைத் தக்கவைத்துக் கொள்ள நடத்திடும் போராட்டமான வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் கதைகள், சில கட்டுரைகள். நெய்யும் ஆடையின் தரம் நாளுக்குநாள் உயர்வதும், நெய்பவன் வாழ்வாதாரம் தாழ்வதும் அருமையாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. இந்தியாவில் கொள்ளையர்கள் தடம் பதித்த காலக்கட்டத்தில், “தக்கர்” என்ற கொள்ளைக்காரர்கள் மத்திய இந்தியாவில் அட்டூழியங்கள் செய்து வந்தார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்தார்கள். அவர்களுடைய செல்வங்களை கொள்ளையடித்தார்கள். பிற்காலத்தில், இவர்களை வெள்ளையர்கள் அடக்கினார்கள். 3689 தக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 466பேர் தூக்கில் போடப்பட்டனர். 1504பேர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு தக்கர்கள் பற்றிய அபூர்வ விஷயங்களை, இரா. வரதராசன் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் . ஒரு நாவலுக்கு […]

Read more

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர்கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, விலை 200ரூ. பயங்கரவாதி யார்? ‘குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி கைது’ என்று கறுப்புத்துணியால் மூடப்பட்டு போலீஸாரால் இழுத்துச் செல்லப்படும் நபர்களைப் பார்க்கும்போது ‘இரக்கமில்லா பாவி’ என்றெல்லாம் கோபப்படுவோம். ஆனால் அப்படி இழுத்துச் செல்லப்படுபவர்களில் நிரபராதிகளும் உண்டு என்பதையும், போலீஸாரோ, உளவுத் துறையினரோ நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இதுபோன்ற வழக்குகளில் சிக்க வைக்க முடியும் என்பதையும் நாம் அறிந்திருப்பதேயில்லை. அப்படி சிக்கவைக்கப்பட்ட டெல்லி இளைஞர் மொகமது ஆமிர்கானின் வலி நிறைந்த […]

Read more

ஆனைமலைக் காடர்கள்

ஆனைமலைக் காடர்கள், முனைவர் ஜே.ஆர். லட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், விலை 300ரூ. ஆனைமலைக் காடர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் குடில்களின் அமைப்பு, உணவுப் பழக்கங்கள், திருமணம் செய்யும் முறை, திருவிழா பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்த நூலில் முனைவர் ஜே.ஆர். லட்சுமி பதிவு செய்துள்ளார். ‘இவர்களுக்கு கல்வியறிவு, இடஒதுக்கீடு பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்’ என்ற வேதனையையும் அவர் இதில் வெளிப்படுத்தி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

ஹாஷிம்புரா மே 22

ஹாஷிம்புரா மே 22, விபூதி நாராயண் ராய், இலக்கியச்சோலை, பக். 200, விலை 120ரூ. கடந்த, 1987, மே மாதம், 22 இரவில், கோரத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள், படுகொலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்கள் என, பலரையும் சந்தித்து இந்நூலை வடித்துள்ளார் ஆசிரியர். இந்தியாவில், உத்தர பிரதேசத்தில் மறைக்கப்பட்ட மாபெரும் சிறைப் படுகொலை சம்பவத்தைச் சொல்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more

நெய்வேலியின் நிலக்கரிச் சுரங்கம்

நெய்வேலியின் நிலக்கரிச் சுரங்கம், சோமலெ, முல்லை பதிப்பகம், விலை 90ரூ. நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும், சுரங்கம் தோண்டப்பட்டதும் வியப்பான வரலாறு. அதை, சுவைபட எழுதியுள்ளார் சோமலெ. நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more
1 3 4 5 6 7 17