மக்கு மாமரம்

மக்கு மாமரம், தமிழில் கொ.மா.கோ. இளங்கோ, நேஷனல் புக் டிரஸ்ட் ஒரு மரம் ஒரே இடத்தில்தான் இருக்க வேண்டுமா? ஒரு மரம் வேர்களை நிலத்திலிருந்து பிடுங்கிக்கொண்டு தனக்கான பாதையை, தனக்கான இலக்கைத் தேடி நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? அதைத்தான் செய்கிறது இந்தக் கதையில் வரும் மாமரம். பல இடங்கள், பல மனிதர்கள், உயிரினங்கள், தாவங்களைப் பார்க்கும் அந்த மரம், கடைசியில் என்னவாக மாறியது என்பதுதான் கதை. இப்படிக் கேள்வி கேட்டுப் பயணிக்கும் மாமரத்துக்கு ‘மக்கு மாமரம்’ என்று தவறாக மற்றவர்கள் பட்டப்பெயர் வைத்தாலும் […]

Read more

பாரதியார் சரித்திரம்

பாரதியார் சரித்திரம், பாரதியின் துணைவியார் செல்லம்மாள் பாரதி, அழகு பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. ‘‘அந்த நாளில் ‘கல்யாணராமன் ஸெட்’ என்ற கம்பெனி நடத்திய, ‘துரோபதி துகிலுரிதல்’ என்ற நாடகம் பாரதியின் மனதைக் கவர்ந்தது. பின்னாளில் உலகத்தார் வியக்கும் வண்ணம், அவர் இயற்றிய பாஞ்சாலி சபதத்திற்கு, சிறுவயதில் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியே காரணமாயிருந்து இருக்கிறது,’’ (பக்.23). ‘ராமாவதாரத்தில் கூனிப் போகும்படி செய்து, கூனியின் கூனலைக் கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் நிமிர்த்தினான். தன் கவிதா சக்தியால், மின்சார சக்தி கொண்ட பாக்களால், தமிழகத்தின் கூனலைப் பாரதி […]

Read more

மந்திரக் கைக்குட்டை

மந்திரக் கைக்குட்டை, கொ.மா.கோ.இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன், குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாக எழுதிவரும் கொ.மா.கோ. இளங்கோ எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் கற்பனையை வித்தியாசமாகத் தூண்டக்கூடிய இந்தக் கதைகளில் சில ‘மாயா பஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்தவைதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கதை வடிவிலேயே அழகாகச் சில கதைகள் சொல்லிச் செல்கின்றன. நன்றி: தி இந்து, 9/11/2016.   —- மின்மினி, மொழிபெயர்ப்பு என். மாதவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளருமான என். மாவனின் […]

Read more

சுல்தானின் காடு

சுல்தானின் காடு, தமிழில் பூரணி பாலேந்திரா, தூலிகா காட்டில் வாழும் அம்மா புலிக்கும் அதன் குட்டியான சுல்தானுக்கும் ஒரு தோழி உண்டு. அவர்தான் இந்தப் புத்தகத்துக்கான படங்களை எடுத்த பீனா. அவர் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், காடுகளை நேசிப்பவர். ராஜஸ்தானில் உள்ள ரன்தம்போர் காட்டில் வாழும் குட்டிப் புலி சுல்தானின் வாழ்க்கையைப் படங்கள், அப்பகுதி பொம்மைகள் வழியாக இந்தப் புத்தகம் நமக்குச் சொல்கிறது. கமலாபாசின் எழுதிய இந்த நூலைத் தமிழில் பூரணி பாலேந்திரா மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பு எளிமையாகவும், சீராகவும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். […]

Read more

கனவினைப் பின் தொடர்ந்து

கனவினைப் பின் தொடர்ந்து, தமிழில் ஜே. ஷாஜஹான், எதிர் வெளியீடு, வரலாறு எவ்வளவு சுவாரஸ்யமானது என்று சில புத்தகங்களை வாசித்தால் தெரியும். அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று இது. சிந்து சமவெளி மக்கள், நாளந்தா பல்கலைக்கழகம், கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு போன்ற முக்கிய வரலாற்றுத் தகவல்களை ஒரு கதை போலப் படித்தால் எப்படியிருக்கும்? அந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். பிரபல ஆங்கிலக் குழந்தைகள் எழுத்தாளர் த.வெ. பத்மா எழுதியதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.   —- இறக்கை விரிக்கும் […]

Read more

பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?

பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?, அனதோலி தொமீலின், தமிழில் நா. முகம்மது செரீபு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு பூமியின் வடிவம் தட்டையா, வட்டமா?, உருண்டையா? உருண்டை வடிவம்தான். ஆனால் இந்த உருண்டை வடிவமும், மிகச் சரியான உருண்டையா, இல்லையா? இது பற்றிய கேள்விகள் பண்டைக் காலம் முதலே பலருக்கும், குறிப்பாக விஞ்ஞானிகளிடையே தோன்றின. அந்தக் கேள்விகளிலிருந்து பூமியின் வடிவத்தைக் கண்டடைந்த விதத்தை அழகாகப் படங்களுடன் சுவைபடக் கூறுகிறது இந்த நூல். இந்த நூலை எழுதியவர் அனதோலி தொமீலின். இதை சுவாரஸ்யம் குறையாமல் […]

Read more

மாயக்கண்ணாடி

மாயக்கண்ணாடி, உதயசங்கர், நூல்வனம், குழந்தைகளுக்கான நேரடிக் கதைகள், மலையாள மொழிபெயர்ப்பைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உதயசங்கர் எழுதிய நேரடிக் கதைகளின் தொகுப்பு இது. வித்தியாசமான முன் அட்டையுடன் வந்துள்ளது. இந்தக் கதைகளில் சில ‘மாயாபஜாரி’ல் ஏற்கெனவே நீங்கள் வாசித்து மகிழ்ந்தவைதான். பொதுவாக ராஜாக்களைப் பாராட்டும், ராஜாக்களைப் புகழும் கதைகளையே அதிகம் கேட்டிருப்போம். ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள கதை ஒவ்வொன்றும் ராஜாக்களின் கோமாளித்தனங்களைக் கேலி செய்கின்றன. நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

என் பெயர் நம்பிக்கை

என் பெயர் நம்பிக்கை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக், 120, விலை 80ரூ. நூலாசிரியர் தான் சந்தித்த மனிதர்களையும் அவர்கள் தந்த அனுபவங்களையும் பாடங்களையும் நம்பிக்கை தரும் வகையில் முகநூலில் எழுதி வந்ததன் தொகுப்பு இந்நூல். நம்பிக்கையான அனுபவங்களும் சம்பவங்களும் படிக்கப் படிக்க ஆர்வம். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள்

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள், பா. வரதராசன், குமுதம், ஒவ்வொரு பாகத்தின் விலை 125ரூ. திருக்கோயில்களுக்குச் செல்பவர்களுக்கு அத்திருக்கோவிலின் வரலாறு, தெய்வத்தின் திருநாமம், மகிமை, வரந்தரும் கடவுள்களின் சிறப்பு, தரிசிப்பதால் மக்களுக்கு கிட்டும் பலன்கள் ஆகியவற்றை விளக்குவதோடு, திருக்கோவில்கள் பற்றிய கலைக்களஞ்சியமாகவே இந்நூலை ஆக்கியுள்ளார் ஏ.எம்.ராஜகோபாலன். முதல் பாகத்தில் 18 கோவில்களைப் பற்றியும், 2-ம் பாகத்தில் 23 கோவில்களைப் பற்றியும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- இரா. மோகன், ச. கவிதா, கலைஞன் பதிப்பகம், விலை 90ரூ. பன்மொழிப் பாவலர், […]

Read more

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம், பி.சி. கணேசன், நர்மதா பதிப்பகம், விலை 120ரூ. உலக மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி கற்பது அவசியம் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நூல். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே ஆங்கில இலக்கணத்தின் அமைப்பு முறைகளை தமிழில் விளக்கிச் சொல்லி எளிதில் புரிய வைக்கிறார் நூலாசிரியர் பி.சி. கணேசன், ஆங்கிலத்தை பயில விரும்பும் அனைவரும் இந்த நூலை பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- நவீன விருட்சம், அழகிய சிங்கர்,விலை 100ரூ. 1988ம் ஆண்டு […]

Read more
1 2 3 4 5 6 8