பொன்மொழிகள்

பொன்மொழிகள், ஹேமா பாஸ்கர் ராஜ், பக்கம் 202. விலை 150 ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டும் பொன்மொழிகள் புத்தகம் இது உலகம் புகழ் பெற்ற அறிஞர்களின் பொன்மொழிகள் சிரமப்பட்டு தேடிக் கண்டெடுத்து அழகாக தொகுத்து வழங்கியுள்ளார் தொகுப்பாசிரியர் ஹேமா பாஸ்கர் ராஜ். மொத்தம் ஆயிரத்து 695 பொன்மொழிகள் இதில் அடங்கி உள்ளன. முத்து மாலை போல ஜொலிக்கிறது புத்தகம். 202 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை 150 ரூபாய். நன்றி: தினத்தந்தி. 23-5-2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

இமயத்தில் புலி

இமயத்தில் புலி, தமிழில் சக்திதாசன் சுப்பிரமணியன், வேலா வெளியீட்டகம், விலை 100 ரூ. 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி வரலாற்றில் இடம்பெறத்தக்க முக்கிய நிகழ்ச்சி நடந்தது. அது வரை எவரும் அடைந்திராத உலகத்திலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை 29 ஆயிரத்து 28 அடி டென்சிங் ஹில்லரி ஆகிய இருவரும் அடைந்தனர், டென்சிங் நேபாளத்தையும், ஹில்லரி நியூசிலாந்து நாட்டையும் சேர்ந்தவர்கள், டென்சிங் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை இப்போது எழுதியுள்ளார். அதை சக்திதாசன் சுப்பிரமணியன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தை படிக்கும்போது […]

Read more

வள்ளுவரும் வள்ளல் எம் ஜி ஆரும்

வள்ளுவரும் வள்ளல் எம் ஜி ஆரும், மேகலா சித்ரவேல், மணிவாசகர் பதிப்பகம், விலை 125 ரூ. உலக தத்துவங்களை ஈரடி குறளில் எடுத்துரைக்கும் திருக்குறள் எனும் உன்னத படைப்பை நமக்கு அளித்த திருவள்ளுவர், பொய்யில் புலவர், தெய்வப்புலவர், நாயனார், தேவர், செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யாமொழி புலவர் என பல்வேறு பெயர்களில் போற்றப்படுகிறார். அதே போன்று மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், வள்ளல், மனிதநேய பண்பாளர், புரட்சித்தலைவர், இதய தெய்வம் என பல பட்டப் பெயர்களைக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் […]

Read more

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம், (பாகம் 7), பேராசிரியர் டாக்டர் எஸ் சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், பக்கம் 296, விலை 220ரூ. ஆயுர்வேத மருத்துவப் பட்டம் பெற்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இந்நூல் ஆசிரியர், தினமணி கதிரில் 2004 முதல் 2017 வரை வாசகர்கள் தங்கள் நோய்களுக்கான மருத்துவம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். இதற்கு முன் இந்நூலின் ஆறு பாகங்கள் இதேபோல் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு வெளியாகிய நிலையில் நல்ல வரவேற்பு […]

Read more

உதிரிலைகள்

உதிரிலைகள், ஹரணி, எழுத்து, விலை 80ரூ. காற்றில் சலசலக்கும் இலைகளாய் இல்லாமல், ஒவ்வொன்றாகத் தனித்தனியே உள்ளத்தில் உதிர்ந்து உருகச் செய்யும் அறுபத்தேழு கவிதைகள். வாசிக்க, யோசிக்க, நேசிக்க, பெருமூச்சுவிட்டு சுவாசிக்க என அனைத்துக்குமான கவிதைகள். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026785.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 “

Read more

உரைவேந்தர் ஔவை துரைசாமி

உரைவேந்தர் ஔவை துரைசாமி, பேராசிரியர் நிர்மலா மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. ஓலைச் சுவடிகளில் உறங்கிய தமிழை தேடி எடுத்துத் தெsளிவுரை எழுதி, உரைநடையாக்கி உலகறியச் செய்த அக்காலத்து இலக்கியக் கர்த்தாக்களுள் தனித்திறன் பெற்று உரைவேந்தர் எனப் போற்றப்பட்ட ஔவை துரைசாமியின் உரைநயம் உரைக்கும் புத்தகம். சுவைத்துணர வேண்டிய தமிழ்ச்சுவை. நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சங்கப் பனுவல்கள்

சங்கப் பனுவல்கள், சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம், விலை 135ரூ. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் குறிப்பிடும் திணைக்கோட்பாடு சார்ந்த ஒன்பது கட்டுரைகள். சில சொற்கள் காலமாறுபாட்டில் எப்படிப் பொருள் மாற்றம் பெற்றன என்பதை விளக்கும் கட்டுரை வித்தியாசமானது. சங்ககால பண்பாட்டையும் அறிய உதவும் நூல். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026982.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாண்டித்துரை

பாண்டித்துரை, எஸ்.பிரபாகரன், காவ்யா, விலை 400ரூ. கற்பனையும் நிஜமும் கலந்த வரலாற்றுப் புதினம். முதல் உலகப்போர் நடந்த காலத்தில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கற்பனை வீரனின் கதை நிஜப் போர்க்களத்தில் நகர்கிறது. படிக்கப்படிக்க போர்க்காலத்தில் பூத்திடும் அன்பு, தியாகம், கருணை, வீரம், காதல் என்று அத்தனையும் நெகிழ்வாக மனதுக்குள் மலர்ந்து கனக்கிறது. நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026784.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பி.சி.டாக்டர்

பி.சி.டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 130ரூ. இன்று கணிப்பொறி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். சின்னச் சின்ன இருமல், தும்மலுக்கு வீட்டு வைத்தியம் செய்துகொள்வதுபோல அவரவர் வீட்டக் கணினியில் ஏற்படும் சிறுசிறு பழுதுகளை தாங்களே சரிசெய்து கொள்ள வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

எம்.ஜி.ஆர். அரசியல்பாதை

எம்.ஜி.ஆர். அரசியல்பாதை, துரை கருணா, எம்.ஜி.ஆர். பாசறை, விலை 160ரூ. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாடக உலகில் நடிக்கத் தொடங்கி, நாட்டு மக்கள் உள்ளத்தில் இடம்பிடித்து அரசியலில் ஈடுபட்டு ஆட்சியில் அமர்ந்ததுவரை நடந்த பல்வேறு அபூர்வமான விஷயங்களின் தொகுப்பு. எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாற்றை அறிந்திட உதவும் வரலாற்றுப் பெட்டகம். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026787.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more
1 286 287 288 289 290 505