சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள், முனைவர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 600ரூ. சைவ சமயம் உலகில் உள்ள எல்லா சமயங்களுக்கும் முற்பட்ட தொன்மையை உடையது. தமிழும், சைவமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன. சைவத்தமிழின் சிறப்பை பறைசாற்றும் வகையில் 78 கட்டுரைகள் சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள் என்ற நூல் தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சைவத்தமிழ் இலக்கியங்கள், திருமந்திரத்தின் தனிச்சிறப்புகள், சைவத் தமிழ் அறிஞர்கள் ஆகிய தலைப்புகளில் பகுக்கப்பட்டு அறிவு நிறை ஆய்வாளர்களால் படைக்கப்பட்டு இருக்கிறது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் வேறு, […]

Read more

நேரம் வெற்றிக்கு விதை

நேரம் வெற்றிக்கு விதை, பேராசிரியை கோ.கலாவதி, ஜோதி பதிப்பகம், பக். 56, விலை 50ரூ. காலம் கருதினால் ஞாலமும் கைகூடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. காலம் கருதி வாழ்ந்தவர்கள் தான், காலம் கடந்தும் வாழ்கின்றனர் என்பதை புது மொழியாகக் கருதலாம். இந்நுால் சிறிதாயினும், நேரத்தின் அருமையையும், அதை மேலாண்மை செய்யும் வழி வகைகளையும், அதனால் அடையப் பெறும் வெற்றியையும், சிறந்த உதாரணங்களுடன் கூறுகிறது. நன்றி: தினமலர், 16/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

உலக சினிமா வரலாறு

உலக சினிமா வரலாறு, வேட்டை எஸ்.கண்ணன், புதிய கோணம், விலை 495ரூ. சினிமாவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, இந்த புத்தகம் ஒரு பொக்கிஷம். ஒரு குறிப்பிட்ட மொழி திரைப்படங்கள் என்ற எல்லைக்குள் சிக்கி விடாமல், பிரபலமான ஒவ்வொரு மொழிகளிலும், திரைப்படத் துறையின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார், ஆசிரியர். இந்த புத்தகத்தை, சினிமாவின் வாழ்க்கை வரலாறு என, தாராளமாக கூறலாம். நன்றி: தினமலர், 16/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

சொல்லும் செய்திகள்

சொல்லும் செய்திகள், வி.என்.மதியழகன், காந்தளகம், விலை 400ரூ. செய்தி வாசிப்பு தொடர்பாக ஆசிரியர் சொல்லும் கருத்துகள் மகத்தானவை. செய்தித் துறையின் அடிப்படை, அதில் நிலவும் சிக்கல்கள், சவால்கள், நடைமுறை, போக்கு போன்ற பல்வேறு கூறுகளையும் பல கோணங்களில் அலசி ஆராய்கிறார். இன்றைய ஊடகத் துறையின் நிலை குறித்த மனக் குமுறலை வெளியிடும் ஆசிரியர், தரமான ஊடகவியலாளர்கள் விளைய, நல்ல ஆலோசனை விதைகளை நுாலெங்கும் துாவிச் செல்லும் பாங்கு பாராட்டிற்குரியது. நன்றி: தினமலர், 16/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

யோகாசனம் 108

யோகாசனம் 108, யோகா சுரேஷ், புத்தக பூங்கா, விலை 125ரூ. ஏராளமான யோகாசனங்கள் இருக்கின்ற போதிலும் அவற்றில் முக்கியமான 108 விதயோகாசனங்களை செய்வது எவ்வாறு என்பதும், பந்தங்கள், முத்திரைகள், கிரியைகள் பட விளக்கத்துடன் எளிய முறையில் தரப்பட்டுள்ளன. அத்துடன் பிராணயாமத்தில் உள்ள பலவகை பற்றியும், அவற்றை மேற்கொள்வது குறித்தும் விளக்கமாகத் தந்து இருக்கிறார் ஆசிரியர். எந்தெந்த நோய்களைத் தீர்க்க எந்த யோகாசனத்தை செய்ய வேண்டும் என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

நன்றியன்

நன்றியன், வா.மு.சே.திருவள்ளுவர், தமிழ்மணி புத்தக பண்ணை, விலை 250ரூ. கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல நாடுகளுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட வா.மு.சே. திருவள்ளுவர், தனது அனுபவங்களை, அழகிய தமிழில் பதிவு செய்து இருக்கிறார். இதனைப் படிப்பதன் மூலம், உலகத் தமிழர்களின் ஆற்றல், அறிவு, சாதனை, கருணை, இலங்கைத் தமிழர்களின் வேதனை போன்ற பல அம்சங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

புதுவெள்ளம்

புதுவெள்ளம்,  அகிலன், தாகம், பக்.656, விலை ரூ.500. வாழ்க்கையிலிருந்துதான் கதை பிறக்கிறது. 1960 – களில் வார இதழில் தொடராக வந்து 11 ஆம் பதிப்பு கண்டுள்ள இந்த நாவலும் அந்த ரகம்தான். விடுதலைக்குப் பின் நாட்டில் மாறிவரும் சமூகத்தின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் நூலாசிரியர். குடியானவ குடும்பத்தில் பிறந்து, படிப்பையும் விட்டுவிட்டு, ரிக்ஷா இழுப்பவனாகவும், வியாபாரியாகவும் மாறி கடைசியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளியாகிறான் கதையின் நாயகன் முருகையன். அவன் வாழ்வில் சித்திரா, சாந்தா என்ற இரு பெண்கள் குறுக்கிடுகிறார்கள். இரு துருவங்களான […]

Read more

தமிழ்நாடு திருத்தலங்கள் வழிகாட்டி (பாகம்-1)

தமிழ்நாடு திருத்தலங்கள் வழிகாட்டி (பாகம்-1), வடகரை செல்வராஜ்,ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்: 1021, விலை ரூ.900. ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்களுக்குத் தேவையான குறிப்புகளை விளக்கமாகச் சொல்லும் நூல் இது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள முக்கியமான கோயில்கள் இதில் இடம் பெற்றுள்ளன. திருக்கோயில்களில் காணப்படும் முக்கிய அம்சங்கள், கோபுரம், தல விருட்சம், திருக்குளம், தேர், ஆலயமணி, நந்தவனம், உள்வீதி, வெளிவீதி, மடப்பள்ளி, அபிஷேகம், அலங்காரம், பிரசாதம், பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்என்று ஒவ்வொன்றும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. சிவபெருமான், விஷ்ணு, பிள்ளையார், முருகன், பிரம்மா, […]

Read more

எம்மும் பெரிய ஹூமும்

எம்மும் பெரிய ஹூமும்,  ஜெர்ரி பிண்டோ, தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி, சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.240. 2016 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம் இந்நூல். இதுதவிர, கிராஸ் வேர்ட் புக் அவார்டு உட் பட பல விருதுகளை இந்நூல் பெற்றுள்ளது. மும்பையில் மாஹிம் பகுதியில் ஒரு படுக்கையறை உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளைச் சித்திரிப்பதே இந்நாவல். எம் என்றழைக்கப்படும் தாய் மனநோய் உள்ளவள். அதன் காரணமாக மிகுந்த மகிழ்ச்சி அல்லது […]

Read more

என்னை நான் சந்தித்தேன்

என்னை நான் சந்தித்தேன், ராஜேஷ்குமார்,அமராவதி, பக்.504, விலை ரூ.390. நூலாசிரியர் ஓர் எழுத்தாளராக எப்படி பரிணாமம் அடைந்தார் என்பதை ஒரு விறுவிறுப்பான நாவலுக்கு இணையாக வாசிக்க வைக்கும் நூல். எழுத்துலகில் எதிர்நீச்சல் போட்டதை எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி நூலாசிரியர் சொல்லியிருப்பதால், யதார்த்தம், சுவாரசியத்துக்குக் குறைவில்லை. க்ரைம் நாவலில் மட்டுமின்றி, சமூக நாவல்களும் எழுதி குவித்துள்ள நூலாசிரியர், தனக்கு நேர்ந்த அவமானங்களையும், வெகுமானங்களையும் அவருக்கே உரிய நடையில் தந்துள்ளார். குமுதம் எஸ்.ஏ.பி., ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், சாவி, இதயம்பேசுகிறது மணியன் போன்ற எழுத்துலக […]

Read more
1 2 3 4 5 6