குண்டலகேசி (புதிய காப்பியச் சுருக்கம்)

குண்டலகேசி (புதிய காப்பியச் சுருக்கம்),  இரா.இளங்குமரனார், தெளிவுரை: இளவரச அமிழ்தன், சிங்காரம் பதிப்பகம், பக்.240, விலை ரூ.275. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி. இது பெளத்தம் சார்ந்த காப்பியம். கள்வனை விரும்பி மணக்கும் வணிகர்குலப் பெண்ணான குண்டலகேசி, ஒரு நாள் விளையாட்டாக அவனைக் கள்வன் எனக் கூறிவிட, அன்றிலிருந்து அவர்கள் உறவு ஒட்டா உறவாகிறது. இதனால், தன்னைக் கொல்ல முயன்ற கணவனை அவள் கொன்றுவிட்டு, பிக்குணியாகி, பெளத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபடுகிறாள் குண்டலகேசி. குண்டலகேசி எனும் பெயரையே தம் புதிய […]

Read more

திராவிட இயக்க வரலாற்றில் அன்பில்

திராவிட இயக்க வரலாற்றில் அன்பில், செ.வீரபாண்டியன், செம்பியன் பதிப்பகம், பக்.348, விலை ரூ.200. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், தி.மு.க தலைவர் கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவர் அன்பில் தர்மலிங்கம். அவருடைய தியாகம், மனிதநேயம், நெஞ்சுறுதி, போராட்ட வாழ்க்கை ஆகியவை இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் 1937-ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியாரின் பேச்சை முதன் முதலாகக் கேட்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் உறுப்பினரானது, முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது […]

Read more

திறந்த புத்தகம்

திறந்த புத்தகம், அழகியசிங்கர், விருட்சம், பக்.211,  விலை ரூ.170. அழகியசிங்கரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம். கவிஞர், கதாசிரியர், பல்லாண்டுகள் ஒரு சிற்றேட்டை நடத்தி வருபவர் என்று பல முகங்கள் கொண்டவர் இந்த நூலாசிரியர். அவருடைய முகநூல் பக்கத்தில் ஓராண்டு அளவில் இட்ட பதிவுகளில் பல துறைகளைத் தொடுகிறார். மொத்தம் ஐம்பது பதிவுகள். பெரும்பாலும் எழுத்தாளர், எழுத்து, புத்தகம் தொடர்பான பதிவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இத்தொகுப்பில். அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் என்னும் ஒரு வகை மனநிலை பாதிப்பு ஏற்பட்ட நவீன கவிஞர் ஆத்மாநாம் […]

Read more

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்,  தொகுப்பாசிரியர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம்,  பக்.496, விலை ரூ.600. சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு அளித்துள்ள கொடைகள் அளப்பரியவை. அவற்றுள் சைவத்தைப் பொருத்தவரை காரைக்கால் அம்மையார் (மூன்றாம் நூற்றாண்டு) தொடங்கி சேக்கிழார் (12 ஆம் நூற்றாண்டு) வரை இருபத்தேழு அருளாளர்கள் வழங்கிய "பன்னிரு திருமுறை' சைவ சமயத்தின் கவசமாகவே கருதப்படுகிறது. மேலும் குமரகுருபரர், தாயுமானவர், வள்ளலார், அருணகிரிநாதர் போன்றோரும் சைவத்தால் தமிழையும், தமிழால் சைவத்தையும் மேம்படுத்தியுள்ளனர். தமிழ் இலக்கியங்கள் எவ்வகையிலெல்லாம் சைவத்தை வளர்த்தெடுக்க உதவின என்பதை உணர்த்தும்விதமாக […]

Read more

துளிப்பா: நூறாண்டுகளில்

துளிப்பா: நூறாண்டுகளில்,  தொகுப்பாசிரியர்: இரா. சம்பத்,சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.200. ஜப்பானில் தோன்றிய குட்டிக் கவிதை வடிவமான ஹைக்கூ குறித்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். ஹைக்கூ பற்றி ஜப்பானிய கவிதை என்ற கட்டுரை மூலம் 1916-இல் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதியார். அதிலிருந்து ஒரு நூற்றாண்டுப் பயணம் என்கிற வகையில் இந்தத் தொகுப்பின் பெயர் அமைந்துள்ளது. இறையைப் பாடுவது, இயற்கையைப் பாடுவது, மனிதனைப் பாடுவது என்று எழுத்தில் எல்லாவற்றையும் கையாண்டு வந்துள்ளதை வரலாறு பூராவும் காணலாம். செய்யுள் வடிவிலே எழுதப்பட்டால்தான் எழுத்து […]

Read more

பச்சைநிற மரகத பாபா

பச்சைநிற மரகத பாபா, எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன், ஸ்ரீ சாய்ஜர்னல் சென்டர், பக்.96, விலை ரூ.100. ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகவும் சிரமமானது. ஆனால், ஸ்ரீசாயி மார்க்கம்எனும் ஆன்மிகப் பத்திரிகை கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை 16 ஆண்டுகள் தொய்வில்லாமல் தொடர்ந்து வெளிவருவதற்குக் காரணம், பச்சைநிற மரகத சாயி பாபாதான் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஸ்ரீசாயி மார்க்கம் பத்திரிகையின் ஆசிரியரும், பச்சை நிற மரகத சாயிபாபா ஆலயத்தின் நிறுவனருமான எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன். நூலின் முற்பகுதியில், ஷீரடியில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சைநிற மரகத சாயிபாபா சென்னைக்கு வந்து […]

Read more

கைக்குள்ளே கட்டுமானத் தொழில்

கைக்குள்ளே கட்டுமானத் தொழில்,அ.வீரப்பன், B&C  பதிப்பகம்,பக்.220. விலை ரூ.200. சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வீடு கட்டுவதைப் பற்றிய அடிப்படையான பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கட்டப்படும் வீடு தரமானதாக இருக்காது; அதிக செலவும் ஆகிவிடும். வீடு கட்டுவதைப் பற்றிய அடிப்படையான விஷயங்களை அது பற்றி எதுவும் தெரியாதவர்களுக்குச் சொல்லித் தருகிறது இந்நூல். ஒரு சிறந்த கட்டடக் கலைஞரிடம் கட்டடப் பொது வரைபடங்களை வாங்குவது, தகுதியும் அனுபவமும் உள்ள ஒப்பந்ததாரரிடம் கட்டுமான வேலையை ஒப்படைப்பது, தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவது […]

Read more

பாழ்நிலப் பறவை

பாழ்நிலப் பறவை, லீலாகுமாரி அம்மா, இரா.பாவேந்தன், கோ.நாகராஜ், சந்தியா பதிப்பகம்,  பக்.120; ரூ.115. கேரளாவின் காசர் கோடு மாவட்டத்தில் முந்திரி விளைச்சலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய பூச்சிகளை ஒழிக்க ஹெலிகாப்டரிலிருந்து எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கப்பட்டது. அது காற்றில் பரவி, ஆடு, மாடுகளை, மனிதர்களைக் கொன்றது. சிறுவர், சிறுமிகளை முடமாக்கியது. இது மாத்ரு பூமி நாளிதழின் புகைப்படக் கலைஞர் மதுவின் முயற்சியால் பரவலான மக்களுக்குத் தெரிய வந்தது. அரசுப் பணி செய்து கொண்டிருந்த, ஒரு குடும்பத் தலைவியான லீலாகுமாரி அம்மாவுக்கும் தெரிந்தது. அவர் மக்களைத் […]

Read more

கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர்,  அ.கா. பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பக்.104, விலை ரூ.85. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம் போன்ற கவிதை நூல்களும், உமர்கய்யாம், ஆசிய ஜோதி போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும், பல வாழ்த்துப் பாக்களும், சில குழந்தைப் பாடல்களுமே. ஆனால், அவர் தமிழறிஞர்கள் குறித்தும், புலவர்கள் குறித்தும், தேசியம் குறித்தும், இசை-நாடகம் குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார். குறிப்பாக, கல்வெட்டு ஆய்வு குறித்து மட்டும் தமிழில் எட்டு நூல்களும், […]

Read more

ஓ… இப்படியும் நடக்குமா?

ஓ… இப்படியும் நடக்குமா?, முனைவர் த.அசோக்குமார், முனைவர் டி.அசோக்குமார் வெளியீடு, பக்.100, விலை 100ரூ. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்துாறு போலக்கெடும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, நுால் முழுவதும் துன்பம் வருமுன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. வெள்ளம் வருமுன் அணை போடுபவன் புத்திசாலி என்ற வாசகத்திற்கேற்ப, கஷ்ட நஷ்டம் வருவதற்கு முன் அதை தடுக்கும் வழிமுறைகள் இந்நுாலில் உள்ளன. வியாபாரத்தில் தொழிலில் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்குரிய கருத்துகள் இந்நுாலில் உள்ளன. தொழில் வர்த்தகம், நிர்வாகம், யாவற்றிலும், பாதுகாப்பான உபகரணங்கள், […]

Read more
1 3 4 5 6