தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும், டி.வி.ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தக நிலையம், பக். 160, விலை 100ரூ. குறைந்த விலை உள்ள இந்த நூல் ஒரு சிறந்த தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது. நூலாசிரியர் ராதாகிருஷ்ணன், 55 ஆண்டுகளுக்கும் மேல் நாடகப் பணி புரிந்தவர். 25க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதித் தயாரித்து, நடித்து இயக்கியவர். தமிழ் நாடக மேடையின் தோற்றம் முதல் இன்று நாடகம் நடத்தும் குழுக்கள் வரைஇந்நூலில் எழுதியுள்ளார். தொழிற்துறை நாடக சபை துவங்கி, அமெச்சூர் நாடகக் குழுக்கள் வரை அனைத்து நாடக சபை […]

Read more

ஆதார் சட்டம்

ஆதார் சட்டம், பி.ஆர்.ஜெயராஜன், சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், விலை 210ரூ. ஆதார் அட்டையின் அடிப்படைத் தேவை என்ன? அரசு சார்ந்த மானியங்கள், நலத்திட்டங்கள் என அத்தனைக்கும் அது ஏன் அவசியம்? அதனால் தனிமனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஆதார் அட்டை குறித்து ஏ டு இசட் தகவல்களைத் தெரிந்து கொள்ள எளிய வழிகாட்டி. நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

கணவனின் காதலி

கணவனின் காதலி, ஜோஜ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ. மயக்கும் காதலை நம்பி மனைவியை மறந்து போனவன், உண்மை உணர்ந்து திரும்பி வரும் யதார்த்தக் கதை. விஷச்செடியாய் முளைக்கும் கணவனின் விபரீதக் காதலை, வீண்வாதம் செய்து வளர்க்காமல், முளைக்கும்போதே முறித்திட அறிவுரை சொல்லியிருப்பது சிறப்பு. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

வாங்க, மனசுக்குள் போகலாம்

வாங்க, மனசுக்குள் போகலாம், டாக்டர் எஸ். மோகன வெங்கடாசலபதி, மனோரக்ஷா, விலை 100ரூ. மனம் கெட்டால் உடலும் கெட்டு நோய்களுக்கு ஆளாகும். மனநல பாதிப்புகள் எப்படியெல்லாம் ஏற்படும், அதில் இருந்து விடுபடுவது எப்படி? இதற்கெல்லாம் விடையாக தன்னிடம் வந்த உளநலப் பிணியாளர்களின் அனுபவங்கள் வாயிலாக விறுவிறு நடையில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 9/5/2018.

Read more

பட்டுப்புழு வளர்ப்பு

பட்டுப்புழு வளர்ப்பு, பி.மாரியப்பன், இயல் வெளியீடு, பக்.264, விலை ரூ.200. பட்டாடையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பட்டு தோன்றிய வரலாற்றை எடுத்துச் சொல்வதோடு, பட்டு நூலின் உற்பத்தி குறித்தும் பட்டின் பல்வேறு வகைகள் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது. பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரமாக செயல்படக்கூடிய மல்பெரி தாவரம் பற்றியும், அதைப் பயிரிடும் முறை, தாவரப் பெருக்க முறை, பயிரிடும் காலம் போன்றவற்றையும் நூல் விளக்குகிறது. பட்டுப்புழு வளர்ப்பதற்கான சூழல், வெப்பம், ஈரப்பதம், புழுவிற்கு வழங்கப்படும் இலை, பருவப் பட்டுப்புழுவின் உணவுத்தேவை என எல்லாவற்றையும் விரிவாக […]

Read more

வாகீச முனிவரின் ஞானாமிர்தம்

வாகீச முனிவரின் ஞானாமிர்தம் (சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.752, விலை ரூ.650. வாகீச முனிவர் அருளிச் செய்த ‘ஞானாமிர்தம்‘ என்ற நூலே மெய்கண்ட சாத்திரங்களுக்கு எல்லாம் முன்னோடி நூலாக இருக்கிறது. சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மைகளை 75 அகவற்பாக்களால் விளக்குகிறது ஞானாமிர்தம். உலகப் படைப்பு, பசுவின் மூவகை அவத்தை, ஆன்மா அடையும் ஐந்துநிலை வேறுபாடுகள், மாயாவாத மறுப்பு, சற்காரிய வாதம், மூவகை துக்கங்கள், பசு தரிசனம், ஞானியரின் இயல்பு, குரு உபதேசப் […]

Read more

உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழாக்கம் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. கடலைக் கடக்க வேண்டுமானால் படகு முக்கியம். அதுபோல் வாழ்க்கைக் கடலைக் கடக்க குரு எனும் தோணி அவசியம். குருவின் துணையோடு வாழ்க்கைக் கடலில் குதித்து, ஒவ்வொன்றாய்க் கடந்து, பறிகு குருவையும் துறந்து ஞானக்கடலில் சுதந்தரமாக நடந்து அதனைக் கடப்பது எப்படி? சூட்சுமமான சூஃபி கதைகள் மூலம் ஓஷோ சொல்லித் தந்த ஞானவழிகாட்டல், எளிய தமிழில். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

அதுவும் இதுவும்

அதுவும் இதுவும், டாக்டர் க.விஜயகார்த்திகேயன் I.A.S., விஜயா பதிப்பகம், பக். 152, விலை 120ரூ. மருத்துவக் கல்வியை முடித்து ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்று, தற்போது கோவை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாளராகவும், பண்பட்ட பேச்சாளராகவும் விளங்குபவர். இவர் ஏற்கெனவே எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்., விடை பாதி எழுதும் பாணி பாதி என்ற இரு நூல்களையும் எளிய தமிழ் நடையில், அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதும் அரசுத் தேர்வாணைய மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூல்களாகப் படைத்து, நல்ல பாராட்டைப் பெற்றவர். இந்நூலில் […]

Read more

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?, டாக்டர் ஏ.வி.ஸ்ரீநிவாசன், லஷ்மி மோகன், நலம் வெளியீடு, பக். 128, விலை 125ரூ. தாயின் வயிற்றில் உள்ள கருவிலேயே மூளையில் நியூரான்கள் உதிக்கத் துவங்கி, குழந்தை கற்கவும் துவங்கி விடுகிறது என்பது இறைவனின் விந்தை. எந்தக் குழந்தைக்கும் முதல் மூன்று மாதத்திலேயே ஒவ்வொரு வினாடியும், 2,500 நியூரான்கள் உருவாவது, பேதமற்ற முழு முதல் கடவுளின் வித்தை. குழந்தைப் பருவத்தின், ‘சிதறும் மனநிலை’ முதல், வயோதிகத்தின் இறுதிக்கட்டமான, ‘ஒடுக்கப்பட்ட மனநிலை’ வரை, பல்வேறு காலகட்டங்களில் எண்ணங்களைத் தாங்கி நிற்கும் மூளையின் […]

Read more

நல்லிரவு

நல்லிரவு, க.விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 96, விலை 80ரூ. ‘குட் நைட்’ சொல்வது பகலிலா, இரவிலா? என்று ‘டாக் ஷோ’ நிகழ்த்தும் அளவிற்கு ‘துாங்கா உலகின்’ துாக்கம் மாறிக் கொண்டே வருகிறது. 20 வயதில் தலைகீழாக படுத்துக் கொண்டு விடிய விடிய இரவைக் கழிக்கும் ‘நவ நாகரிகர்’களால், 40 வயதில் நேராக உட்கார்ந்து மலம் கூட கழிக்க முடியாமல் போகிறது. எனவே, துாக்கமின்மைக்கு, ‘வேலை, வெட்டி’ என்று ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். ‘காரணம் இருக்கட்டும், நிவாரணம் இருக்கிறதா?’ […]

Read more
1 302 303 304 305 306 505