வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-229-9.html வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்தும் தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன். வைரமணிக் கதைகள் என்ற பெயரில் வந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது. தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு. இது சரி-தவறு என்பது குறித்த தெளிவான நிலைபாடு, சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 450ரூ. அற்புதமான சிறுகதைகளைத் தருகிறவர் வையவன். பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள எண்பது சிறுகதைகளை வைரமணிக் கதைகள் என்ற மகுடமிட்டு ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் இயல்பாக இழையோடுகிறது அப்பழுக்கற்ற மனிதம். இந்தக் கதைதான் சிறந்தது என்று குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லமுடியாத சங்கடத்தை நியாயமான விமர்சகனுக்கு ஏற்படுத்துகிற தொகுப்பு இது. பெரும்பாலான கதைகளில் கிராமப்புற அழகுகளை மிகைப்படுத்தலில்லாமல் சொல்லியிருக்கும் ஆற்றல் வையவன் போன்ற வெகு சிலருக்கே கைவரக்கூடிய ஒன்று. மார்க்ஸ் ஆகப் பெயர் மாற்றம் பெற்ற […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 418, விலை ரூ.450 பல்வேறு இதழ்களில் வெளிவந்த நூலாசிரியரின் 80 சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகளின் களங்கள் கிராமத்து மண்ணின் மீதே என்றாலும் நகர்ப்புறங்களின் அனுபவச் சாயல்களும் சில கதைகளில் உண்டு. அகல், அவள் மற்றம் அம்மா சிறுகதையில் வரும் காங்சனாவின் பண்பு யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டது. வழிகாட்டும் ஒளியாகக் காஞ்சனா இருப்பதையும் தனது மனமே தவறாகச் சஞ்சலப்பட்டதையும் அழகிரி உணர்வதாகக் காட்டியிருக்கும் பாங்கு எழுத்தாளரின் எழுத்தாளுமையைக் காட்டுகிறது. ஆட்டோ சிறுகதை நகர்ப்புற, நடுத்தரப் […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள்,வையவன், தாரிணி பதிப்பகம், பக். 418, விலை 450ரூ. சிறுகதை என்ற இலக்கிய முயற்சி, எதிர் காலத்தில் எங்கே இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெளிவந்திருக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு. ஆசிரியர் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தமிழ்ச் சிறுகதைகள் உலகில் தனி முத்திரை பதித்தவர் என்று போற்றப்படுபவர். 418 பக்கங்களில் 80 சிறுகதைகள் அடங்கிய இந்த பிரம்மாண்டமான தொகுப்பு சிறுகதைப் பிரியர்களுக்குக் கொடுத்த விருந்து என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு கதையுமே படித்து ரசிக்க வேண்டியவை. -மயிலை சிவா.   —- […]

Read more

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், ஃபிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில், பக். 227, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html ஈழ இனப்படுகொலை என்பதே சாட்சியமற்ற போராகத்தான் ஆகிவிட்டது. ஆனால் அவற்றை எவ்வளவுக்கு எவ்வளவு மறைக்க முயன்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கொலைக்கான ஆவணங்களும் சாட்சியங்களும், வாக்குமூலங்களும், உலகம் முழுக்க பரவலாகக் கிடைக்கும் விடயமாகிவிட்டது. அவற்றை முதல் முறையாக வெளியே கொண்டு வரும் நூலாக இந்நூல் விளங்குகிறது. இலங்கை பிபிசி செய்தியாளராக […]

Read more

எண்களின் எண்ணங்கள்

எண்களின் எண்ணங்கள், இரா. சிவராமன், பை கணித மன்றம், சென்னை 94, பக். 184, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-080-8.html கணிதம் கற்பது கசப்பல்ல, மகிழ்ச்சி என்பதை விளக்கும் அழகிய நூல். ஆங்கிலத்தில் அல்லாமல், தமிழில் வண்ணப்படங்களுடன் எழுதிய விதம் பாராட்டுதற்குரியது. எண்களின் மீது நம்நாட்டு மக்களுக்கு அரிய பற்று உண்டு. அதனால்தான் இந்தியர் கணிதத்திறமையை, அமெரிக்க அதிபர் ஒபாமா வியக்கிறார். எறும்புகள் இலக்கை நோக்கி பயணிப்பதில் உள்ள கணித தத்துவம், பூக்கள் காயாக மாறும் தன்மையில் […]

Read more