காந்திஜியின் கனவு நனவாகட்டும்

காந்திஜியின் கனவு நனவாகட்டும், முனைவர் அ. பிச்சை, சபாநாயகர் செல்ல பாண்டியன் அறக்கட்டளை, பக். 144, விலை 70ரூ. காந்தி விரும்பியது என்ன? ‘ஏழ்மை ஒழிக்கப்படவில்லை என்றால், தீண்டாமை முழுக்கத் துடைத்து எறியப்படவில்லை என்றால் நாம் சுதந்திரம் பெறுவதில் பொருளே இல்லை’ என, முழங்கியவர் காந்தி மகான். ‘என் அரிஜன சகோதரர்களை உள்ளே அனுமதிக்காத பூரி ஜகந்நாதர் கோவிலுக்குள், கஸ்தூரிபா, என்னை மீறி எப்படிப் போகலாம் என மனம் வருந்தியும், கடிந்தும் பேசியவர் அவர். தீண்டாமை ஒழிப்பை ஓர் இயக்கமாகவே நடத்தியவர். அவர் கண்ட […]

Read more

குழந்தைகளின் மனநலம்

குழந்தைகளின் மனநலம், A. வினோத்குமார், கண்ணதாசன் பதிப்பகம், பக். 245, விலை 160ரூ. குழந்தைகள் கருவில் உருவாவதிலிருந்து அவர்களின் வளர்ச்சி நிலை, வளர்ப்பு நிலை, பெற்றோரின் கடமை, சுற்றுச்சூழல், குழந்தைகளிடம் காணப்படும் பயம், ஆண் – பெண் பாகுபாடு, குழந்தைகள் படிப்பு என்று குழந்தைகளின் உலகிற்குள் சென்று அவர்களைப் புரிந்துகொள்ள உதவும் நூல். நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

ஹைக்கூ எழுதுவது எப்படி

ஹைக்கூ எழுதுவது எப்படி, மெர்லின், காட்சி புக்ஸ், பக். 72, விலை 70ரூ. உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கவிஞர்களாலும் அறியப்பட்ட ஹைக்கூ, தமிழிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைக்கூ என்றால் என்ன என்று தெரியாமலே பலர் ஹைக்கூ கவிதைகள் எழுதிக் குவிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கும் படிப்போருக்கும் ஹைக்கூ பற்றிய ஒரு தெளிவை, ஹைக்கூ என்றால் என்ன? அதை எப்படி எழுத வேண்டும்? என்பதையும் எடுத்துக்கூறும் நூல். நன்றி: குமுதம், 29/9/2016.

Read more

புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும்

புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும், க. திருநாவுக்கரசு, தளபதி பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்தர் கொள்கைகள் பற்றியும் 2500 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த பெரியார் உருவாக்கிய இயக்கத்தின் கொள்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பாய்வுரையின் நூல் வடிவம் இது. புத்தரும் பெரியாரும் மக்களை அறிவார்ந்த வாழ்க்கையை வாழும்படி பரப்புரை செய்ததை ஒப்பிட்டுள்ளது சிறப்பு. நன்றி: குமுதம், 29/9/2016.

Read more

எம்.ஜி.ஆர். கதை

எம்.ஜி.ஆர். கதை, இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், பக். 352, விலை 200ரூ. பத்திரிகை துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், 1987ல் ‘தேவி’ வார இதழில் ‘எம்.ஜி.ஆர். கதை’ என்று ஒரு வருடத்திற்கு மேல் எழுதிய தொடர், வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. சினிமா, அரசியல் போன்ற துறைகளிலும் இதன் தாக்கம் இருந்ததால், பிறகு ‘ராணி’ வார இதழிலும் வேறு பல செய்திகளுடன் இதே தலைப்பில் 70 வாரங்கள் இத்தொடர் வெளியாகி சாதனை படைத்தது. எம்.ஜி.ஆரைப் பற்றிய நிறைகளை மட்டுமின்றி, […]

Read more

இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?

இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?. முளங்குழி பா. இலாசர், முதற்சங்கு பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. திரைப்படத் தாக்கம், போதைப் பழக்கம், காதல் மயக்கம், அரசியல் அவலம், பெற்றோர் சுயநலம், ஆசிரியர்கள் செய்யும் தவறு ஆகியவையே இளம் குற்றவாளிகளை உருவாக்கும் காரணிகள் என்பதை தக்க ஆதாரத்துடன் அனுபவ ரீதியாக தரும் நூல். இளம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கும்முறை பலருக்கும் பலன் தரும். நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

நினைவின் நிழல்கள்

நினைவின் நிழல்கள், மணா, கலைஞன் பதிப்பகம், விலை 195ரூ. இந்திய சிற்பங்களுக்கு ஒழுங்கு முறை மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு திறந்த புத்தகம். அந்தப் புத்தகத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். அதுவே ஓர் அறிஞராக இருப்பின் நமக்கு இன்னும் கூடுதல் தகவல்களும், செய்திகளும் கிடைக்கும். அந்த அறிஞர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நூலாக்கிப் படித்தால் தீங்கனியாக இனிக்கும்தானே! அப்படியான ஒரு புத்தகம் தான், ‘நினைவின் நிழல்கள்.’ பல்வேறு துறை சார்ந்த சாதனை மனிதர்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம், அனுபவங்கள், தான் பேட்டி […]

Read more

எனக்குரிய இடம் எங்கே

எனக்குரிய இடம் எங்கே?, ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. கல்விச் சீர்திருத்தம், அதற்கு தேவைப்படுகிற சுதந்திரம், அதற்குண்டான சிந்தனைகள் என எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பேராசிரியர் மாடசாமி இதில் எடுத்துரைப்பது மிக எளிய வகை. ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்? அது ஆசிரியரின் இடமா? மாணவனின் இடமா? ஆசிரியர் இடம் எனில், மாணவனுக்குரிய இடம் எங்கே? இப்படிக் கேள்விகளை எழுப்பி, பள்ளிகளையும், கல்லூரிகளையும் பிரியமாக எடுத்துக் கொள்ளாத சூழ்நிலைகளை இந்த நூலில் அவர் ஆராய்கிறார். மாணவர்கள் தங்களை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் […]

Read more

ஊமை அலைகள்

ஊமை அலைகள், ரா.பிரடிசன், காவ்யா, பக். 108, விலை 100ரூ. தமிழக மீனவ மக்களின் வாழ்வியல் யதார்த்தங்கள், இலங்கை கடற்படையால் மீனவர்கள் படும் உயிர் வேதனை, இயற்கைச் சீற்றத்தால் அம்மக்கள் சந்திக்கும் இன்னல்கள் இவைகளே ‘ஊமை அலைகள்’ கவிதைத் தொகுப்பின் பாடுபொருள்களாக நம்மை கவனிக்க வைக்கின்றன. நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

இளையராஜா இசையில் தத்துவமும் அழகியலும்

இளையராஜா இசையில் தத்துவமும் அழகியலும், பிரேம் ரமேஷ், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 118, விலை 100ரூ. இளையராஜா இசையின் சிறப்பை பேசும் உன்னத நூல். வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்நாடக இசை வர்ண மெட்டுகளை போல் மக்களிடம் நாட்டுப்புற இசை வர்ண மெட்டுக்கள் ஏராளமாக உண்டு. அவைகளை தேடித் தேடி கவனத்துடன் மனதில் வாங்கிப் பதிவு செய்து கொண்ட ஞானியரில் மகா ஞானி நம்முடைய இளையராஜா அவர்கள் என்பது கி.ராஜ நாராயணனின் கணிப்பு. ஆனால், இளையராஜாவோ அடக்கத்துடன் பேசுகிறார். ‘இசை என்பது மிகப்பெரிய […]

Read more
1 5 6 7 8