சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், பக்.144, விலை 100ரூ. சம்பள வருமானம் எப்படி கணக்கிடப்படுகிறது, வரி விலக்கு பெற்ற வருமானங்கள், அவற்றுக்கான கழிவுகள், வீட்டுச் சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம், டிவிடெண்டு, நிலம் மற்றும் வீடு போன்ற சொத்துகளை விற்கும்போது ஏற்படும் லாபத்தை கணக்கிடும் விபரம் உள்ளிட்டவற்றை எளிய நடையில் பட்டியலிட்டுக் கூறுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 22/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027079.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

உழைப்பே உயர்வு தரும்

உழைப்பே உயர்வு தரும், அருணோதயம் அருணன், அருணோதயம் வெளியீடு, பக்.172, விலை 100ரூ. முயற்சியால் முன்னேறியவர்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள் வாழ்க்கையை நேரில் பார்த்தோ, அவர்கள் வரலாற்றை நுால் வடிவாகப் படித்தோ, நாமும் அதுபோல் நடை போட வேண்டும்; வெற்றி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். பேசி பேசியே வாழ்நாளை வீணடிக்காமல், ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும் என்பதை நம் மனதில் ஆழமாக பதிவு செய்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 22/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

வாய்மையே வெல்லும்: என் மாற்றுப் பார்வை

வாய்மையே வெல்லும்: என் மாற்றுப் பார்வை,  ப.சிதம்பரம், தமிழில்: ஆர். வெங்கடேஷ், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.300. ஜனநாயகத்தில் விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது. அந்தவகையில் தற்போதைய இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை, பிரச்னைகளை, கொள்கைகளை விமர்சித்து எழுதி வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பொருளாதார ஆளுமையுமான ப. சிதம்பரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 2017-இல் வாரந்தோறும் எழுதிய 53 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி ஜி.எஸ்டி வரை மத்திய பாஜக அரசின் நடவடிக்கை எவ்வளவு தவறானது;அது தனி […]

Read more

பாவை சந்திரனின் நல்ல நிலம் விமர்சனம்

பாவை சந்திரனின் நல்ல நிலம் விமர்சனம்,  கார்த்திகா வாசுதேவன், இந்த நாவலில் பல ஆண்கள் இருக்கிறார்கள், ஆனால், ஆளுமைத் திறன் மிக்கவர்களாகக் காட்டப்படுவது முற்று முழுதாக பெண்கள் மட்டுமே! ஆம், நல்ல நிலத்தை பெண்களே தம் இஷ்டப்படி அவரவர் இயல்புக்கு ஏற்ற வகையில் ஆள்கிறார்கள். அவர்களில் காமு நாயகி என்ற போதும் பிற கதாபாத்திரங்களையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அவரவர் கோணத்தில், அவரவர் நியாயங்களுடன் நாவலுக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றனர்/ கீழைத்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்துப் பெண் காமாட்சி, அவளுக்கு வரன் தேடி […]

Read more

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு, க. திருத்தணிகாசலம், ரத்னா பதிப்பகம், பக். 576, விலை ரூ. 599. இந்த நூல் 67 கட்டுரைகளைக் கொண்டது. தமிழர் வரலாற்றின் தொடக்கமாக 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பூம்புகாரில் தொடங்கி, 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துசமவெளி, 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிச்சநல்லூர், அண்மையில் அகழாய்வு செய்யப்பட்ட கீழடி வரை ஏராளமான தகவல்களைக் கொட்டியிருக்கிறார் நூலாசிரியர். தகடூர் நாட்டை (தற்போதைய தருமபுரி மாவட்டம்) ஆண்ட அதியமான் மற்றும் அவரது மகன் எழினி ஆகியோரின் பெயர்கள், இங்கிருந்து சென்ற […]

Read more

இரையாகும் இறையாண்மை

இரையாகும் இறையாண்மை (இந்திய – அமெரிக்க ராணுவ உறவுகள் 2014- 2017),  சு.அழகேஸ்வரன், வாஸ்வியா, பக்.56, விலை ரூ.40. நரசிம்மராவ் காலத்திலிருந்து அமெரிக்காவுடனான இந்திய ராணுவ உறவுகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் நூல். 1995 இல் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்குப் பின்னர் பா.ஜ.க. அரசு 2001 ஆம் ஆண்டில் போர்த்தந்திரக் கூட்டாளிகள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2005 இல் மன்மோகன் சிங் அரசாங்கம் இந்திய – அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2014 இல் இருந்து நவீன ஆயுத தளவாடங்களை அமெரிக்காவும், […]

Read more

உலோகம் உரைக்கும் கதைகள்

உலோகம் உரைக்கும் கதைகள்,  ஜெ.ஜெயசிம்மன்,டிஸ்கவரி புக் பேலஸ், பக்.160, விலை ரூ.150. சோவியத் ரஷியாவைச் சேர்ந்த வெனெட்ஸ்கி என்பவர் எழுதிய டேல்ஸ் எபவுட் மெட்டல் என்கிற நூலின் தமிழாக்கம் இது. நமது அன்றாட வாழ்வில் பயன்பாட்டில் இருக்கக் கூடிய பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற உலோகங்கள் பற்றியும், நாம் அதிகம் அறிந்திராத இலிதியம், பெரிலியம், நையோபியம், ஜிர்க்கானியம் போன்ற உலோகங்கள் பற்றியும் விரிவாகவும், சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. பொன்னைப் பற்றிக் கூறும்போது, பொன்னாசையால் பெரும் துன்பத்துக்கு ஆளான மைதாஸ் (மிடாஸ்) கதையைக் […]

Read more

இஸ்மத் சுக்தாய் கதைகள்

இஸ்மத் சுக்தாய் கதைகள்,-தமிழில்: ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக்.496, விலை ரூ.500. உருது இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை விதைத்த பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் படைப்பில் வெளியான 24 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். வறுமையை மட்டுமே வாழ்க்கையில் சொத்தாகக் கிடைக்கப் பெற்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சில பெண்களின் வலிகளும், வேதனைகளும்தான் பெரும்பாலான கதைகளின் கருப்பொருள். முகத்தை திரையிட்டு மறைத்து வாழும் எத்தனையோ பெண்களின் அகத்துக்குள் நடக்கும் அக்னி பிரவேசங்களை எழுத்தினூடே அழுத்தமாகக் கூறியிருக்கிறார் சுக்தாய். போர்வை என்றொரு கதையில், கணவரின் அன்பும், தாம்பத்யமும் […]

Read more

விடியலின் முகவரிகள்

விடியலின் முகவரிகள், கவிஞர் செல்லம் ரகு, அகநி, பக். 96, விலை 120ரூ. இன்றைக்கு பூமியே நெகிழிப் பையென சுருங்கிப் போய்விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு நெகிழிப் பை இல்லாமல் எதுவுமேயில்லை என்கிற நிலை உண்டாகி விட்டது. ‘மேய்ச்சல் நிலம் தேடிச் சென்ற மாடுகள் மாலையில் திரும்பின நெகிழிப்பை மென்றபடி’ என்ற கவிதை வரிகளில், நம்மைக் கொல்லும் நெகிழிப் பையின் அபாயம் குறித்து ஆசிரியர் கூறியுள்ளது, நெஞ்சத்தை பதற வைக்கிறது. நன்றி: தினமலர், 22/7/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027093.html இந்தப் புத்தகத்தை […]

Read more

அறிவியல் தொழில் நுட்பம் பற்றி அறியலாம் வாங்க

அறிவியல் தொழில் நுட்பம் பற்றி அறியலாம் வாங்க, பொறிஞர் எஸ்.சுந்தரம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. உலகத்தின் எந்த ஒரு பகுதியையும் ஓரிரு மணித் துளிகளில் தொடர்பு கொள்ளும் நிலை இன்று உருவாகியுள்ளது. இந்த சூழலில், நம்மை சூழ்ந்துள்ள இயற்கையான சுற்றுப்புறம், நாம் பயன்படுத்தும் தொழில் நுட்பம், நம் உடல் இயங்கும் முறை, அவற்றுள் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற அறிவியல் ரகசியங்கள் பற்றியும் அறிந்துகொள்ள உதவும் அற்புத நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 22/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more
1 287 288 289 290 291 505