மன்னிப்பின் மகத்துவம்

மன்னிப்பின் மகத்துவம், தலாய்லாமா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக். 256, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-606-7.html தலாய் லாமா அவர்களின் தி விஸ்டம் ஆப் ஃபார்கிவ் நெஸ் என்ற மூல ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்த நூல். திபெத் நாட்டு மதத் தலைவரும், அரசுத் தலைவருமான அவர் சீனா, திபெத்தை ஆக்கிரமித்து கொண்டபோது அங்கிருந்து தப்பி, இந்தியாவில் தஞ்சம் புகுந்து திபெத் சுதந்திரம் பெற அகிம்சா வழியில் போராடி […]

Read more

பெண்மை

பெண்மை, (ஸ்திரீ தர்மம் பற்றி ஸ்ரீ மகா பெரியவா கூறிய கருத்துக்கள்)தொகுப்பு-ரா.கணபதி, கிரி டிரேடிங் ஏஜன்சி, 3 சன்னிதித் தெரு, மயிலை, சென்னை 600004, விலை 50ரூ. உலகம் தர்மத்தில் நிலைக்க, ஸ்தீரிகள் தங்கள் தர்மத்தில் சரியாக இருக்க வேண்டும் என்று காஞ்சி மாமுனிவர் தெரிவித்த கருத்துக்கள் நூலாக உருவெடுத்திருக்கிறது. ஆசிரியர் ரா. கணபதி எழுதிய தெய்வதரிசனம் அனைவரும் அறிந்த நூல். அது காஞ்சி மாமுனிவரை பிரதிபலிக்கும் ஆன்மிக நூல். அந்த நூல் வெளியானபோது அதில் இடம் பெறாத, ஸ்திரீ தர்மம் குறித்த முனிவரின் […]

Read more

மன்னிப்பின் மகத்துவம்

மன்னிப்பின் மகத்துவம், தலாய்லாமா, தமிழில்-ஜார்ஜினா குமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 256, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-606-7.html பொறாமை, கோபம் இவற்றால் அன்பான உறவுகளுக்குள் ஏற்படும் போராட்டங்களைப் பற்றித் தலாய்லாமா, தன்னுடைய சொற்பொழிவுகளில் சொன்ன கருத்துக்களை அவருடன் பயணம் செய்த விக்டன்ச்சான் நூலாகப் பதிவு செய்திருக்கிறார். தவறு எங்கிருந்து தோன்றுகிறது? தவறுக்கு தண்டனைதான் சரியான தீர்வா? அதற்கான மாற்று வழி எது? மன்னிப்பின் மகத்துவத்தால் நிகழும் அற்புதங்கள் எவை? போன்றவை இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம்

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம், க.ப. அறவாணன், தமிழர் கோட்டம், பக். 304, விலை 200ரூ. விஜய நகர அரசர் அரிகரபுக்கரின் மகனான, கம்பள நாயக்கர் மதுரையை அப்போது ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமியர்களை வீழ்த்தி விட்டு அரியணை ஏறினார். கி.பி. 15, 16ம் நூற்றாண்டில் மதுரையைப் பிடித்த நாயக்கர் தஞ்சாவூர், செஞ்சி, வேலூர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தன் பேரரசை நிறுவினார். நாயக்கர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் மிகக் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அக்காலத்தில், சமஸ்கிருதமும், தெலுங்கும் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் இருந்திருக்கின்றன. […]

Read more

விட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 408, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-099-1.html ஒரே நேரத்தில் சமூக நாவலாகவும், சரித்திர நாவலாகவும் மலர்ந்துள்ளது இந்தப் படைப்பு. ஒருபுறம் சுதந்திரப் போராட்ட கால உக்கிரம். மறுபுறம் அதே காலகட்டத்தில் நிலவிய தேவதாசி முறையின் சித்தரிப்பு. இவை இரண்டும் கடந்த கால நிகழ்வுகள். ஆனால், இவற்றை நிகழ்காலத்தோடு பிணைத்துச் செல்கிறாள் கொடைக்கானலைச் சேர்ந்த ஓர் இளம்பெண். நாவலின் உத்தி இவ்வாறு இருக்க, பாத்திரப் படைப்பில் ஆசிரியரின் […]

Read more

பகவத் கீதை-விளக்க உரை சுவாமி ராமா

பகவத் கீதை-விளக்க உரை சுவாமி ராமா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 560, விலை 300ரூ. பகவத் கீதையை ஏதோ மதம் சார்ந்த ஒரு கோட்பாடு அல்லது கொள்கை என்று பார்க்கக்கூடாது. அது மனித வாழ்வின் அகச் செயல்பாடுகளை அலசி ஆராய்வதாகும். உளவியலின் ஊற்றுக்கண் பகவத்கீதை என்பதே சரி. அந்த உளவியல் கோட்பாடுகளை விளக்கி அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இந்த உரையின் நோக்கம். உளவியல் கோட்பாடுகளை அவற்றிலிருந்து தனியே பிரித்து எடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக். 199, விலை 150ரூ. தமிழின முன்னோடி எழுத்தாளர்களில், எல்லோராலும் அன்புடனம், பாசத்துடனும் சு,ரா, என அழைக்கப்படுவர் சந்தர ராமசாமி. இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், சிறுகதை, புதினம், கட்டுரை என, பல சிந்தனைக் களங்களில் கால் பதித்த பெருமகனார், பன்மொழி வித்தகர், பல விருதுகளுக்கு உறவுக்காரர். அவரது 42 ஆண்டு கால படைப்புகள் பற்றிய பதிவுகள், கட்டுரைகள், என்னுரைகள், கேள்வி-பதில், நாட்குறிப்புகள் என, பல வகைகளில் தொகுத்து வெளியிட்டுள்ளனர் காலச்சுவடு பதிப்பகம். தமிழ் இலக்கியம் […]

Read more

ஊமையன் கோட்டை

ஊமையன் கோட்டை, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 168, விலை 70ரூ. To buy this Tamil book  online – www.nhm.in/shop/100-00-0001-136-2.html ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும், வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை சுற்றியே கதை […]

Read more

முத்திரைச் சிறுகதைகள்

முத்திரைச் சிறுகதைகள், ஆர்னிகா நாசர், மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 208, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-718-0.html ஆர்னிகா நாசர் நிறைய இதழ்களில் அடிக்கடி எழுதுபவர். பிரபலமான எழுத்தாளர். இவருக்கென்று ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருக்கின்றது. இவர் எழுதும் பாணியில், புதுமை இருக்கும். எழுத எடுத்துக் கொள்ளும் கதை கருக்களில் புதுமையும், வித்தியாசமும் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியுள்ள ஆர்னிகா நாசர், தாம் எழுதியவற்றுள் சிறந்த […]

Read more

உடன்கட்டை

உடன்கட்டை (ஒரு வரலாற்று ஆய்வு), செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 112, விலை 50ரூ. உடன்கட்டை ஒழிப்பு என்றதும், நமக்கு ராஜாராம் மோகன்ராய் நினைவுக்கு வருகிறார். டிசம்பர் 4, 1829ல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை ஏறுவது, சட்ட விரோதமான தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் இயற்றினார். இச்சட்டத்திற்குப் பின்தான் இந்தியாவில் உடன்கட்டையேறும் வழக்கம் ஒழிந்தது. இந்நூலில் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் உடன்கட்டையேறும் வழக்கம் இருந்ததையும், அதற்கான காரணங்களையும் அதை ஒழிக்கச் சட்டங்கள் வந்தது […]

Read more
1 12 13 14 15