உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், அப்துல்கலாம், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. “பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அதுபோலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்கிறார் நூலாசிரியர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்களின் மனதிலுள்ள நுட்பமான பிரச்னைகளை கேள்வி – பதில் வடிவில் அலசி ஆராயும் நூல். நன்றி: குமுதம்

Read more

நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய சாலையில் பார்த்தபோது

  நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய சாலையில் பார்த்தபோது, ஹாருகி முரகாமி, தமிழில் ஜி.குப்புசாமி, வம்சி புக்ஸ், விலை 170ரூ. முரகாமி… ஜப்பான் மட்டுமில்லை, அகில உலகமே அவரது எழுத்தின் மீது கவனம் வைக்கிறது. அவரின் ஆறு சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன இந்தத் தொகுப்பில். வலிமையான கதைக்களன் என்று எதுவும் இல்லை. மெல்லிய உரையாடல்களில் சித்திரம் விரிகிறது. அவரது உரையாடல்கள் ஏமாற்றும் எளிமை கொண்டவை. முதல் வாசிப்பிலேயே கிடைக்கக்கூடிய அபூர்வ அழகும் சாத்தியப்படுகிறது. அதே நேரத்தில் மறுவாசிப்பின் அவசியமும் நேரிடுகிறது. தத்துவ […]

Read more

சட்டப்பேரவையில் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன்

  சட்டப்பேரவையில் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 225ரூ. 1996முதல் ஐந்தாண்டுகளும், 2006ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளும் தமிழக சட்டசபை காங்கிரஸ் உறுப்பினராகப் பணியாற்றியவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.இராமன். சட்டசபையில் அவர் ஆற்றிய பணியை புத்தகமாக எழுதியுள்ளார். சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள், கலந்துகொண்ட விவாதங்கள், எழுப்பிய கேள்விகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

ஜப்பான் நாட்டுச் சிறுவர்க கதைகள்,

  ஜப்பான் நாட்டுச் சிறுவர் கதைகள், அரு.வி.சிவபாரதி, ஜீவா பதிப்பகம், விலை 80ரூ. ஜப்பான் நாட்டுச் சிறுவர் சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு எளிதில் புரியும வகையில் அரு.வி.சிவபாரதி அழகிய முறையில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

ஸ்ரீராமநுஜர் நூற்றெட்டு அந்தாதி

ஸ்ரீராமநுஜர் நூற்றெட்டு அந்தாதி, துரை மலையமான், துரை மலையமான் பதிப்பகம், விலை 22ரூ. மூங்கிற்குடி திருவரங்க அமுதனார் அருளிய ராமாநுஜரின் 108 அந்தாதி அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.   —-   ஆய்வுக்குரிய ஜோதிட நியதிகள், கி.கந்தசுப்பு, மனோன்மணி பதிப்பகம், விலை 240ரூ. ஜோதிடம் என்பது பலிக்கக் கூடியதுதானா, அது அவசியமானதா என்ற கேள்விகளை எழுப்புவோர் பலர். அதற்கெல்லாம் விடையளிக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

வேத வரிகளும் தூதர் மொழிகளும்

  வேத வரிகளும் தூதர் மொழிகளும், டாக்டர் கே.வி.எஸ். ஹவீப் முகம்மத், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 200ரூ. திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் ‘ஹதீஸ்’ எனப்படும். நபிகளாரின் பொன்மொழிகளும்,திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட நன்னெறிக் கருத்துகளும் சில ஆயிரம் பக்கங்கள் கொண்டவை. அத்தகைய இஸ்லாமிய கருத்துகளை அனைவரும் அறிந்திடும் வகையில் சுருக்கமாக டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித் தனித்தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவு ஆற்றுவோருக்கும், […]

Read more

மனதோடு மழைச்சாரல்

மனதோடு மழைச்சாரல், மன்னை ஜீவிதா அரசி, காகிதம் பதிப்பகம், விலை 150ரூ. மன்னை ஜீவிதா அரசி எழுதிய கவிதைகள் கொண்ட தொகுப்பு. பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் ஜீவிதா அரசி, சமூகத்தில் காணப்படும் அநீதிகளை சாடும்போது, அவர் எழுத்துக்களில் தீப்பொறி பறக்கிறது. உணர்ச்சிமயமான கவிதைகளை எழுதியுள்ள ஜீவிதா அரசி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

நினைத்ததை முடித்த ஜி.ஆர்.

நினைத்ததை முடித்த ஜி.ஆர்., பி.டி.விமல், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. சேலம் மாவட்டம் உப்பாரப்பட்டியில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஜி.ராமச்சந்திரன். இவர் சினிமா துறையில் நுழைந்து தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவருடைய வாழக்கை வரலாற்றை புகைப்படங்களுடன் பி.டி.விமல் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

பெரியார் 95

பெரியார் 95, ஞான.வள்ளுவன், இனியவன் பதிப்பகம், விலை 300ரூ. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி பல நூல்கள் வெளியாகி உள்ளன. இருந்தபோதிலும் பெரியாரைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஞான.வள்ளுவன் எழுதிய நூல். பெரியாரின் இளமைப் பருவம் தொடங்கி 95 தலைப்புகளில் பெரியார் வாழ்வில் நடந்த அனைத்துத் தகவல்களையும் திரட்டித் தந்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

அண்ணன்மார் சுவாமி கதை

அண்ணன்மார் சுவாமி கதை, கவிஞர் சக்திக்கனல், நர்மதா பதிப்பகம், விலை 290ரூ. கொங்கு நாட்டு வேளாளர் காவியமான பொன்னர் – சங்கர் வரலாறு, “அண்ணன்மார் சுவாமி கதை” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நாடோடி இலக்கியம். பொன்னர், சங்கர், தங்கம் ஆகிய மூவரும் வரத்தால் பிறந்தவர்கள். தாயார் தாமரை, தான் பட்ட இன்னல்களை எல்லாம் மக்களிடம் சொல்கிறார். தான் செய்த சபதங்களையும் சொல்கிறாள். அண்ணன்மார் இருவரும், பங்காளிகளை பழிவாங்கி, அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்கள். பெற்றோர் மறைவுக்குப்பின், பொன்னர், சங்கர் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் […]

Read more
1 2 3 4 9