மேதைகளின் குரல்கள்

மேதைகளின் குரல்கள், தமிழில் ஜா. தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 170ரூ. உலகின் சிறந்த திரைப்பட இயக்குனர்கள் 20 பேரின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்ட நூல். அன்பையும், அறத்திணையும் தங்கள் காட்சிகளின் பேசுபொருளாக இந்த இயக்குனர்கள் கையாள்கிறார்கள். இவர்கள் கட்டுப்பாடில்லாத கனவு காண்பவர்களாகவும் இருப்பதுடன், சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும், தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துவது இந்த நூலின் வெளிப்பாடாகும். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- நலம் தரும் நாட்டு மருந்துகள், டாக்டர் கலைமதி, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. ஒவ்வொரு நோய்க்கும் என்ன மருந்து […]

Read more

புத்தம் புது பூமி வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும். சு. ராஜு, உரத்த சிந்தனை பதிப்பகம், பக். 120, விலை 150ரூ. புவி அறிவியல் தொடர்பான அடிப்படைத் தகவல்களை யாவரும் புரிந்துகொள்ளும் எளிய தமிழில் தந்துள்ளார். பூமியில் செயல்படும் வெப்ப ஆற்றல் உள்ளிட்ட ஆற்றல்கள், இயற்கைப் பேரிடர்கள், மனிதக் கண்டபிடிப்பால் சுற்றுச்து பூமியைப் பாதுகாத்து எப்போதும் இது ‘புத்தம் புது பூமியாக விளங்கிட’ நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய நூல். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள்

அருள் தரும் ராமர் நரசிம்மர் திருத்தலங்கள், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 30ரூ. திருப்புல்லாணி ராமர், மதுராந்தகம் ராமர், கடையம் ராமசாமி கோவில் மற்றும் தமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர் கோவில் உள்ளிட்ட 23 கோவில்களின் சிறப்புகள் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —-   தெருவென்று எதனைச் சொல்வீர், தஞ்சாவூர்க் கவிராயர், காலச்சுவடு பதிப்பகம். விலை 180ரூ. மனிதர்களுக்குச் சம்பவங்கள் நேரலாம். அவற்றை நினைவுகூரவும் செய்யலாம், அதனை நூலாசிரியர் இலக்கியமாகப் படைத்து வெற்றி கண்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

வெற்றிச் சிம்மாசனம்

வெற்றிச் சிம்மாசனம், ப. ஜான் கணேஷ், தி ஒரிஜினல்பிரிண்டிங் பிரஸ், விலை 60ரூ. “நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை அர்த்தப்படும், யோசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை வசப்படும்” என்பார்கள். அதுபோல வாழ்க்கை வசப்படவும், வெற்றி நிசப்படவும் வழிகாட்டிடும் புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- கார்ல் மார்க்ஸ், வெ. சாமிநாத சர்மா, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில், மார்க்சியத்தைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் தமிழக மக்கள் அறிந்து […]

Read more

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 330ரூ. ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. கவிதை அதன் சிந்தனையின், அனுபவத்தின் ஆழத்தையே பலமாகக் கொண்டிருக்க வேண்டும். எதையும் பிரசாரம் செய்கிற மனோபாவம் கொண்டிருக்கக்கூடாது. குறிப்பாக நீதி போதனை அறவே கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். இதில் பிரான்சிஸ் பிரமாண்டமாகத் தனித்துத் தெரிகிறார். அவரது கவிதைகள் முழுமையான பயிற்சியால் காணக் கிடைப்பவை. அனுபவ உலகத்தை புறம், அகம் என இரண்டாகப் பிரிக்கும் கோடு அத்தனை தெளிவானது அல்ல. சமுத்திரமும், நிலமும் […]

Read more

மதனகாமராஜன் கதைகள்

மதனகாமராஜன் கதைகள், என்.டி.நந்தகோபால், பயனீர் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 230ரூ. நம் நாட்டுப் பாரம்பரியக் கதைகளுக்கே உரிய கற்பனை வளமும் சூட்சுமங்களும், சுவையும் மிக்க கதைகள் இவை. மென்மையான காதல் சுவையுடன் கலகலப்பாகக் கொண்டு செல்கிறது. அதே வேளை, கண்ணியம் மீறாத நேர்த்திமிக்க கதைகள் இவை. நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

முதல் வரிசை மூன்றாவது இருக்கை

முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ. ஆழமான சிறுகதைகளை எழுதுவதில் வல்லவர் படுதலம் சுகுமாரன். இந்தத் தொகுதியில் அவருடைய 35 கதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாம் நெஞ்சைத் தொடும் கதைகள். அநாவசியமாக வளர்த்தாமல், நாலைந்து பக்கங்களில் கதையை அடக்கி விடுவது இவருடைய சிறப்புகளில் ஒன்று. முதல் கதையான “மாப்பிளை”, 5 பக்கங்களில் பிரமாதமாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள்

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. திரை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதர், நடிக மன்னன் பி.யு.சின்னப்பா, குணசித்ர நடிகர் டி.எஸ். பாலையா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம். ஆர்.சி. சம்பத், முப்பெரும் நடிகர்கள் பற்றி சிறப்பாக எழுதியுள்ளார். சில பிழைகளையும் எடுத்துக்காட்ட வேண்டும். “சந்திரகாந்தா படத்தில், சுண்டூர் இளவரசன் வேடத்தில் கதாநாயகனாக பி.யு. சின்னப்பா நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றி கண்டது. சின்னப்பா ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்” என்று […]

Read more

குபேர் புதுச்சேரிப் புயல்

குபேர் புதுச்சேரிப் புயல், வில்லியனூர் பழனி, கனிமொழி வெளியீட்டகம், விலை 80ரூ. வெள்ளையரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, புதுச்சேரி பிரெஞ்ச ஆட்சியின் கீழ் இருந்தது. அது, பிரான்சு நாட்டிடம் இருந்து விடுதலை பெறவும், இந்தியாவின் ஒரு மாநிலமாக அமைக்கப்படவும் காரணமாக விளங்கியவர் குபேர். அதுபற்றிய விவரங்களை தெளிவாக விளக்குகிறது இந்நூல். புதுச்சேரி வரலாற்றை அறிந்து கொள்ள முக்கியமான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

உங்கள் கேள்விகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்கள்

உங்கள் கேள்விகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 182, விலை 65ரூ. மோட்சத்தை நாடும் மனிதன் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை இறைவனிடம் கேள்விகளாகக் கேட்கிறான். தகுந்த குருவை அடைந்து அவரிடம் பணிவுடன் கேள்வி கேட்க வேண்டும் என்று உபநிஷதங்களும் பகவத் கீதைகளும் கூறுகின்றன. அந்த வகையில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது சீடர்களுக்கு எழும் சந்தேகங்களை நீக்கி அமுத மொழியாக அருளியுள்ளார். அதிலிருந்து பக்தர்கள் பல சூழநிலைகளில் கேட்ட கேள்விகளுக்கு ராமகிருஷ்ணர் தந்த பதில்களின் தொகுப்பு இந்நூல். நன்றி: குமுதம், […]

Read more
1 3 4 5 6 7 8