அன்பே உலகம்

அன்பே உலகம், சுப்ரபாரதிமணியன், நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை, பக். 48, விலை 50ரூ. சிறுவர்களின் வாழ்க்கை நெறியை கற்றுத்தருவதோடு, சிறுவர்களின் பேச்சு வழக்கிற்கேற்ப இக்கதைகள் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/5/2016.     —-   தொல்காப்பிய கலைச்சொல் விளக்கம், முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தமிழ்ப்பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், பக். 383, விலை 200ரூ. தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைச்சொற்களைத் தொகுத்து அகரநிரல் அமைத்து, எவரும் தாமே கற்கும்படியான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கும் நூல் இது. 2500 ஆண்டுகளுக்கு […]

Read more

மருத்துவ அகராதி

மருத்துவ அகராதி, முனைவர் மு. பொன்வைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், விலை 800ரூ. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழறிஞர் த.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டார். மருத்துவம் பற்றிய சொற்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கம் அளிக்கும் அகராதி அது. நீண்ட காலம் பாடுபட்டு உருவாக்கிய இது, அக்காலத்திலேயே மிகுந்த பாராட்டு பெற்றது. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அந்த நூலை, நவீன வடிமைப்புடன், மிக பிரமாண்டமானதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒரு உறுப்பாக விளங்கும் “தமிழ்ப் பேராயம்” வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய […]

Read more

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், ப. மருதநாயகம், தமிழ்ப்பேராயம், காட்டாங்குளத்தூர், பக். 272, விலை 150ரூ. உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் மொழியேயாகும். தமிழ்ச் சொற்கள் பலவும் இன்றைக்கும் கிரேக்கம், சீனம், கொரியம், லத்தீன் முதலிய பிறமொழிகளிலும் காணப்படுகின்றன. பிறமொழிச் சொற்களுக்கு வேர்ச்சொல்லாக இருப்பது தமிழ்தான். தமிழர்களின் பண்பாடு, வாழ்வியல் போன்றவை உலக அளவிலும் பரவியிருக்கின்றன என்பதற்கு மொழியியலாளர்களின் ஆய்வுகளே தக்க சான்றாகத் திகழ்கின்றன. எபிரேய விவிலியத்துப் பழைய ஏற்பாட்டில் உள்ள சிறப்புக் கூறுகளை கைம் ராபின் என்பவர் கபிலரின் குறுந்தொகை, ஐங்குறுநூறு, […]

Read more

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர். எம்.பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 112, விலை 70ரூ. இசைக்குழுக்களாக வாழ்ந்த பழந்தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு சண்டை போட்டதை போர் என்று சொல்லக்கூடாது. அது தமிழர்களுக்குள் எழுந்த பூசல்களே என்பதை தொல்காப்பிய வழி சொல்வது ஆய்வுக்குரியது, மாமன்னர்கள் நடத்திய கடுமையான போர்களால் மக்கள் பட்ட சொல்லொண்ணாத் துயரங்களை புலவர்கள் எடுத்துச்சொல்லி, மன்னர்களை உணரச் செய்தது போன்ற வரலாற்றுக் காலச் செய்திகளை விளக்கும் இடங்கள் அதிகம். திணைதோறும் போர், நடுகல் வழிபாடு உள்ளிட்ட செய்திகள் […]

Read more

சிலம்பில் ஈடுபட்டது எப்படி

சிலம்பில் ஈடுபட்டது எப்படி, ம.பொ. சிவஞானம், ம.பொ.சி. பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்த உணர்வுகளை, மனம் திறந்து ம.பொ.சிவஞானம் பேசும் நூல். மனைவி ராஜேஸ்வரி, நான் கண்ணகியாய், ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பேன் என்று கூறிய வீரவுரையைக் கேட்ட பிறகு ம.பொ.சி இந்த தலைப்பில் நீண்ட ஆய்வு செய்து இந்த நூலை அவருக்கே அஞ்சலி ஆக்கியுள்ளார். 1934ல் வெளியான நவீன கோவலன், 1946ல் கண்ணகி, 1966ல் பூம்புகார் ஆகிய திரைப்படங்களால் சிலப்பதிகாரம் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றதை […]

Read more

யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் ப்ளீஸ்

யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் ப்ளீஸ், ஸ்ரீஹரி, நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 112. ஒரு புகைப்படக் கலைஞர் பயணக்கட்டுரை எழுதுவதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்வது. இரண்டு அதன் உண்மைத்தன்மையைப் புகைப்படங்கள் நமக்கு காட்சிப்படுத்துவது. அதைத்தான் ஸ்ரீஹரி தன்னடைய ஜெர்மன், சுவிட்சர்லாந்து அனுபவங்களை புகைப்படக்காரர் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். வி.ஐ.பி.க்கள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வழங்கியிருக்கிறார். மதர்தெரஸா உள்ளிட்ட பலரின் பதிவு நம்மை உற்சாகப்படுத்துகிறது. வளர்ந்துவரும் […]

Read more

துணை வேந்தர் சொல்லும் செயலும்

துணை வேந்தர் சொல்லும் செயலும், மு. பொன்னவைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம், பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603203. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிந்துள்ள பொன்னவைக்கோ, தமிழறிஞர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பைப் பெற்ற பொறியாளர். தமிழ் மொழியைக் கடந்து, பிறமொழிகள் மீது பற்றும் பாசமும் உள்ள ஒரு பரந்துப்பட்ட, விசாலமான பார்வையாளர். பெரியாரின் கொள்கைகளை வரவேற்கும் இவர், ஆன்மிகத்திலும் நாட்டம் உள்ளவராக இருக்கிறார். சொந்த வாழ்க்கை பற்றி சில தகவல்கள், பணிபுரிந்தபோது பெற்ற அனுபவங்கள், செய்து முடித்த சில சாதனைகள், சில சொற்பொழிவுகள் என […]

Read more