சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், விலை 200ரூ. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி டாக்டர் அம்பேத்கர். அதனால், அவருடைய பெயர் இந்தியாவின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் இந்த நூலில் முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே சிறப்பாக எழுதியுள்ளார். “இந்த நூலின் தலையாய நோக்கம், டாக்டர் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்பதோடு மட்டும் அல்லாமல், கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த உலகமே புகழும் ஒரு சிறந்த சட்டமேதை என்பதையும் வெளிக்கொணர்வதே ஆகும்” […]

Read more

அம்மாவின் கதை

அம்மாவின் கதை, எஸ்.கிருபாகரன், விகடன் பிரசுரம், விலை 175ரூ. தமிழகத் திரை உலகிலும், அரசியலிலும் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா. பேராசிரியராக விரும்பிய ஜெயலலிதா, “வெண்ணிற ஆடை” படத்தின் மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர். மூலம் அரசியலுக்கு வந்தார். தமிழக முதல் – அமைச்சர் ஆனார். எதிர்நீச்சல் போட்டார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் எஸ்.கிருபாகரன்.பலரும் அறிந்திராத ஜெயலலிதா வாழ்க்கையின் ஆரம்பகால நிகழ்ச்சிகள், அவர் எதிர்கொண்ட சவால்கள், எதிர்ப்புகள் என அனைத்து சம்பவங்களையும் விரிவாகவும், […]

Read more

மகாத்மா காந்தி காவியம்

  மகாத்மா காந்தி காவியம், தி.கா.இராமாநுசக் கவிராயர், காவ்யா, விலை 1700ரூ. மகாத்மா காந்தி பற்றி தமிழில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்த நூல் புதுமையானது. காந்தியின் வரலாற்றை பாடல்கள் மூலம் கூறுவது. மொத்தம் 12,285 பாடல்கள். தி.கா.இராமாநுசக் கவிராயர் சங்க காலப் பாடல்கள் போல இவ்வளவு பாடல்களை எழுதி, இந்தக் காவியத்தைப் படைத்திருக்கிறார். இது அரும்பெரும் சாதனை. மகாத்மா காந்தியே ஒரு காவியமாகத் திகழ்ந்தவர். அவரைப் போற்றும் கவிதைகள் கொண்ட இந்த நூலும் ஒரு காவியமாக அமைந்ததில் வியப்பொன்றும் இல்லை. இரண்டு பாகங்களாக […]

Read more

நல்லவற்றையே நாடுங்கள்

நல்லவற்றையே நாடுங்கள், மு.முகம்மது சலாகுதீன், பஷாரத் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 80ரூ. நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர். இவர் தமிழகத்தின் மிகப் பெரும் நாளிதழான ‘தினத்தந்தி’ வெள்ளி மலரில் அவ்வப்போது எழுதிய மதநல்லிணக்கம் மற்றும் சமயரீதியிலான கட்டுரைகளில் சிறப்பானவற்றின் தொகுப்பே இந்நூல். இக்கட்டுரைகள் ஜாதி – மத வேறுபாடின்றி பலராலும் படித்து பாராட்டப்பட்டவை. மனிதன் எத்தகைய குணநலன்களோடு – எப்படி வாழ்வது, அது சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் எப்படி ஏற்றது என்பன போன்றவற்றை குர் – ஆன் மற்றும் […]

Read more

மனிதன் புரியாத புதிர்

மனிதன் புரியாத புதிர்(Man The Unknown), அலெக்சிஸ் காரெல், முல்லை பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்நூலாசிரியர் முதல் உலகப் போரின்போது (1914-19) ராணுவ சிறப்பு மருத்துவராக அரிய சேவை புரிந்து அமெரிக்கா, பிரிட்டிஷ் போன்ற அரசுகளால் கௌரவிக்கப்பட்டு ‘நோபல்’ பரிசும் பெற்றவர். இந்நூல் மருத்துவத்தையும், மனிதனையும் விஞ்ஞானக் கண்ணோடு ஆராய்ச்சி செய்து எழுதியது. 1935ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல், உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு, பல பதிப்புகளைக் கண்டது. நமது முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாம் […]

Read more

முன்னேற்றம் உங்கள் கைகளில்

முன்னேற்றம் உங்கள் கைகளில், துடுப்பதி ரகுநாதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 125ரூ. மூத்த எழுத்தாளரான இந்நூலாசிரியர் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். கட்டுரைகள், குறுநாவல்களை படைத்துள்ளார். இவரின் ‘மாயமான காப்பகம்’ என்ற நாவல் 2013ல் வெளிவந்து, சிறந்த நாவலாக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தால் தேர்வு செய்து, விருது பெற்றது. வாழ்க்கையில் முன்னேற விரும்புவர்களுக்கு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, ஊக்கத்துடன் செயல்படத் தூண்டும் விஷயங்களை தினமலர் மற்றும் பாக்யா போன்ற பத்திரிகைகளில் இந்நூலாசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகள் வாசகர்களின் வரவேற்பை பெற்றன. அவற்றில் சிறப்பான 62 […]

Read more

நான் கண்ட அந்தமான்

நான் கண்ட அந்தமான், நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. பயணங்கள் மனிதனைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகின்றன. ஒரேபாதையில் பலர் பயணித்தாலும் ஆளுக்கு ஆள் அனுபவம் வேறுபடும். அந்தவகையில் அந்தமான் தீவுக்குச் சென்று அங்கு தான் பெற்ற அனுபவத்தை, வித்தியாசமான நடையில் பயணக்கட்டுரையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

ஊதா வண்ண இலைகளின் பாடல்

ஊதா வண்ண இலைகளின் பாடல், பி.உஷாதேவி, அகநி வெளியீடு, விலை 150ரூ. பக்குவமான பத்து சிறுகதைகளின் தொகுப்பு. வேகமாக வாசிக்க விடாமல், அனுபவங்களாய் மனதுக்குள் விரிந்து யோசித்து வாசிக்க வைக்கும் வரிகள். ஒவ்வொரு கதையும் உள்ளுக்குள் தாக்கமாய்ப் பதிவதை, தவிர்க்க முடியாது. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

பொன்னானவழி

பொன்னானவழி, பானுமதி கே., சீட் சக்ஸீட், விலை 250ரூ. ஆர்வம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் வெற்றியும் இருக்கிறது. குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு வெற்றிக்கு வழிகாட்ட பெற்றோரும், ஊக்கத்துடன் செயல்பட்டு லட்சியத்தினை அடைய பிள்ளைகளும் பெற்றோர்களும் என எல்லோரும் படிக்க வேண்டிய நூல். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

அழகு ஏன் அழகாயிருக்கிறது

அழகு ஏன் அழகாயிருக்கிறது, பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 50ரூ. அழகு வெளியே இருக்கிறதா? அல்லது உள்ளேயா? மனித மூளையின் நரம்பு மண்டலத்தில் எங்கோ ஒளிந்து கிடக்கிறது அழகுணர்ச்சி. அதுதான் மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவிக்கொண்டிருக்கிறது. அழகைப்பற்றிய ரசனை உள்ளோருக்கான அழகான நூல். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more
1 309 310 311 312 313 505