புன்னகைக்கும் பிரபஞ்சம்

புன்னகைக்கும் பிரபஞ்சம், கபீர், தமிழில்: செங்கதிர், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.200. கைவிளக்கைத் தொலையவிட்டும், அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன், யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள். அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல, இருட்டில் பார்த்த பொருட்களும் இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன. கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள், புழங்கு பொருட்களைக் கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது. நெசவாளியும் ஞானியும் தரிசியும் கவிஞனுமான […]

Read more

கண்டேன் கனடா

கண்டேன் கனடா, அ.கோவிந்தராஜு, வானதி பதிப்பகம், விலை 125ரூ. கனடா நாட்டின் தலைநகரமான ஒட்டாவா நகரில் 6 மாத காலம் தங்கி இருந்த ஆசிரியர், அங்கே ஒவ்வொரு இடத்திற்கும் தான் சென்ற போது பார்த்த வியப்பான காட்சிகள், வித்தியாசமான அனுபவங்கள் ஆகியவற்றை சுவாரசியமாக நகைச்சுவை கலந்து ஆவணப்படுத்தி இருக்கிறார். கனடாவில் தான் பார்த்த ஆச்சரியங்கள் நமது நாட்டிலும் ஏற்படாதா என்ற ஏக்கத்தையும் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 24/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

சொட்டாங்கல்

சொட்டாங்கல், தமிழச்சி தங்கபாண்டியன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 100ரூ. இந்து தமிழின் ஓர் அங்கமான ‘காமதேனு’ வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நவீன வாழ்க்கையில் இன்றைய தலைமுறை தொலைத்துவிட்டு நிற்கும் பால்யத்தின் நினைவுகள் இவை. அழியும் நிலையிலிருக்கும் கிராமத்து விளையாட்டுகளையும் நினைவிலிருந்து அகலாத இளம்பருவத் தோழிகளையும் பற்றிய கட்டுரைகள். தமிழச்சி தங்கபாண்டியனின் கட்டுரைகள் கற்பனைகளிலிருந்து அல்ல, நினைவுகளிலிருந்து எழுதப்படுபவை என்பதற்கு இத்தொகுப்பு ஓர் இலக்கியச் சாட்சி. நன்றி: தமிழ் இந்து, 23/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்,  தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம்,  பக்.693, விலை ரூ.600. அவ்வையார் என்ற பெயரில் எட்டு அவ்வையார்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதியதாக இதுவரை 17 நூல்கள் நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அந்த நூல்களைப் பற்றியும் அவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையாரின் பாடல்கள் அகநானூறு, புறநானூறில் இடம் பெற்றிக்கின்றன. அதற்குப் பிறகு அவ்வையாரின் தனிப்பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, பெட்டகம், அவ்வை நிகண்டு, விநாயகர் அகவல், உள்ளிட்ட பல […]

Read more

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்

இந்தியாவின் தலைவிதியை மாற்றிய தலைசிறந்த சொற்பொழிவுகள்,  தமிழில்: கோபால் மாரிமுத்து, மணிமேகலைப் பிரசுரம், பக்.520, விலை ரூ.350. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின்போது  தலைவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். ஆலிவர் க்ராம்வெல், நெப்போலியன் போனபர்ட் , டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட 8 அயல்நாட்டவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் இடம் பெற்று உள்ளன. குறிப்பிட்ட கால வரலாற்று நிகழ்வையும் அதன் பின்னணியையும் தெரிந்து கொள்ள இந்நூலில் உள்ள சொற்பொழிவுகள் உதவுகின்றன. தாதாபாய் நெரோஜி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசியது, சுவாமி விவேகானந்தர் 1893 – இல் […]

Read more

சோத்துக் கட்சி

சோத்துக் கட்சி, கஸ்தூரி, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஏப்ரல் வரை நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் போது, நடிகை கஸ்தூரி வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இப்போது தனி புத்தகமாக வந்து இருக்கிறது. நித்தியானந்தா, அரசியலில் ரஜினி, கமல், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் நடிகை கஸ்தூரி அலசி ஆராய்ந்த அவற்றுக்குப் பொருத்தமான கதைகளுடன் சொல்லி இருப்பதால் காலம் கடந்த பின்னரும் ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/4/19. இந்தப் […]

Read more

உறவைக் காக்க உயில் உயிரைக் காக்க உறுப்பு

உறவைக் காக்க உயில் உயிரைக் காக்க உறுப்பு, சீனி.வரதராஜன், சந்தியா பதிப்பகம், பக்.136, விலை ரூ.140. முதுமையை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு மனிதனும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன. நம்முடைய உழைப்பின் மூலம் சம்பாதித்த செல்வத்தை அடுத்த தலைமுறை எவ்வித இடர்ப்பாடும் இன்றி அனுபவிக்க வேண்டும்; குடும்பத் தலைவனாக பொறுப்பேற்கும் எந்த வயதினரும் சொத்துக்களின் எதிர்கால அனுபவ உரிமையை முறைப்படி உயில் எழுதி வைப்பது நல்லது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அதற்கு ஒரு சில உதாரணங்களையும் எடுத்துரைக்கிறார். உயிர் எழுதுதல், செட்டில்மெண்ட் […]

Read more

தத்வமஸி

தத்வமஸி – மகாவாக்கிய விளக்கம், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.112, விலை ரூ.150. உன்னத ஞானம் – மோட்சம் கிட்டச் செய்யும் தத்துவ சிந்தனைக்கு வழி வகுக்கிற சொற்றொடர் மஹாவாக்யம் என்று அறியப்படுகிறது. வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் ஏராளமான மஹாவாக்யங்கள் காணக் கிடைக்கின்றன. இவை உயரிய ஞானத்தைப் பெற எளிய வழியாகக் கருதப்படுகின்றன. வேதத்துக்கு ஒன்று என்ற அளவில், ஹைந்தவ தத்துவ விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் குறிப்பிடத்தக்கவையான, பரவலாகப் பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூடிய, மஹாவாக்யங்கள் நான்கு பிரஜ்ஞானம் பிரஹ்மா என்கிற மஹாவாக்யம், ரிக் வேதத்தில் அடங்கிய ஐதரேய […]

Read more

விழித்தால் விடியும்

விழித்தால் விடியும் (தமிழியக்கக் கட்டுரைகள்),  புலவர் வே.பதுமனார், செயக்கொடி பதிப்பகம், பக்.224, விலை ரூ.200; தமிழைப் படிப்பது, பேசுவது, எழுதுவது ஆகியவற்றில் எல்லாம் ஆர்வமற்று தமிழ்மக்கள் இருப்பதை எண்ணி வருந்தி, இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம்? என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள ஆழமான கட்டுரைகள் அடங்கிய நூல். இயற்கையோடியைந்து தமிழ் எப்படி உருவாகி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர். வீட்டில், கடைகளில், ஊடகங்களில், திரைப்படங்களில், சின்னத்திரையில் எல்லாம் நல்ல தமிழ் பேசப்படுவதில்லை என வருந்தும் நூலாசிரியர், ஒரு மொழி எப்போது பேச்சு வழக்கை இழந்துவிடுகிறதோ அப்போதே […]

Read more

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி, இராம்பொன்னு, சர்வோதய இலக்கிய பபண்ணை, விலை 200ரூ. சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு மகாத்மா காந்தி தனது வாழ்க்கையை சுய சரிதையாக தானே கூறி இருந்தாலும், அதில் இல்லாத தகவலான பகத் சிங்கை காப்பாற்ற காந்தியடிகள் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் சான்றாதாரங்கள் போன்றவற்றைத் தருவதன் மூலம் இந்த நூல் வித்தியாசமாக உள்ளது. தீண்டாமை ஒழிப்பு, சமயநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி காந்தியடிகள் ஆற்றிய அரும்பணிகளை அழகாகவும் சரளமாகவும் தந்து இருப்பதால் அவற்றை இளைஞர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு […]

Read more
1 220 221 222 223 224 505