திருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள் சைவம் – வைணவம்

திருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள் சைவம் – வைணவம், கவிஞர் ஆ. பட்டிலிங்கம், கவிஞர் ஆ.பட்டிலிங்கம், பக். 72, விலை 50ரூ. தமிழகத்தில் பரவலாகப் போற்றப்பெறும் சைவ – வைணவ கோவில்கள், அடியார்கள், ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிட்டு, வழிபாட்டு முறைகள் பற்றியும் எழுதியுள்ளார் நுாலாசிரியர். விநாயகர் வரலாறு என்ற தலைப்பில், விநாயகர் வழிபாடு, 6 – 7ம் நுாற்றாண்டில் தான் தமிழகத்தில் பரவியது என்றும், விநாயகரும் விஷ்வக்சேனரும் ஒருவரே என்பது போலவும் எழுதியுள்ளார். சோழர்கள், பாண்டியர்கள் கட்டிய கோவில்களைக் குறிப்பிட்டு, தஞ்சையின் சாசனக் குறிப்புகளும் எழுதப் […]

Read more

முடிவு எடுத்தல்

முடிவு எடுத்தல், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.32, விலை 50ரூ. பிரச்னைகளின்போதும், சிக்கலாக உணரும் தருணங்களிலும் எப்படிப்பட்ட முடிவைத் தேர்ந்தெடுப்பது; எப்படியான அணுகுமுறையைக் கையாள்வது; சூழலுக்கேற்ப எப்படி நடந்து கொள்வது மற்றும் குழப்பங்களிலிருந்து விடுபடுவது போன்ற பல்வேறு விளக்கங்கள் இந்நுாலில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளன. முடிவெடுக்க இயலாத நிலையில் ஏற்படும் குழப்பங்களிலிருந்தும், மன உளைச்சல்களிலிருந்தும் மனித சமூகத்தை விடுவிக்கும் முயற்சியாக அமைந்துள்ளது இந்நுால். எளிய நடையில் ரத்தின சுருக்கமாக விளக்குகிறது. நன்றி: தினமலர், 7/1/2018.

Read more

மருத்துவ மாயங்கள்

மருத்துவ மாயங்கள், டாக்டர் கு.கணேசன், காவ்யா பதிப்பகம். மருத்தவ உலகம் மிகவும் புதிரானது. டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டுகூட நோயாளிக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற மருத்துவர்கள் வாழ்கிற இக்காலத்தில், 21-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், கண்டுபிடிப்புகள். நவீன சிகிச்சைகள் குறித்து எளிய தமிழில் எழுதியிருக்கிறார் மருத்துவ எழுத்தாளர் கு.கணேசன். மருத்துவச் சொற்களைக் கூறி நம்மை அச்சுறுத்தாமல், குடும்ப நண்பரைப் போன்று விஷயங்களை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

ஹைட்ரோ கார்பன் அபாயம்

ஹைட்ரோ கார்பன் அபாயம், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், விலை 225ரூ. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வேளாண் பூமியாகத் திகழ்ந்துவரும் காவிரிப் படுகை, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகக் குறிவைக்கப்படுவது பெரும் முரணாக மாறியிருக்கிறது. வலுக்கட்டாயமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசுக்கும் இயற்கை சார்ந்த வாழ்வாதாரத்தைப் போற்றும் மக்களுக்கு இடையிலான மோதலாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால் ஓ.என்.ஜி.சி.யோ. ‘இது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்’ என்கிறது. இவற்றில் உண்மை என்னவென்பதை அறிவியல் பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் அலசி ஆராய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

இனயம் துறைமுகம்

இனயம் துறைமுகம், கிறிஸ்டோபர் ஆன்றணி, எதிர் வெளியீடு, விலை 120ரூ. நவீன யுகத்தில் இயற்கைச் சீர்கேடு மிகவும் அதிக அளவில் நடக்கிறது. அது காடானாலும் கடலானாலும் ஒன்றுதான். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள இனயம் துறைமுகத்தைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றியும், பவளத் திட்டுச் சிதைவுகள் உள்ளிட்ட சூழலியல் பாதிப்புகள் பற்றியும், கடலில் கலக்கும் பெட்ரோலிய கதிர்வீச்சால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை

ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை, மிக்காயேல் ஃபெரியே, தடாகம் வெளியீடு, விலை 200ரூ. தமிழில் சு.ஆர். வெங்கட சுப்புராய நாயக்கர் நிலநடுக்கம், சுனாமி ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று விபத்துகளை 2011-ம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்பகளை நேரில் அனுபவித்த சாட்சியான ஆசிரியர் தன் அனுபவங்களையும் அங்கு திரட்டிய தரவுகளையும் இந்தப் புத்தகத்தில் முற்றிலும் புதிய முறையில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

இனிய காண்க (தமிழ் இலக்கியம் – புதிய பார்வை)

இனிய காண்க (தமிழ் இலக்கியம் – புதிய பார்வை),  ம.திருமலை, மீனாட்சி புத்தகநிலையம்,  பக்.220, விலை ரூ160 . தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகிய நூல் ஆசிரியர், இன்றைய வாழ்க்கை மதிப்பீடுகளை பழைய தமிழ் இலக்கியங்களில் கண்டு நமக்கு இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார்; விளக்குகிறார். பண்டைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பல கருத்துகள் இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும். இன்றைய வாழ்க்கைக்கு பழைய இலக்கியங்கள் வழிகாட்டவும் செய்யும் என்பதை பல சான்றுகளுடன் இந்நூல் விளக்குகிறது. நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களினூடே […]

Read more

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800- 1500), நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், பக்.84, விலை ரூ.70. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நொபொரு கராஷிமா ஒரு கல்வெட்டியியலாளர்; சமூக வரலாற்று ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தவர். எ.சுப்பராயலு சமூக வரலாற்று ஆய்வாளர். இவர்களிருவரும் தமிழகத்தில் சோழர் காலத்தில் (பொ.ஆ. 800 -1500) நிகழ்ந்த சமூக மாற்றங்களை ஆய்வு செய்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.‘ ‘தமிழ்நாட்டில் தீண்டாதார்‘, ‘புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்‘ என்ற நொபொரு கராஷிமாவின் […]

Read more

மனிதன் – புரியாத புதிர்

மனிதன் – புரியாத புதிர்,  அலெக்சிஸ் காரெலின், தமிழில்: அ.நடராசன், முல்லை பதிப்பகம், பக்.416, விலை ரூ.250. மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும் காரணமாக அவனுடைய உடல் இயங்கும் தன்மைகளும் உள்ளன என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். பிரான்சைச் சேர்ந்த மருத்துவர் அலெக்சிஸ் காரெலின் தனது மருத்துவ அறிவின் துணை கொண்டு மனிதனின் உணர்வுகள் மனிதனின் உடலை எவ்விதம் பாதிக்கின்றன என்று ஆராய்கிறார். மனிதனின் இன்றைய வாழ்க்கைமுறை அவனுடைய உடலையும் சிந்தனைகளையும் செயல்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் விளக்குகிறார். நவீன தொழில்துறை மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருந்தாலும் […]

Read more

கையா உலகே ஒரு உயிர்

கையா உலகே ஒரு உயிர், ஜேம்ஸ் லவ்வாக், தமிழில் சா.சுரேஷ், பாரதி புத்தகாலயம், விலை 160ரூ. இன்றைக்கு அனைத்து நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கும் பொருளாக புவி வெப்பமயமாதல் மாறியுள்ளது. இந்தப் பூவுலகு ஒற்றை உயிர் போலவே இயங்குகிறது என்கிற கோட்பாட்டை முன்மொழிந்து அதைப் பரவலாக ஏற்கச் செய்தவர்களில் முக்கியமானவர், இந்நூலின் ஆசிரியர். பருவநிலை மாற்றத்தை மாறுபட்ட கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் இன்னுமொரு புத்தகம் இது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more
1 5 6 7 8