பொழுதுக்கால் மின்னல்

பொழுதுக்கால் மின்னல், கா.சு. வேலாயுதன், சப்னா புக் ஹவுஸ், விலை 180ரூ. எழுத்தாளர் கா.சு.வேலாயுதன் எழுதிய நாவல். கோவை மண்ணின் மணம் கமழுகிறது. மானுட வாழ்வின் இருப்புக்கும், இலக்குக்கும் இடையே நிகழும் ஓயாத யுத்தத்துக்கும் மத்தியில் உறவுகளின் அர்த்தம் குறித்து இந்த நாவல் பேசுகிறது. நன்றி: தினத்தந்தி,19/7/2017.

Read more

தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. இந்தியாவில் கொள்ளையர்கள் தடம் பதித்த காலக்கட்டத்தில், “தக்கர்” என்ற கொள்ளைக்காரர்கள் மத்திய இந்தியாவில் அட்டூழியங்கள் செய்து வந்தார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்தார்கள். அவர்களுடைய செல்வங்களை கொள்ளையடித்தார்கள். பிற்காலத்தில், இவர்களை வெள்ளையர்கள் அடக்கினார்கள். 3689 தக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 466பேர் தூக்கில் போடப்பட்டனர். 1504பேர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு தக்கர்கள் பற்றிய அபூர்வ விஷயங்களை, இரா. வரதராசன் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் . ஒரு நாவலுக்கு […]

Read more

எங்கேயும் பெண்மை

எங்கேயும் பெண்மை, மு.வேல்முருகன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 55ரூ. ‘காப்பியப் பொருளாய் பெண்ணிருந்தாள் கவிதைப் பொருளும் அவளானாள் – இன்று கோப்பியப் பொருளாய் ஆகிவிட்ட பெண்ணின் அவலம் அறிவீரோ? அழகுச் சிலையைப் பின்தொடர்ந்து காதல் மொழிகள் கூறுகிறார்; அவள் அதை ஏற்க மறுத்தாலோ அமிலத்தை முகத்தில் வீசுகிறார்’ என்ற கவிதை வரிகள், பெண்ணின் அவலத்தைக் கூறுவதாக உள்ளது. நன்றி: தினமலர்17/9/2017.

Read more

திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் மூலமும் உரையும்)

திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் மூலமும் உரையும்), உரையாசிரியர்: முனைவர் பழ.முத்தப்பன, சகுந்தலை நிலையம், பக்.688, விலை ரூ.1200. வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லாக் கோயில்களுக்குமே அந்தக் கோயில்களைப் பற்றிய தலபுராணம் எழுதப்பட்டிருக்கும். அவ்வாறு தலபுராணம் பாடியவர்களுள் பரஞ்சோதி முனிவரும், பெரும்பற்றப்புலியூர் நம்பியும் குறிப்பிடத்தக்கவர்கள். மதுரை மாநகரில் சிவபெருமான் தம் பக்தர்களின் பொருட்டு நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைச் செய்யுள் வடிவில் பரஞ்சோதியார் தொகுத்தளித்ததே திருவிளையாடற் புராணமாயிற்று. இப்பெயரில் இரு நூல்கள் உள்ளன. ஒன்று பரஞ்சோதியார் பாடியது, மற்றொன்று பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடியது. பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய […]

Read more

இராமாயண ரகசியம்

இராமாயண ரகசியம், தமிழருவி மணியன்,கற்பகம் புத்தகாலயம், பக்.208, விலை ரூ.140. வால்மீகி இயற்றிய ராமாயண காவியத்தை தமிழில் வழங்கிய கம்பன் அதை தமிழ்ப் பண்புகளுக்கு ஏற்ப எவ்வாறு சீராக்கி வழங்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். தமிழருவி மணியனின் இந்த நூல், வால்மீகி மற்றும் கம்பனின் விவரிப்புகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை மிக நன்றாகவே எடுத்துக் கூறுகிறது. அது மட்டுமின்றி, நூலாசிரியரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், மொழி ஆளுமையும் வாசகர்களை ஈர்க்கும் வகையில் நன்கு வெளிப்பட்டுள்ளன. பொதுவாக இலக்கியங்களில் எதிர்நாயகனின் நற்பண்புகளைப் […]

Read more

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக்.356, விலை ரூ.225. வாரியார் சுவாமிகள் தன் வாழ்க்கை வரலாற்றை தனது அற்புத நடையில் பதிவு செய்திருக்கும் நூல். ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் ஆன்மிக சொற்பொழிவின் சிகரமாகத் திகழ்ந்த வாரியாரின் இளமைப் பருவ நிகழ்வுகள் வியக்க வைக்கின்றன. 52 கி.மீ. தூரம் நடந்து வந்து, பொய் சொல்ல மறுத்து, உண்மையைச் சொன்னதால் சாமியைத் தரிசனம் செய்ய முடியாமல் ஊர் திரும்பிய வாரியாரின் பாட்டனார் சாமியண்ணா, இந்த வரலாற்று […]

Read more

பரதாயணம்

பரதாயணம், சொ.அருணா, கபிலன் பதிப்பகம், விலை 200ரூ. மானுட இதிகாசமாகிய ராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும், காவியத் தலைமையேற்கும் கம்பீரமான பாத்திரங்கள். ராமனையும் விஞ்சும் பாத்திரமாகக் கண்டு, கம்பனே தன் கதைப் பாத்திரங்களைக் கொண்டு பாராட்டும் பாத்திரம், பரதன். கம்பநதி அடிநாதமாக, அதன் மீது எழுந்தோடும் தெளிந்த நீரோடையாக பரதாயணம் ஓடுகிறது. நன்றி: தினமலர்17/9/2017

Read more

கோமணம்

கோமணம், சுப்ரபாரதி மணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ. பூசாரி ஜெகந்நாதன் தலைமையில் நாலு தீர்த்த கலசத்தையும் ஐந்து நாள் நடையில் காலை ஒருவர், மாலை ஒருவர் என தலையில் சுமந்து கோமணாண்டி முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் ஒரு குழுவினரின் அனுபவங்களை மிக இயல்பாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். பாதயாத்திரை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர, ராவணன் என்ற புனைப்பெயர் பூண்ட மணி என்னும் நாஸ்திகரும் இந்த குழுவை நைசாகத் தொடர்கிறார்! குழுவினரின் கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், தொன்மக் […]

Read more

மாணவர்களுக்கான தமிழ்

மாணவர்களுக்கான தமிழ், என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ ‘காபி’க்கு தமிழில் என்ன பொருள்; முதலாளி, தொழிலாளி, உழைப்பாளி ஆகியவற்றில் வரும், ‘ஆளி’ எதைக் குறிக்கிறது; நள்ளிரவு என்ற சொல்லில், ‘நள்’ என்பது என்ன? உள்ளிட்ட பல சொற்களுக்கு இலக்கணம் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர்,16/7/2017.

Read more

ஹைட்ரோ கார்பன் – இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம்

ஹைட்ரோ கார்பன் – இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், பக்.288, விலை ரூ.225. உலக இயக்கத்திற்குத் தேவையான எரிசக்திக்கு ஆதாரமாக இருப்பது ஹைட்ரோ கார்பன். அதில் இருந்து எடுக்கப்படும் கச்சா பொருளைச் சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் போன்றவற்றை நாம் பெறுகிறோம். அப்படிப்பட்ட ஹைட்ரோ கார்பனை நமது நாட்டின் தேவைக்கு ஏற்ற அளவில் உற்பத்தி செய்ய முடியாததால், அதற்குத் தேவையான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் […]

Read more
1 2 3 4 5 9