மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்

மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல், லதிலைபிரபா, ஓவியா பதிப்பகம், விலை 100ரூ. சமுதாய அவலம், மழை இன்றி வறளும் மண், காடு வீடானதால் விலங்குகள் எழுப்பும் அபாய அலறல் என்று அத்தனையும் சின்னச் சின்ன கவிதைகளாக கண்முன் நிறுத்தும் புத்தகம். வாழ்ந்த வாழ்க்கை, வாழ்கிற சூழலை யதார்த்தமான வார்த்தைகளாய் படிக்கப்படிக்க மனதில் கனம் கூடுகிறது. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அதிசயம்

அதிசயம், அ.ஞானகுரு, தமிழ்வனம், பக். 200, விலை 200ரூ. இந்த நுாலில் சொல்லப்பட்டிருக்கிற பரிகாரங்கள், தாந்த்ரீக முறைகள், வழிபாடுகள், தியான முறைகள் யாவும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. இவற்றை மிகுந்த நம்பிக்கையோடு செய்து பாருங்கள், அதிசயம் நிகழ்வதை கண்கூடாக காண்பீர்கள். பன்முக குருநாதர்களும், பல்வேறு ஆன்மிக நுால்களும் அள்ளித் தந்த அரிய பொக்கிஷம் தான் இந்நுால். இறுதியில், செல்வத்தை ஈர்க்கும் நட்சத்திர ஆழ்நிலை தியானம் பற்றியும் குறிப்பிடுவது சிறப்புக்குரியது. வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கும், எண்ணற்ற வழிமுறைகளைக் கையாண்டும் வாழ்வில் உயரத்தை அடைய முடியவில்லை […]

Read more

போலீஸ் ஒரு நிருபரின் வாக்குமூலம்

போலீஸ் ஒரு நிருபரின் வாக்குமூலம், க. விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 96, விலை 90ரூ. இந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், முதலில் இந்நுாலின் ஆசிரியர் க.விஜயகுமாருக்கு வாழ்த்துரையை வழங்கி விடுவோம். காவல் துறை குறித்து, இப்படி ஒரு வெளிப்படையான வாக்குமூலத்தை புத்தகமாக எழுத, மனதில் நிறைய, ‘தில்’ வேண்டும். அந்தளவுக்கு காவல் துறையில் ‘தில்லுமுல்லு’ செய்யும் கறுப்பு ஆடுகளை தோலுரித்து காட்டியுள்ளார். 15 ஆண்டுகளாக, ‘தினமலர்’ நாளிதழில் ‘க்ரைம் ரிப்போர்ட்டர்’ ஆக பணியாற்றிய காலகட்டங்களில், அவர் சந்தித்த […]

Read more

சொல்லித் தருவது இல்லை

சொல்லித் தருவது இல்லை, சீத்தலைச் சாத்தன், ஒப்பிலான் பதிப்பகம், விலை 120ரூ. ஜாதகத்தை நம்புவதும், மறுப்பதும், சில நேரங்களில் அதன் பலன்களை அசைபோடுவதும் மனித சுபாவம். அந்த அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள். முதுமைக் காதல் அரவணைப்பு என்ற கருத்தில், ‘இன்னும் என்னவள் தான்’ எழுதப்பட்ட கருத்து, வயதான முதியோர் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது. இம்மாதிரிச் சுவைகளில் பல கதைகள் உள்ளன. நன்றி: தினமலர், 3/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்

ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன், அழசிய சிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 150ரூ. கதையாகத் தனியே ஒன்றும் இல்லாமல், நாவலாசிரியரே கதையில் உலாவி, தன் பார்வையிலேயே எல்லா நிகழ்வுகளையும் விவரிப்பதான, வித்தியாச நடையில் எழுதப்பட்டிருக்கும் நாவல். தொடங்கும் இடம் முடியும் இடம் என்று எதுவுமே இல்லாததால், எங்கேயும் தொடங்கிப் படிக்கலாம். இடம் பெற்றுள்ளவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களே. பாத்திரங்களாக வருவோர் எல்லோரும் நிஜ மனிதர்களே. இருந்தாலும் யாருக்குமே உறுத்தல் வராதபடி நகர்கின்றன நிகழ்வுகள். ஆங்கில நாவல்களைப் போல தன் முனைவு நடையில் எழுதப்பட்டிருக்கும் அற்புதமான […]

Read more

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ.   பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமைக்கான போராட்டம்தான் அம்பேத்கரின் தலைமையிலான தலித் இயக்கத்தின் தொடக்கம். 1927-ல் மஹத்தில் நடந்த இரண்டு மாநாடுகள் அதன் தொடக்கப்புள்ளி. ஆவணக் காப்பகத் தரவுகளைக் கொண்டு இதுவரை வெளிவராத தகவல்களை உள்ளடக்கியதாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆய்வாளரும் மனிதஉரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே. முதல் மாநாட்டின் ஏற்பாட்டாளரான ஆர்.பி.மொரெ எழுதிய மராத்திய நூலின் மொழிபெயர்ப்பையும் இந்நூலில் சேர்த்திருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more

குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை

குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை, டி.வெங்கட்ராவ் பாலு, சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ. உணவுப் பழக்கத்திலிருந்து உறங்கும் முறைவரை கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண் டிய நியமங்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், குழந்தை பிறப்பின்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள், தாய்ப்பாலின் முக்கியத்துவம். குழந்தை வளர்ப்பின் பல்வேறு நிலைகள், தாய்-சேய் நலத்துக்கான மருத்துவக் குறிப்புகள், குழந்தையின் மனநலத்தைப் பேணுவதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல் இது. குழந்தை வளர்ப்பில் தந்தையர்களுக்கான பங்கை உணர்த்தி அதை நிறைவேற்றுவதற்கான […]

Read more

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்பது ஒரு கலை. அதற்கு சிறுவர்களின் உலகத்தில் நுழைந்தாக வேண்டும். அந்த வித்தை அறிந்து குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதப்பட்ட சின்னச் சின்ன கதைகள். கதையோடு ஒழுக்கமும் நுணுக்கமாய் போதிக்கப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சாமானியனும் சர்க்கரை நோயும்

சாமானியனும் சர்க்கரை நோயும், டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்,  உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், சர்க்கரை நோய் குறித்த மாயைகளைக் களைந்து சாமானிய மக்கள் சர்க்கரை நோயை எப்படிக் கையாள வேண்டும் என்று விளக்குவதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கிறது இந்த நூல். நன்றி: தி இந்து, 6/1/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மறுக்கப்படும் மருத்துவம்

மறுக்கப்படும் மருத்துவம், தொகுப்பு: பு,பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு , பாரதி புத்தகாலயம், மருத்துவமும் கல்வியும் வணிகமயமாகி வருவது நம் சமகாலத்தின் மாபெரும் அவலங்களாகத் தொடர்கின்றது. இந்நிலையில் இந்திய மக்களவையில் தாக்கலாகியிருக்கும் மருத்துவ ஆணைய மசோதா (NMC Bill, 2017), மருத்துவக் கல்வியையும் மருத்துவத்தையும் ஒட்டுமொத்தமாக சந்தையிடம் ஒப்படைக்கும் முயற்சி என்று எச்சரிக்கும் நூல். தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான மருத்துவர்கள், கல்விச் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. நன்றி: தி இந்து, 6/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more
1 241 242 243 244 245 505