பாம்பன் சுவாமிகள் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள்

பாம்பன் சுவாமிகள் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள், முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, திருவேரகம், 117, 86வது தெரு, முதல் அவென்யூ, (வடக்கு) அசோக் நகர், சென்னை 600083, பக்கங்கள் 134. முருகனையே முழுதும் வாழ்வில் பற்றாக்கொண்டு 6666 பாடல்கள் பாடி அருளியவர் பாம்பன் சுவாமிகள். இவரது அருட்பாடல்களில், மனிதனை வாழ்வில் உயர்த்தும் பல்வேறு சிந்தனைகள் பரவிக் கிடக்கின்றன. குருவி, நெல்மணிகளை தேடித்திரட்டுவதுபோல் இந்நூல், ஆசிரியர் சிந்தனை முத்துக்களைத் தேடித் தொகுத்துள்ளார். திருக்குறள், திருமந்திரம், தேவாரம், திருப்புகழ், தாயுமானவர் பாடல்களோடு பாம்பனார் பாடல்களை இணைத்து நவமணி […]

Read more

எண்ணங்களின் அதிசய சக்தி

எண்ணங்களின் அதிசய சக்தி , ஆரிசன் ஸ்வெட் மார்டன், தமிழில்: விமலநாத், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்கம்: 314, ரூ. 160. வாழ்வில் நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்பதற்கும் , எதிர்காலத்தில் உயரங்களை எட்ட இருக்கிறோமா அல்லது பாதாளத்தில் விழ இருக்கிறோமா என்பதையும் நமது எண்ணங்களே நிர்ணயிக்கின்றன என்பதைத் தெளிவாக விளக்கும் நூல் இது. நியாயமான கனவுகள் படைப்புச் சக்தி உடையவை, மனதில் ஏற்படும் ஒவ்வொரு ‘செல்’லும் லாபமடைகிறது அல்லது துன்பமடைகிறது. நம் யோசிப்பதும், நேசிப்பதுமே நம்மைக் கட்டமைக்கிறது என்பன […]

Read more

வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்

வால்மார்ட்டை விரட்டி அடிப்போம், ஆல் நார்மன், தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 75ரூ. ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-811-1.html வால்மார்ட் எப்படி உலகளாவியதோ அதேபோல வால்மார்ட்டிற்கு எதிரான யுத்தமும் உலகளாவியது. வால்மார்ட் இந்தியாவிற்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று யூகங்கள் அடிப்படையில் இங்கே விவாதங்களும் அவற்றை மறுக்கும் கற்பனை நம்பிக்கைகளும் அளிக்கப்படும் சூழலில் இந்த நூல் அமெரிக்காவில் வால்மார்ட்டிற்கு எதிராக நடந்த மாபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கிறது. ஆல் நார்மன் என்பவர் வால்மார்ட்டுக்கு […]

Read more

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள்

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள், அஜன் பிராம், பக். 304, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ. 150 இந்நூலின் ஆசிரியர் தனது பிரசங்கத்தின்போது கூறிய கதைகளின் தொகுப்புதான் இந்நூல். ஒவ்வொரு கதையும் நமது நிஜவாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இக்கட்டான நேரத்தில் எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலை வந்தால் பேசாமல் அமைதியாக இருந்துவிடு. இதனால் உயிரையே காக்கும் அறிவுத் திறம் உனக்கு ஏற்படும் என்று ஆதாரத்துடன் ஒரு கதையில் விளக்குகிறார் அஜன் பிராம். நமது இளமைக் காலத்திலேயே அதிகம் பேசாமல் […]

Read more

ஆச்சி

ஆச்சி, கவிஞர் கண்ணதாசன், பக். 207, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 17. விலை ரூ. 100 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-587-2.html நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வழக்காறுகள், மரபுகள், மாண்புகள், சமூக யதார்த்தம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்த உரைநடைச் சித்திரம்தான் கவியரசு கண்ணதாசனின் ஆச்சி நாவல். இந்நாவலில் பயின்று வருகிற சீதை ஆச்சி, தண்ணீர்மலையான், பெரியகருப்பன், ராமநாதன், தெய்வானை, அன்னபூரணி, மெய்யம்மை ஆகிய ஒவ்வொரு கதாபாத்திரமும் செட்டியார் மரபின் அழுத்தமான வார்ப்புகள். ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை […]

Read more
1 13 14 15