அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலை: ரூ.200. வரலாற்றை நூல்களிலும் நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பழங்கால வழிபாட்டுத் தலங்களிலும் மட்டுமல்ல, பலரது வீட்டு டிரங்குப் பெட்டிகளிலிருந்தும் பரணிலிருந்தும் தேடி எடுத்து எழுதலாம். உ.வே.சா. உள்ளிட்டோர் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் பலவற்றையும் அப்படித்தான் மீட்டெடுத்தார்கள். இன்று நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் ஒரு சுவரொட்டிகூட நாளை மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகலாம். சில பத்தாண்டுகளுக்கு முன்பு பலருக்கும் அபிமானமாக இருந்த பாட்டுப் புத்தகங்கள் இந்தக் காலத்தில் ஆவணங்களாக மாறியுள்ளன. […]

Read more

தேர்வை ரசிப்போம்.. மதிப்பெண் குவிப்போம்

தேர்வை ரசிப்போம்.. மதிப்பெண் குவிப்போம், க.ஜெய்சங்கர், வசந்தவேல் பதிப்பகம், விலை: ரூ.80. ஜவ்வாது மலையில் மலைவாழ் மாணாக்கர்களுக்குப் பாடம் எடுக்கும் பட்டதாரித் தமிழாசிரியர் க.ஜெய்சங்கர். பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்திலும் பிற பாடங்களிலும் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை இந்த நூலில் வழங்கியுள்ளார். நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நெடுமர நிழல் கதைகள்

நெடுமர நிழல் கதைகள், ஜெயராமன் ரகுநாதன், எழுத்து பிரசுரம், விலைரூ.200 காட்சிகளால் கோர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நிஜத்தில் மிதக்கும் கீழ்மை எண்ணங்களை சுவாரசியமாக அலசுகிறது. பொருள் ஆர்வத்தில் ஆடும் மன ஊஞ்சல்களை கண் முன் நிறுத்துகிறது. இந்த தொகுப்பு, 24 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. பல சூழ்நிலைகளில் வாழும் மனிதர் மனதில் மிளிரும் வண்ணங்களை குழைத்து, வினோதமாக கண்ணில் காட்டுகிறது. கதாபாத்திரங்கள் இயல்பாக கலக்கின்றன. அவை காட்சி மயமாகி சிந்தனையில் நுழைகின்றன; ஸ்தம்பிக்க வைக்கின்றன. மன வக்கிரங்களின் கோணங்களை முகத்தில் அறைகின்றன; யதார்த்த உலகத்தை […]

Read more

அறுபது கவிதைகள்

அறுபது கவிதைகள், அய்யாறு.ச.புகழேந்தி, பாரதி பித்தன் பதிப்பகம்,விலை: ரூ.60. ‘தி இந்து’ குழுமத்தின் ‘காமதேனு’ வார இதழ், ‘ஆனந்த விகடன்’, ‘குங்குமம், ‘ராணி முத்து’ ஆகிய வெகுஜன இதழ்கள், ‘தாமரை’, ‘கணையாழி’ உள்ளிட்ட சிற்றிதழ்களில் வெளியான புகழேந்தியின் கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

குரு கோவிந் சிங்

குரு கோவிந் சிங், மஹீப் சிங், தமிழாக்கம் – அலமேலு கிருஷ்ணன், சாகித்ய அகாடமி, விலை: ரூ.50. சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங்கைப் பற்றிய நூல் இது. 15-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள குரு கோவிந்த் சிங் இலக்கியம், ஆன்மிகம், சமூகச் சீர்திருத்தம் ஆகிய துறைகளில் ஆற்றிய பணிகளை விரிவான சான்றுகளுடன் இந்த நூல் விவரிக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-2/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

தமிழகம் தந்த ம.பொ.சி.

தமிழகம் தந்த ம.பொ.சி., தொகுத்தவர் – முல்லை முத்தையா, முல்லை பதிப்பகம், விலை: ரூ.120. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்னும் ம.பொ.சிவஞானத்தின் பொன்விழா 1956 ஜூன் 26 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் நிகழ்வுகள், அறிஞர்கள் ஆற்றிய கருத்துரைகள், விழா குறித்த பத்திரிகைச் செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பு நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வானத்தில் கோலமிட்டு

வானத்தில் கோலமிட்டு, ராஜேஷ்குமார், வெளியீடு: அமராவதி, விலை – ரூ.120. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ‘வானத்தில் கோலமிட்டு’, ‘உன் கண்னில் நூறு நிலா’ ஆகிய இரண்டு நாவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இரண்டு நாவல்களும் அவை வெளியான காலத்தில் அதிக வாசகர்களைச் சென்றடைந்தவை. நன்றி: தமிழ் இந்து, 12/2/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆப்கானிஸ்தான் – புரியாத போர்களின் தொடர் சங்கிலி -நேற்றும் இன்றும்

ஆப்கானிஸ்தான் – புரியாத போர்களின் தொடர் சங்கிலி -நேற்றும் இன்றும், ஜெகாதா, வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை: ரூ.150. ஒசாமா பின்லேடனின் ஆதிக்கம், ஆப்கனில் முளைத்த பயங்கரவாதக் குழுக்கள் என தாலிபான்களின் வரலாற்றையும் அதன் மூலமாகக் கடந்த 40 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த மாற்றங்களையும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிடமிருந்து ஆப்கன் எதிர்கொண்ட அழுத்தங்களையும் விளக்கும் விதமாக எழுதப்பட்ட 19 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல். நன்றி: தமிழ் இந்து, 12/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள்

சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள், வி.டில்லிபாபு, திசையெட்டு, பக்.88, விலை ரூ.120. சுதந்திர இந்தியாவின் தொழில்நுட்பத் தலைமகன்களால் முன்னெடுக்கப்பட்டசில முக்கிய அறிவியல் தொழில்நுட்பப் பொறியியல் புரட்சிகளைப் பற்றி பதிவு செய்யும் முயற்சியே இந்த நூல். வேளாண் துறை, பாதுகாப்புத்துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் நமது நாட்டின் பெருமிதம் கொள்ளும் சாதனைகளையும், சாதனையாளர்களையும் ஒருசேரக் கொணர்ந்துள்ள இந்த நூல், இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும். அறிவியல்துறையை சாராதவர்களும், பொதுமக்களும் நமது நாட்டின் தொழில்நுட்பச் சாதனைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். விளக்கில்லாத் […]

Read more

ஆகச்சிறந்த வீரன்

ஆகச்சிறந்த வீரன், துரை ஆனந்த் குமார், வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.100. அபுதாபி ஒழுங்குமுறை ஆணையத்தின் சூழலியல் அமைப்பு திட்டப்பணிக் குழுத் தலைவரான துரை ஆனந்த் குமார் சிறார்களுக்கான கதைகளை எழுதுவதோடு, சிறார் எழுதிய கதைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். குழந்தைகள் தன்னிடம் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்குப் பதில் அளிக்கும் விதமாகத் தன் சொந்த அனுபவங்களையும் தான் தெரிந்துகொண்ட விஷயங்களையும் அறிவியல் கருத்துகளையும் சேர்த்து அவர் எழுதியுள்ள 12 கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 22/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more
1 26 27 28 29 30 505