கருப்பு வெள்ளை கல்வெட்டு

கருப்பு வெள்ளை கல்வெட்டு, ஸ்ரீதர் பாரதி, எக்காளம், விலை 50ரூ. பரணில் தூசி மண்டிக்கிடக்கும் பாட்டன் பூட்டன் காலத்து கருப்பு வெள்ளை புகைப்படங்கள்போல், நகரப் பெருக்கத்தில் நாம் மறந்துபோன கிராமத்து கலாசாரத்தை காட்சிகளாய்க் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திடும், மண்மணக்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாழ்திடச் சொல்கிறேன்

வாழ்திடச் சொல்கிறேன், தியாரூ, ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. கைரேகைபோல், கையெழுத்துபோல் வெவ்வேறாகத்தான் இருக்கும். உங்களுக்குக் கிடைத்திருப்பதை வைத்து, உயர்வாகவும் உன்னதமாகவும் வாழ்வது எப்படி? உள்ளத்தில் கள்ளமின்றி வெள்ளமென உயர்ந்து வாழ வழிகாட்டும் புத்தகம். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மௌனமாயொரு இடிமுழக்கம்

மௌனமாயொரு இடிமுழக்கம், ட்யுராங்கோ அதிரடி, முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 250ரூ. சம்மரைக் கொண்டாட சாகசங்கள் நிறைந்த விறுவிறு காமிக்ஸ்! புரட்சிப்படை, கூலிப்படை, அதிகார வர்க்கங்களுக்கு இடையே நடக்கும் ஆக்ரோஷமான சண்டைகள், சதிகள், கொடுமைகள் என்று வன்மேற்கின் ரத்தவெறி யுத்தங்களைப் படம்படமாக நகர்த்தி பிரமிக்கச் செய்யும் த்ரில்லர். பள்ஸ் காதல், பாசம், வீரம் நிறைந்த ட்ராஜெடி என்று, கோடை மலராக இரட்டை காமிக்ஸ்! கதாநாயகன் ட்யுராங்கோவின் மின்னல் வேகமும், இடிமுழக்கமாக எதிரொலிக்கும் தோட்டாக்களின் சத்தமும் கோடை மழையாகவே காமிக்ஸ் பிரியர்களைக் கொண்டாடச் செய்யும் […]

Read more

கொங்கு மண்டல கோவேந்தன் எம்.ஜி.ஆர்.

கொங்கு மண்டல கோவேந்தன் எம்.ஜி.ஆர்., மகுடம் மாணிக்கம், சகுந்தலா வசந்தம் பதிப்பகம், விலை 225ரூ. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். ஆக மக்கள் மனதில் இடம்பிடிப்பதற்கு முன் சந்தித்த சோதனைகள், பின்னர் வென்ற சாதனைகள், எளியோரிடம் அவர் காட்டிய அன்பு என்று பலவற்றையும் சுருக்கமாகச் சொல்லி, மனதுக்கு நெருக்கமாகும் நூல். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காவிரி ஒப்பந்தம்: புதைந்த உண்மைகள்

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள், சி.பி.சரவணன், வி கேன் புக்ஸ், விலை 170ரூ. தமிழகத்தில் கோடை வெப்பத்தை விட அனலெனத் தகிக்கும் பிரச்சினை ஒன்று உண்டென்றால் அது காவிரி தொடர்பானதே. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காட்டிவரும் மெத்தனமும், உரிமைகளைப் போராடிப் பெற வேண்டிய தமிழக அரசின் மௌனமான இருப்பும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பெரும் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. காவிரி ஒப்பந்தம் தொடர்பாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப் பாதுகாப்புகள் குறித்து மிக விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். நன்றி: தி இந்து, 12/5/2018. […]

Read more

வெள்ளம்

  வெள்ளம், மா.கமலவேலன், தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 65ரூ. நாடகம் என்றாலே தொலைக்காட்சி தொடர்கள்தான் என்கிற எண்ணம் மேலோங்கியிருக்கும் சூழலில், பாரம்பரியமிக்க தமிழ் நாடகக் கலையை இன்னமும் தக்க வைத்துக்கொண்டிருப்பவை சில நாடகக் குழுக்களும், வானொலி நிலையங்களுமே. மதுரை வானொலியில் ஒளிபரப்பான வெள்ளம், கவிதை எனும் இரு நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டே நாடகத்தை வேகமாக நகர்த்திப்போகும் வசனங்கள் நாடகாசிரியரின் எழுத்தாற்றலுக்கு நல்ல சான்று. நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

இரண்டாம் மரணம்

இரண்டாம் மரணம், எஸ்.ரங்கராஜன், கிழக்கு பதிப்பகம், பக். 344, விலை 350ரூ. இரண்டு வகை மரணங்கள் வாட்டி வதைக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பிரிந்துவிடும் உடல் ரீதியான மரணம் ஒன்று; தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நினைவிழக்கும் மரணம் மற்றொன்று. உடல் ரீதியான மரணத்துக்கான ஆன்ம ரீதியான விவாதம் என்றுமே முற்றுப் பெறாதது. நினைவிழப்பு எனும் மரணம் பெரிதும் கொடியது. நினைவுத்திறன் என்பது மனித வாழ்வின் முதன்மையான வரம். நினைவிழக்கும் வியாதி அல்லது ஞாபக மறதியோ இயல்பு வாழ்க்கையை முடக்கி விடுகிறது. பல்வேறு காரணங்களால், நினைவிழப்புக்குள்ளாகி சராசரி வாழ்க்கையில் இயங்க […]

Read more

எம்.ஜி.ஆர். அரசியல் பாதை

எம்.ஜி.ஆர். அரசியல் பாதை, துரை கருணா, எம்.ஜி.ஆர். பாசறை, பக்.264, விலை 160ரூ. ‘மக்கள் திலகம்’ என்று கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர்., அவர்களின் அரசியல் வரலாற்றை இந்நுால் பதிவு செய்துள்ளது. காந்தியவாதியாகவும், நேதாஜியை நேசிப்பவராகவும், காங்கிரஸ் அனுதாபியாகவும் இருந்த எம்.ஜி.ஆர்., 1952ம் ஆண்டு, நடிகமணி டி.வி.நாராயணசாமி மூலம் அண்ணாதுரையின் அறிமுகம் கிடைத்த பின், தி.மு.க., அனுதாபியாக மாறினார் என்று அறிகிறோம் (பக். 15). நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம், தி.மு.க.,வின் கொடியையும், கொள்கைகளையும் பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்தார் என்றும் (பக். 18), அண்ணாதுரை […]

Read more

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?, பிரியசகி, மேன்மை வெளியீடு, விலை 120ரூ. ‘என்னுடைய அனுபவங்களையும், நான் கண்ட, என்னைப் பாதித்த பிறரது அனுபவங்களையும் சிறுகதைகளாக்கியுள்ளேன்’ என்று நூலாசிரியர் சொல்வதை நிரூபிக்கும் வண்ணமாக எழுதப்பட்ட 13 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. நூலாசிரியர் உளவியல் சார்ந்த கல்வியாளர் என்பதால் மனவளர்ச்சி குன்றுதல், கவனச் சிதறல் குறைபாடு, ஆட்டிசம் உள்ளிட்ட இளம்பிராயத்து குழந்தைகளுக்கான பிரச்சினைகளைச் சமூக அக்கறையோடு கையாண்டுள்ளார். சில கதைகளின் முடிவிலிருக்கும் தத்துவம் போன்ற வரிகளைத் தவிர்த்திருக்கலாம். நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

ஈர்ப்பின் பெருமலர்

ஈர்ப்பின் பெருமலர், எஸ்.சண்முகம், போதிவனம், விலை 120ரூ. வாழ்வின் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து சற்றே விலகிச் செல்லும் அகச் சொல்லாடலில் முகிழ்த்த கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு. எதையும் முழுமையாக சொல்லித் தீராத சொற்களிலிருந்து உயிர்க்கும் இக்கவிதைகளில் வெளிப்படும் இருண்மை மொழி வாசகனையும் அகவெழுச்சி கொள்ள வைக்கிறது. ‘காட்சியில் புதைந்திருக்கும் எல்லையின்மையோ மின்னி மின்னி அழைக்கிறது உடன் யாருமற்றிருக்கும் அத்தனியனை -எனும் வரிகள், நம்மையும் உடன் அழைத்துக்கொள்ளும் கவி வரிகளாக உள்ளன. நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 2 3 4 5 7