ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்)
ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்), குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 176, விலை 165ரூ. தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது ஜல்லிக்கட்டு. சங்க காலம் முதல் வழி வழியாக ‘ஏர் தழுவல்’ என்னும் மாட்டை அடக்கும் போட்டி தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது காளையோடு மல்யுத்தம் என்பதாகப் பலர் பார்க்கின்றனர். அது தவறு. மாறாக, காளையோடு ஓர் உற்சாக விளையாட்டு என்பதே நிஜம். உழவுத் தொழிலுக்கு அடிப்படை காளை மாடுகள். அத்தகைய காளைகளைப் போற்றி அவற்றோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள் தான் ஜல்லிக்கட்டு. […]
Read more