திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்,  பெரும்பற்றப்புலியூர் நம்பி, உரையாசிரியர்: மு. அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.808, விலை ரூ.990.  “பாண்டிப் பதியே பழம்பதி’ என்று கூறுவர். பாண்டிய நாட்டின் தலைநகராம் மதுரையில் திருவாதவூரருக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திக்காட்டினார் சொக்கநாதப் பெருமான். இறைவனின் திருவிளையாடல்களை ஓரிரு புலவர்கள் அவ்வப்போது பாடியிருந்தாலும் அவற்றை நிரல்படத் தொகுத்தளித்தவர் பெரும்பற்றப்புலியூர் நம்பியே. உ.வே.சா.இந்நூலை இருமுறை பதிப்பித்துள்ளார். அப்பதிப்புகளில் அவர் பொழிப்புரை தரவில்லையாயினும் அரிய செய்திகளைக் குறிப்புரையாகத் தந்துள்ளார். அக்குறிப்புரைகளை ஆதாரமாகக் கொண்டு இந்நூலாசிரியர் பொழிப்புரை வழங்கியுள்ளார். இந்நூல் மதுரையைப் […]

Read more

தமிழ் தமிழ் அகராதி

தமிழ் தமிழ் அகராதி, தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொற்களுக்கும் உரிய பொருள் என்ன என்பதைக் கூறும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கும் தமிழைக் கற்க விரும்புகிறவர்களுக்கும் இந்த அகராதி சிறந்த கையேடாகத் திகழும். நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருவாசகம்

திருவாசகம், மாணிக்கவாசகர், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100 மாணிக்கவாசகர் சுவாமி அருளிய திருவாசகம் மூல நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கவரும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது. கெட்டி அட்டையில், சிறப்பாக, பைண்ட் செய்யப்பட்டுள்ளது. தினமும் எடுத்து வாசிக்க ஏற்ற வகையில் உள்ளது. நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்றது. திருவாசகத்தில் உருகும் பக்தர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பெட்டகம். நன்றி: தினமலர், 10/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

தொல்காப்பியம் சொல்லதிகாரம், ச.சுப்புரெத்தினம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100 தற்கால உரைகளின் வரிசையில் வெளிவந்துள்ளது. தொல்காப்பிய சொல்லதிகாரத்தில் அனைத்துக் கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் எனப் பகுத்து, ஒவ்வொரு இயலுக்கும் எளிய முகப்புரை வழங்கி, நுாற்பாக்களுக்குத் துணைத் தலைப்புகளோடு உரையும் விளக்கமும் வழங்கப்பட்டுள்ளன. திணை, பால், இடம், எண், புறநடை சார்ந்த தமிழ்ச் சொல்லாக்கம், வேற்றுமை வகைகள், பொருள் மற்றும் உருபு மயக்கங்களை உணர்த்தும் வேற்றுமை மயக்கங்கள், விளிமரபு, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் […]

Read more

திருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்

திருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும், பதிப்பக வெளியீடு, அருணா பப்ளிகேஷன்ஸ்,விலைரூ.220. திருமூலர் அருளிய திருமந்திரம் நுால் மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ளது. பத்தாம் திருமுறையாகப் போற்றப்படும் இந்த நுாலின் மூல வடிவம் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில், வடிவமான எழுத்துக்களில் உரிய துணைத் தலைப்புகளுடன் அமைந்துள்ளது. எளிதில் பழுதாகாத வகையில் கெட்டி அட்டை அமைப்புடன், புத்தகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாக்கப்பட வேண்டிய நுால். நன்றி: தினமலர்,20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

தமிழ் – தமிழ் அகராதி

தமிழ் – தமிழ் அகராதி, தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.250 சொற்களின் பொருளை உணர அகராதி துணை செய்கிறது. அரிய தமிழ் சொற்களுக்கு பொருள் கூறும் வகையில் இந்த அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது. அகர வரிசைப்படி சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிவா என்ற சொல்லுக்கு, கடுக்காய், கீழ்க்காய்நெல்லி, நெல்லி, பங்கம்பாலை, வன்னி என்ற சொற்கள் பொருளாகக் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 31/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

மனம் கவரும் மகாபாரத கதைகள்

மனம் கவரும் மகாபாரத கதைகள், கமலா கந்தசாமி, சிந்தாசேகர், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 154, விலை 50ரூ. இந்தியாவுக்கும் புகழ் சேர்க்கும் இதிகாசம் மகாபாரதம். அது எழுதப்பட்ட விதம், அதில் உள்ள கதைகள், பாத்திரங்கள் சார்ந்த விளக்க கதைகள் என, 28 தலைப்புகளில் எழுதப்பட்டு உள்ளது. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக தயாரிக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினமலர், 15/3/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம்

திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், பக் 104, விலை 40ரூ. திரைப்படப் பாடலுக்கு என, நிறைய ரசிகர்கள் உண்டு. எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், காலத்தை வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாடல்கள் சிலவே. சுய முன்னேற்ற சிந்தனை தரும் பாடல்கள், கருத்தாழம் மிக்க வரிகள் கொண்ட தத்துவப் பாடல்கள் வழிகாட்டியாக இருந்து வருகின்றன. அத்தகைய பாடல்களை, 45 அத்தியாயங்களாக தொகுத்து, உட்கருத்தை விளக்கி, அதன் சுவையை அறிய வைக்கிறார். நன்றி: தினமலர், 13/9/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

அல்லல் போக்கும் மகாபைரவர்

அல்லல் போக்கும் மகாபைரவர், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 25ரூ., ஸ்ரீ பிரம்ம வைவர்த்த புராணம், விலை 40ரூ., ஸ்ரீ வாமன புராணம், விலை 50ரூ, பவிஷ்ய புராணம், விலை 40ரூ. புராணங்கள், தெய்வீகம் தொடர்பான இந்த நூல்கள் பல விஷயங்களை உள்ளடக்கியன. பவிஷ்ய புராணத்தில் சூரியன் தோன்றியது உட்பட பல கருத்துக்கள் உள்ளன. ஸ்ரீ பிரம்ம வைவர்த்த புராணத்தில் நாரதர் கதையைக் காணலாம். மகா பைரவர் வழிபாட்டு முறைகளில், சொர்ண பைரவர் பற்றி பல தகவல்கள் சிறப்பாக உள்ளன. ஆன்மிகத்தில் தோய்ந்தவர்களுக்கு உரிய […]

Read more

விடிவதற்கு சற்று முன்னே…

விடிவதற்கு சற்று முன்னே…, ரஷ்யமூலம்: ஐவான்துர்கனேவ், தமிழில் ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.200. பொதுவாக ரஷ்ய இலக்கியப் படைப்புகள் தனிமனித உணர்வுகளை தேசத்தின் நலனோடு இணைப்பதாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. படைப்பாளி உருவாக்கிய பாத்திரங்களின் உணர்வுகளோடு அதை படிக்கும் வாசகன் ஒன்றிவிடும் வகையில் ரஷ்ய படைப்புகள் இருப்பதே அவற்றின் வெற்றிக்கான காரணமாகக் கூட கூறலாம். அந்தவகையில் விடிவதற்கு சற்று முன்னே என்ற இந்த நாவல் ரஷ்ய புரட்சியை மையமாக வைத்து காதல் உணர்வோடு பின்னப்பட்ட படைப்பாகும். தேச நலன் கொண்ட தலைமறைவு வாழ்க்கை வாழும் […]

Read more
1 2 3 5