ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம், பிரபா ஸ்ரீதேவன், வி பாட்டில் பவுண்டேஷன், விலை 200ரூ. நீதிபதி பிரபா ஸ்ரீதேவனின், ‘ஆப் வைன்யார்ட் ஈகுவாலிட்டி’ எனும் ஆங்கில நுாலின் தமிழாக்கம் இந்நுால். தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியும், வழக்குரைத்தும் வல்லமை பெற்ற நீதியரசி எழுதிய, 20 கட்டுரைகள் அடங்கிய இந்நுாலில், சமூக நீதியை சரியாக உணர்த்தும் திறனையும், எடுத்துரைக்கும் கருத்துகளின் மீதுள்ள நியாயமான போக்கையும் காண முடிகிறது. மூன்றாம் பாலினத்தவரின் கவுரவத்திற்கான உரிமை குறித்து கூறும் நுாலாசிரியர், நேபாள உச்ச நீதிமன்றம் யோக்கர்த்தா கொள்கைகளைப் பயன்படுத்தி, தம் கருத்தை வெளிப்படுத்துகிறார். […]

Read more

வான் மண் பெண்

வான் மண் பெண், ந.வினோத்குமார், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 160ரூ. சூழலியல் பெண்களின் கதை இயற்கையைப் பாதுகாக்க வந்த 50 பெண்களைப் பற்றிய ஆவணம் இந்நூல். உலகின் முன்னோடி சூழல் போராட்டங்களில் தொடங்கி தற்போது நம்மிடையே செயல்பட்டுவருபவர்கள் வரை பல்வேறு தரப்புப் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. சூழலியல் பெண்ணியவாதிகள் குறித்துப் பேசும் இந்நூல், தமிழில் முதல் முயற்சி. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தி இந்து, 13/10/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் 2)

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் 2), உளிமகிழ் ராஜ்கமல், வானதி பதிப்பகம், விலை 180ரூ. ஏற்கனவே வெளியான சோழ சிரஞ்சீவி கரிகாலன் என்ற நாவலின் 2 வது பாகமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தில் முடிவடைந்ததில் இருந்து தொடங்கி, சோழத்தில் உத்தம சோழரின் ஆட்சி தொடங்கியது வரை பயணிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வினை சிறப்பாக விவரித்து உள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 21/11/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

வரலாறு படைத்த வைர மங்கையர் (தொகுதி 4)

வரலாறு படைத்த வைர மங்கையர் (தொகுதி 4), பேராசிரியர் பானுமதி தருமராசன், புதுகைத் தென்றல், விலை 150ரூ. ஆண்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் இன்றைய உலகில் பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை எனலாம். சமுதாயத்தில் முன்னேற துடிக்கும் இளம் பெண்களிடையே ஒரு உத்வேகத்தை தூண்டும் வகையில், சாதனை புரிந்த வைர மங்கையர்களின் வரலாற்று தரவுகளை சுவைபட படைத்துள்ளார் ஆசிரியர். நாம் இதுவரை அறியாத, விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற சில சாதனை பெண்மணிகளின் தகவல்களையும் இந்நூல் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. தங்களது இலக்கை […]

Read more

நின்று துடித்த இதயம்

நின்று துடித்த இதயம், பெண்ணும் இருதய அறுவை சிகிச்சையும், அகிலா, ஐரிஸ் பதிப்பகம், விலை 100ரூ. மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்ட அனுபவம் இதய நோய் அறுவை சிகிச்சைக்குள்ளானது குறித்த தனது அனுபவங்களை ஒருவித சுயஎள்ளலுடன் எழுதியிருக்கிறார் கவிஞரும் சிறுகதையாளருமான அகிலா. இதய நோய் என்றவுடன் அய்யோ என்று பயந்துவிடாமல், அதை எப்படி சாதுர்யமாக எதிர்கொண்டார் என்பதை ‘நின்று துடித்த இதயம்’ நூலில் பதிவு செய்துள்ளார். பெண்ணுக்கே உரித்தான மனத்துணிவுடன் தனது உடல், மனப் பிரச்சினைகளை எதிர்கொண்டது குறித்து இயல்பான மொழியில் எழுதியுள்ளார். பைபாஸ் […]

Read more

ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்

ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், பக். 272, விலை 140ரூ. இன்றைய அறிவியல் உலகத்தில், மனித வாழ்க்கை பரபரப்பான சூழ்நிலையோடு ஓடிக் கொண்டிருக்கிறது. மனித எண்ணங்கள் அனைத்தும் தன்னுடைய குடும்பம், வேலையால் வரக்கூடிய வருமானம், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும் என சிந்தித்துக் கொண்டே ஒவ்வொரு நாளும் நகர்கிறது. என்ன தான் வாழ்க்கையை சிக்கனமாக ஓட்டினாலும், வாழ்க்கையில் என்ன நடக்குமோ அது நடக்கத்தானே போகிறது என நினைப்போருக்கு இந்த நுால் ஒரு அற்புத மருந்து. இந்த […]

Read more

நாளும் நலம் நாடி

நாளும் நலம் நாடி, சி.அசோக், மணிமேகலை பிரசுரம், விலை 225ரூ. மாறிவரும் உணவு பழக்கங்களின் காரணமாக இன்று எண்ணற்ற நோய்கள் நம்மை ஆட்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களுக்கான காரணங்கள், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் மற்றும் அந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை கூறுவதே இந்நூல். அகில இந்திய வானொலி, திருச்சி கோடை எப்.ம்., தருமபுரி எப்.எம். ஆகியவற்றில் ‘நாளும் நலம் நாடி’ என்கிற தலைப்பில் மருத்துவம் தொடர்பாக தான் ஆற்றிய சொற்பொழிவுகளை எழுத்து வடிவமாக்கி புத்தகமாக தந்து இருக்கிறார் மருத்துவர் சி.அசோக். முதல் தொகுதியாக […]

Read more

வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும்

வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும், பானுமதி பாஸ்கோ, நெய்தல்வெளி, விலை 100ரூ. எழுத்து, பேச்சு ஆகிய இரு பெருங்கலைகளில் வல்லவராக விளங்கி மறைந்த வலம்புரி ஜானுடனான தனது அனுபவங்களை நூலாசிரியர் அழகு தமிழில் பதிவு செய்துள்ளார். தனது முதல் சந்திப்பில் வலம்புரி ஜான் பனங்கிழங்கு அளித்து உபசரித்த நினைவில், அதையே புத்தகத்துக்கு தலைப்பாக்கி உள்ளார் நூலாசிரியர். வலம்புரி ஜானைப்பற்றிய அரிய பல தகவல்களை சுவைபட எழுதி இருக்கிறார். 1957-ல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்தி, ஆங்கிலம், தமிழுக்கு விளக்கம் அளித்து கலைஞர் கருணாநிதி கூறிய […]

Read more

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள், கே.எஸ்.சுப்ரமணி, புதிய புத்தக உலகம், விலை 140ரூ. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எந்த உணவுப் பொருளை எப்படி சாப்பிட்டால் எந்த பாதிப்பு தீரும், எந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்பவை மிக எளிய முறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஆரோக்கியமாக நீண்ட காலம் இளமைத் துடிப்புடன் வாழ இந்த நூல் நல்ல வழிகாட்டியாக இருக்கும். கை விரல் முத்திரைகள் மூலம் பல வியாதிகளை விரட்டலாம் என்ற தகவல் வியப்பு அளிக்கிறது. […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், தொகுப்பாசிரியர் தீபம் எஸ்.திருமலை, சஞ்சீவியார் பதிப்பகம், பக். 160, விலை 110ரூ. அகர முதல எழுத்து’ என, கடவுளுக்கு நிகராக எழுத்தை போற்றுகிறது, உலக பொது மறையான திருக்குறள்! கூர்மையான ஆயுதத்தை விட பலம் வாய்ந்தது, பேனா முனையால் எழுதும் எழுத்து என்பதை அனைவரும் அறிவோம். உலக மாந்தர் ஒவ்வொருவரது வாழ்க்கை, சிலருக்கு வரலாறாகவும், பலருக்கு செய்தியாக கேட்கவும் படிக்கவும் உதவுவது, எழுத்தாளர்களின் படைப்புகளாகும். நிகழ்வுகளை, நம் கண்முன் சுவாரசியமாக நிறுத்துவதில் துவங்கி, நாளும் பொழுதும் நம் சிந்தனையை துாண்டுவது […]

Read more
1 2 3 4 8