சீன இதிகாசக் கதைகள்

சீன இதிகாசக் கதைகள், ஏவி. எம், நஸீமுத்தீ, கிழக்கு பதிப்பகம், பக். 127, விலை 110ரூ. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சீன இதிகாசக் கதைகள் கற்பனையில் சிறகடித்து, நம்பிக்கையில் கால் பதிக்கிறது. மனிதனின் அச்சம், ஆசை, ஆற்றாமை, கற்பனை, தனிமை, தன்னிரக்கம் என்ற உணர்வுகளை, இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. சீனாவின் சமூக, சமய வரலாற்றையும் இக்கதைகள் தொட்டுக்காட்டுகின்றன. மாயாஜலம், கற்பனை, வினோதம், அற்புதங்கள் இக்கதைகளில் இழையோடும், ஆனாலும், சீன மண்ணின் மரபுகளையும், நம்பிக்கைகளையும் அவை தாண்டி விடாது. இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங் என்ற சீனப் […]

Read more

பூமி

பூமி, மூலம் ஆஷா பகே, தமிழில் பி.ஆர். ராஜாராம், பக். 400, விலை 225ரூ. சாகித்திய அகாடமி விருது பெற்ற மராத்தி மூல நூலாசிரியர் ஆஷா பகேயின் பூமி எனும் நாவலின் தமிழாக்கமே இந்நூல். தமிழக, கடலூர் மாவட்ட கடலோரக் குடும்பத்தில், இந்து தந்தைக்கும், கிறிஸ்தவ தாய்க்கும் பிறந்த ஒரு சிறுமி, சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பள்ளிப் பருவத்திலேயே தாயையும் இழந்து தனிமையாகிறாள். நிராதரவாக நிற்கும் அவளை, அவளது அத்தை மும்பைக்கு தன்னோடு அழைத்துச் சென்று, படிக்க வைத்துக் கரையேற்றுகிறாள். தந்தையில்லா பெண்ணாக, […]

Read more

ஒளி விளையாட்டு

ஒளி விளையாட்டு, எஸ்.டி. பாலகிருஷ்ணன், சி. வெங்கடேசன், அறிவியல் வெளியீடு அறிவியல் விளையாட்டுகள் பாடத்தின் ஒரு பகுதியாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறி வரும்காலம் இது. அறிவியலை விளையாட்டு ரீதியாகக் கற்க எளிமையான பல விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள இந்நூல் எஸ்.டி. பாலகிருஷ்ணன், சி. வெங்கடேசன் ஆகியோர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர். நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

சித்தர்களின் சாகாக் கலை

சித்தர்களின் சாகாக் கலை, சுவாமி அகமுகநாதர், கற்பகம் புத்தகாலயம், பக். 392, விலை 275ரூ. உலகத்தில் மனித இனம் தோன்றிய வரலாறு, விழுப்புரத்தில் கிடைத்த, 1,80,000 ஆண்டுகள் பழக்கமுள்ள மண்டை ஓடு, முதலான பிரமிப்பான தகவல்களுடன் நூல் துவங்குகிறது. கண்டங்களின் தோற்றம், சுனாமி என்னும் ஆழிப் பேரலை, எரிமலை வெடிப்புகளின் தாக்கம், அதனால் ஏற்படும் பேரொலி முதலான, அரிய தகவல்களை தருகிறது இந்த நூல். உலகத்தில், மக்கள் தோற்றத்தை, ஏழாயிரம்… எட்டாயிரம்… ஆண்டுகளுக்கு முன் என, சில சமயவாதிகள் வரையறை செய்து கொண்டிருக்கும்போது, நம் […]

Read more

வருகிறார்கள்

வருகிறார்கள், கரன் கார்க்கி, பாரதி புத்தகாலயம், பக். 392, விலை 295ரூ. ‘‘தண்ணீர் வியாபாரமாக்கப்படுவதை எதிர்த்தும், சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை, ஒவ்வொரு குடிமகனுக்கும் தருவது அரசின் கடமை என வலியுறுத்தி, பூமி எங்கும் போராடும், போராடுகின்ற போராடத் துணிகிற இளைஞர்களுக்கு இந்நூல் என்ற சமர்ப்பணத்துடன் துவங்குகிறது இந்த நாவல். மதங்கள், ஜாதிகள் பெயரால் நாளும் நடந்தேறும் கவுரவக் கொலைகள், தண்ணீரை அநியாய விலைக்கு விற்று மக்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், யார் […]

Read more

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும்

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும், எஸ். பி. எழிலழகன், சுரா பதிப்பகம், விலை 250ரூ. நூலாசிரியர் எழிலழகன் செய்தித்துறை அனுபவம் மிக்கவர் என்பதால், தமிழக மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டிய தகவல்களை, இந்த நூலில் சிறப்பாக தொகுத்திருக்கிறார். நாட்டுப்பற்றுமிக்க கருத்துக்கள், வரலாறு பேசும் தகவல் இதில் அடக்கம். ஆகவே, முதல் நூல் என்ற கருத்தை விட, கருத்துக்கள் கோர்வையாக உள்ளன. தமிழக அரசு பல்வேறு தலைவர்களின் நினைவகங்களை உருவாக்கிய போதும், அதன் தொடர்புடைய, தமிழக தலைவர்களை வரலாற்றுப் பார்வையில், இவர் பார்த்து […]

Read more

முதல் வரிசை மூன்றவாது இருக்கை

முதல் வரிசை மூன்றவாது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, பக். 208, விலை 160ரூ. பல்வேறு இதழ்களில் வந்த சிறுகதைகளின் தொகுப்பு. ‘சுருக்’ கமாக ஒரு விஷயத்தைச் சொல்லி அதனைப்பற்றி அசைபோட வைப்பதில் தேர்ந்தவர் படுதலம் சுகுமாரன். இத்தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் அந்த ரகத்தைச் சேர்ந்ததே. அப்படிப்போடு அருவாளில் வரும் புவனாவாகட்டும், முதல் வரிசை மூன்றாவது இருக்கையில் வரும் ஜானகியா கட்டும் அன்றாட வாழ்வின் எதார்த்த பெண்களின் பிரதிபலிப்புகள். பெரும்பாலும் பெண்மையை, அவர்களின் ஆழ் மனதை எடை போடும் கதைகளே அதிகம். […]

Read more

திருக்குர்ஆன் தமிழாக்கம்

திருக்குர்ஆன் தமிழாக்கம், குட்வேர்ட் புக்ஸ், பக். 774. ஆன்மிகம் மற்றும் அறிவுப் பூர்வமான தளங்களில் உண்மையை மனிதன் கண்டடைய வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கூறும் புனித நூல் குர்ஆன். அதோடு மனித குலத்திற்கான நற்செய்தியைக் கொண்டுள்ள நூலாக குர்ஆன் விளங்குவதை எளிமையாக எடுத்துக்காட்டுகிறார்கள். இறைவனைப் பற்றிய ஞானத்தை அடைதல், இறைவனின் நெருக்கத்தைப் பெறுதல், சாந்தி மற்றும் ஆன்மிக ரீதியிலான வாழ்க்கையை வாழ்தல் என்று குர்ஆனின் முக்கிய நோக்கங்களை புரிந்துகொள்ளும் விதமாக இதன் மொழிபெயர்ப்பும் விளக்க அடிக்குறிப்புகளும் தந்திருப்பது பயனுள்ளதாக உள்ளது. நன்றி: குமுதம், 16/11/2016.

Read more

புனிதர் அன்னை தெரசா

புனிதர் அன்னை தெரசா, குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. கிறிஸ்தவ மதத்தில் இறை அருள் பெற்றவருக்கு, கத்தோலிக்க திருச்சபையால் வழங்கப்படுவதே ‘புனிதர்’ பட்டம். சமீபத்தில் அத்தகைய பட்டத்தைப் பெற்றவர் மறைந்த அன்னை தெரசா. தவிர, இவர் உலகின் மிக உயர்ந்த பரிசான அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றவர். அன்னை தெரசா, ‘நான் ஒரு இந்தியப் பெண். இந்தியா எனது நாடு. இந்தியர்கள் எனது சகோதரர்கள்’ என்று முழங்கியவர். இப்படி இந்தியாவுக்குப் பல பெருமைகளை சேர்த்துள்ள இவர் எப்படி இந்தியா […]

Read more

மீசைக்காரப் பூனை

மீசைக்காரப் பூனை, பாவண்ணன், புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு தமிழ் சிறார் இலக்கியத்தில் பாடல்கள் பெரிதும் குறைந்துவிட்ட நிலையில், சமீபகாலமாகத் தொடர்ச்சியாகச் சிறார் பாடல்களை எழுதி வருகிறார் எழுத்தாளர் பாவண்ணன். அவருடைய புதிய சிறார் பாடல் தொகுப்பு இது. ரயிலில் சந்தித்த சிறார்கள் பேசிய கதையின் உந்துதலால் இப்பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more
1 2 3 4 5 8