பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும்

பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும், சாரா காம்பிள், டோரில் மோய்; தமிழில்: ராஜ் கெளதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.108, விலை ரூ.90. பெண்ணியம் பற்றி வெளிவந்த இரண்டு நூல்களின் தொகுப்பே இந்நூல். சாரா காம்பிள் பதிப்பாசிரியராக இருந்து உருவாக்கிய பெண்ணியமும் பின்னையப் பெண்ணியமும் என்ற நூலும், டோரில் மோய் எழுதிய பாலியல்/ பிரதியியல் அரசியல்: பெண்ணிய இலக்கிய கோட்பாடு என்ற நூலும் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளை நம் முன் வைக்கிறது. ஐரோப்பியச் சூழலில் தோன்றிய பெண்ணியம் பற்றிய சிந்தனைகளாக இவை இருந்தாலும், […]

Read more

சாளரம் 2018

சாளரம் 2018, வைகறைவாணன், சாளரம், விலை 190ரூ. க.திருநாவுக்கரசுவின் ஆய்வுப் பயணம் கட்டுரைகள், நேர்காணல்கள், படைப்பிலக்கியங்கள் உள்ளடக்கிய பெருந்தொகுப்பை ஆண்டுதோறும் வெளியிடுகிறார் ‘சாளரம்’ வைகறைவாணன். 2018 தொகுப்பின் முக்கிய அம்சம், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவின் வாழ்க்கைப் பயணத்தையும் அரசியல் பயணத்தையும் ஆவணப்படுத்தியிருக்கும் அவரது விரிவான நேர்காணல். நக்சல்பாரி இயக்கத்தின் 50-ம் ஆண்டையொட்டி தியாகு எழுதியுள்ள கட்டுரையும், சாரு மஜும்தாரின் மகன் அபிஜித் நேர்காணலும் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசியம், யாழ்ப்பாண புலமைத்துவ மரபு குறித்த கா.சிவத்தம்பியின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. நன்றி: தி இந்து,8/9/2018. இந்தப் […]

Read more

தமிழக ஆலயங்களில் நாட்டியாஞ்சலி

தமிழக ஆலயங்களில் நாட்டியாஞ்சலி – தஞ்சை வெ.கோபாலன்,  கலைமகள் டிரேடர்ஸ், பக்.96, விலை ரூ.75. ஒவ்வோராண்டும் திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் ஆலயத்தில் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். அந்த நாட்டியாஞ்சலி குழுவில் இடம் பெற்றிருப்பவர் நூலாசிரியர். பல நாட்டியக்கலைஞர்களுடன் பழகும் அனுபவமும், நாட்டியம் பற்றிய பரந்த அறிவும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய வரலாற்று நூல்களின் தாக்கமும் சேர்ந்து இந்நூலை எழுத அவரைத் தூண்டியிருக்கிறது. பல்வேறு ஆலயங்களில் நடனமாடும் பெண்களின் சிலைகளைக் காண முடியும். நடனம் தவிர பல்வேறு வகையான வாத்தியங்களும் […]

Read more

அறம் செய்ய விரும்புவோம் – அகரம் விதைதிட்ட வெற்றிக் கதை

அறம் செய்ய விரும்புவோம் – அகரம் விதைதிட்ட வெற்றிக் கதை, அகரம் அறக்கட்டளை, பக்.128, விலை ரூ.90. நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யாவின் முன்முயற்சியினால் 2006 ஆம் ஆண்டில் அகரம் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக உயர் கல்வி கற்க முடியாமல் போகும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டு அகரம் விதைத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 1961 மாணவ, மாணவிகள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். அகரம் அறக்கட்டளைக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, […]

Read more

அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்

அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார், அழகிய பெரியவன், நற்றிணை பதிப்பகம், விலை 250ரூ. அன்புவழி அழகிய பெரியவன் 2011 வரை எழுதிய மொத்த கதைகளையும் தொகுத்து ‘அழகிய பெரியவன் கதைகள்’ வெளியான பிறகு, நீண்ட இடைவெளி கழித்து இப்போது புதிய கதைகளோடு இந்தத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. பொருளாதாரீதியில் பின்தங்கியும், கூடவே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியும் இருக்கும் குடும்பங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே துளிர்க்கும் அன்பைக் கோடிட்டுக் காட்டும் விதமாக இருக்கின்றன இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். இளம் தலைமுறையின் பாகுபாடற்ற மனப்பாங்கை வெளிப்படுத்தும் கதைகளோ மனிதத்தை விதைக்கின்றன. நன்றி: […]

Read more

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை

  வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை,  இஸ்மத் சுக்தாய், தமிழில்: சசிகலா பாபு,  எதிர் வெளியீடு, பக்.404, விலை ரூ.400. இஸ்மத் சுக்தாய் 1911இல் உத்தரபிரதேசத்தில் பிறந்தவர். உருது மொழியில் அவர் பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியிருக்கிறார். பெண்ணியச் சிந்தனைகள் வளராத அக்காலத்திலேயே அவர் சுதந்திரமான கருத்துகளை உடையவராக இருந்திருக்கிறார். அவர் உருதுவில் எழுதிய காகஸி ஹை பைரஹன் என்ற சுயசரிதையின் தமிழ் வடிவம் தான் இந்நூல். வீட்டில் திருமணத்துக்கு வற்புறுத்தியபோது, அதை மறுத்து பிடிவாதமாக உயர் கல்வி கற்கச் சென்றிருக்கிறார். இஸ்மத் சுக்தாய் தொடக்க […]

Read more

அகமும் முகமும்

அகமும் முகமும், வே.தி.அரசு, திலகவதி பதிப்பகம், பக். 132, விலை 100ரூ. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற பழைய பாடல், கணவன் – மனைவி இருவரும் ஒத்தக் கருத்துடன் வாழ வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறது. அகமும், முகமும் என்ற நுால், வே.தி.அரசு தன் சொந்த அனுபவத்தைக் கடிதம் மூலம் நுால் வடிவம் கொடுத்துள்ளார். பிரிந்து வாழும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார். இரு மனம் இணைவது தான் திருமணம். ஒரு மனதில் விரிசல் ஏற்பட்டால், […]

Read more

மனசில் பட்டதை

மனசில் பட்டதை, ஆண்டாள் பிரியதர்ஷினி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், 184, விலை 180ரூ. கடவுளை கடவுளாகப் பார்ப்பது ஒரு வகை. கடவுளை மனிதனாகப் பார்ப்பது இன்னொரு வகை. கடவுளை, தந்தை – தாயாக, தோழன் – தோழியாக பார்ப்பது என்ன வகை… எந்த வகையிலும் சேராத பந்த வகை. ‘எவ்வளவு பக்கத்தில் கடவுளை பார்க்க முடியும்… எவ்வளவு பக்குவத்தில் அவரை உணர முடியும்’ என, எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? உண்டு எனில், உங்கள் மனசுக்குள் நீங்கா ரீங்காரமிட காத்திருக்கும் ஆன்மிக வண்டு […]

Read more

நிழல்களின் உரையாடல்

நிழல்களின் உரையாடல், மார்த்தா த்ராபா, தமிழில் அமரந்தா, காலக்குறி & யாழ் பதிப்பகம். ஒடுக்குமுறையும் எதிர்ப்பரசியலும் அர்ஜென்டினாவில் மிகக் கொடுமையான அரசு வன்முறையைத் தொடர்ந்து முப்பதாயிரம் இளைஞர்கள் ‘காணாமல் போனார்கள்’. அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும்பொருட்டு தாய்மார்கள், மனைவி மக்கள், சொந்தபந்தங்கள் என வெவ்வேறு வயதைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதை மையப்படுத்தி வெளியான த்ராபாவின் நாவல், அமரந்தாவின் அற்புதமான மொழிபெயர்ப்பில் 1997?ல் வெளியாகியது. இப்போது காலத்தேவை கருதி மீண்டும் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். அரசு வன்முறையையும், எதிர்ப்பரசியலின் வலிமையையும் நுட்பமாக வெளிப்படுத்தும் நாவல் […]

Read more

பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி, ப்ராணா, கௌதம் பதிப்பகம், விலை 66ரூ. சின்னச் சின்னதாய் பன்னிரண்டு கதைகளின் தொகுப்பு. சாதாரண மக்களின் வாழ்வியலோடு நகரும் கதைகள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோரும் சந்தித்திருக்கக்கூடிய நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4 6