சாமானுயனுக்கான சட்டங்கள்

சாமானுயனுக்கான சட்டங்கள், வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 90ரூ. சிக்கல்களிலிருந்து விடுபட, சிக்கல்களை எதிர்கொள்ள சாமானியன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும், அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றுள் ஏதோ ஒரு வேலையாக நுழைபவர்களுக்கு, சில சட்ட நிலைகள் மற்றும் நடைமுறைகள் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம். பிணை, விசாரணை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், காவல் துறையின் கடமை, சிறைச்சாலையில் கைதிகள் வைக்கப்பட வேண்டிய முறைகள், நீதிமன்றத்தில் சாமானியன் […]

Read more

பாரதியும் ஆங்கிலமும்

பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பூங்கொடி பதிப்பகம், விலை 30ரூ. சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் எழுதிய நூல்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. “பாரதியும், ஆங்கிலமும்” என்ற தலைப்பில் ம.பொ.சி., எழுதிய நூலில், பாரதியார் கவிஞர் மட்டுமல்ல, பல ஆற்றல்கள் படைத்தவர் என்பதை விளக்குகிறார். இந்நூல் விலை 30ரூ. “மொழிச் சிக்கலும், மாநில சுயாட்சியும்” என்ற நூலில் மாநில சுயாட்சியின் அவசியத்தை வலிமை மிக்க சொற்களால் வலியுறுத்தி உள்ளார். நூல் விலை 35ரூ. சுதந்திரப் போராட்டத்தின்போது, பங்கிம் சந்திரரால் இயற்றப்பட்ட […]

Read more

தந்தை பெரியாரின் 100 அறிவுரை

தந்தை பெரியாரின் 100 அறிவுரை, தொகுப்பு கவிஞர் கலி. பூங்குன்றன்,பெரியார் சுய மரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, விலை 15ரூ, விலை 10ரூ. தமிழ்ச் சமுதாயத்துக்கு தந்தை பெரியார் வழங்கிய அறிவுரைகள் ஏராளம், ஏராளம். அவற்றில் 100 அறிவுரைகளை தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் கலி. பூங்குன்றன். உணவு பற்றாக்குறை தீர, வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழிய, கலவரங்களைக் களைய, வகுப்பு வாதம் ஒழிய, ஒழுக்கம் வளர… இப்படி பல பிரச்சினைகளுக்கு தீர்வு கூறுகிறார் பெரியார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். விலை 15ரூ. “பெரியார் ஒரு […]

Read more

அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு. அருணாசலம்பிள்ளை, முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தை நிறுவி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி ஊட்டிய தனிப்பெரும் வள்ளல் டாக்டர் இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தமிழ்மக்களும் மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல். அண்ணாமலை அரசரின் கல்விப் பணியும் பொதுப் பணியும் பொதுப் பணியும் உலகம் நன்கு அறிந்த ஒன்றே என்றாலும் எதிர்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்து அவர்களை நெறிப்படுத்தும் நூல். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

உள்ளங்கையில் உலகம்

உள்ளங்கையில் உலகம், அ.ஸ்டீபன், வைகறை பதிப்பகம், பக். 64, விலை 40ரூ. உலகில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் – அது குடும்பம், உறவு, நட்பு, எதிர்ப்பு, நீதி, மனிதநேயம், நாடுகள் பற்றிய சர்ச்சை, தகவல் பரிமாற்றங்கள், அண்மையில் நிகழ்ந்த காவிரி பிரச்னை என்று அனைத்தையும் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும் வசதியை ஊடகங்கள் தந்துவிட்டன. ஆனால் அந்த ஊடகங்கள் குறித்த சரியான புரிந்துணர்வு இல்லை. அதை கற்பிக்கும் நூல் இது. நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

தாக நதி

தாக நதி, ரத்தின மூர்த்தி, விஜயலட்சுமி பதிப்பகம், பக். 213, விலை 200ரூ. வசந்தன் ஒரு விவசாயி. அவன் வெண்ணிலா என்ற பெண்ணை மணக்கிறான். ஆனால், வெண்ணிலாவோ நகரத்தில் உள்ள மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்றும், அதுவும் கோட்டு சூட்டுப் போட்ட மாப்பிள்ளையாக அமைய வேண்டும் என்றும் விரும்பியவள். அரை குறை மனதுடன்தான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே வாழ்வைச் செம்மைப்படுத்த முடியும் என்பதையும், இருக்கும் பொருளாதாரத்தை வைத்தே வாழ்வை நிம்மதியாகக் கழிக்க முடியும் என்பதையும் மிக வசதியாக மறந்து கொண்டிருக்கிற […]

Read more

சின்னமனூரிலிருந்து சீனாவுக்கு

சின்னமனூரிலிருந்து சீனாவுக்கு, முனைவர் இரா. மனோகரன், காவ்யா, பக். 246, விலை 225ரூ. பயண நூல் ஒன்றை நாட்குறிப்புப் போல் எழுதி புதுமை செய்துள்ளார் முனைவர் இரா.மனோகரன். மஞ்சள் ஆறு பாயும் சீனாவைப் பற்றி தமிழருக்குத் தெரிவிக்கும் நூல் இது. பணி ஓய்வு பெற்றதும் சீனாவுக்குப் போய் நமக்காக அந்தப் பயண வரலாற்றைப் படைத்துத் தந்துள்ளார். நம் வீட்டின் வரவேற்பறையைப் போல் பராமரிக்கப்படும் சீனாவின் பொதுக் கழிப்பிடத்தையும் டாக்சிக்காரர் மீட்டர் கட்டணம் மட்டும் வாங்குவதையும் பார்க்கும்போது நமக்குப் பொறாமையாகத் தான் இருக்கிறது. சீனாவின் பாரம்பரியத்தை […]

Read more

வெள்ளைக் காகிதத்தில் ஓர் எறும்பு

வெள்ளைக் காகிதத்தில் ஓர் எறும்பு, பால்முகில், கவிஞன் பதிப்பகம், பக். 62, விலை 80ரூ. எதார்த்தமான கவிதை வரிகள் படிப்போரை மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது. ‘என் பெட்டிக்கடைக்கும் வயதாகிறது, என் வாடிக்கையாளர்களுக்கும் வயதாகிறது, எனக்கும் வயதாகிறது, எப்போது சாயுமென்று சிலர் எதிர் பாத்திருக்கலாம்’. இது வெறும் கவிதை அல்ல. நிஜ வாழ்வின் முழுக்காட்சி. நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

சங்க கால ஜாதி அரசியல்

சங்க கால ஜாதி அரசியல், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 96, விலை 80ரூ. பல்வேறு இதழ்களில் வெளியான, 13 கட்டுரைகளின் தொகுப்பு. மகாபாரதத்தைத் திரும்ப எழுதுதல், தீபாவளியின் அரசியல், நோபல் விருதின் யுத்த அரசியல், சங்ககால ஜாதி அரசியல், மதிப்பெண் அரசியல், துவரம் பருப்பின் அரசியல் என ஒவ்வொரு கட்டுரையிலும், ‘அரசியல் மொழி’ என்று ஒன்றை பின்புலமாகக் கொண்டு இன்றைய சூழலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் முன்னாள், ‘உன்னதம்’ இதழாசிரியர். ‘துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று/ இந்நான் கல்லது குடியும் […]

Read more

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 96, விலை 85ரூ. மெட்ராஸ்காரர்கள் அயோக்கியர்கள் போலவும், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்றும், இந்த நகரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவது இந்த மண்ணின் பூர்வக்குடிகளை கேலி செய்வதாகும். எங்கெங்கிருந்தோ இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்த, 90 சதவீதம் பேர் செய்யும் தவறுகளை, மெட்ராஸ் மக்கள் சுமக்கின்றனர்’ என, சித்திரை வெயிலாய் வறுத்தெடுக்கிறார், சென்னைவாசியான தமிழ்மகன். தமிழன் பெயரோடு, ‘துரை’ சேர்ந்த வரலாற்றிற்கு, வள்ளிமலை சுவாமிகளே காரணமாம். ஆம்… ஆங்கில புத்தாண்டில், […]

Read more
1 4 5 6 7 8