தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா, பெருமாள் நல்லமுத்து, பாவைமதி வெளியீடு, பக். 96, விலை 75ரூ. முதல் கதையில் ஆரம்பமான வேகத்தை கடைசி கதை வரை கொண்டு சென்றிருப்பது இன்னும் சுவாரசியம். ‘வாழ்க்கை, துாய்மை, ஓடுகாலி, பிச்சைக்காரி’ உள்ளிட்ட கதைகள், ஒவ்வொரு விதமாய் நம் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ‘ஜனனமும் மரணமும்’ கதை நெஞ்சை வருடுகிறது என்றால், ‘மனைவி’ கதையானது முகத்தில் அறைகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை மிக அழகாகவும் எளிமையாகவும் சொல்லியிருப்பது, நுாலாசிரியரின் திறமையைக் காட்டுகிறது. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

கவலையே வேண்டாம்

கவலையே வேண்டாம், என்.வி.சுப்பராமன், யுனிக் மீடியா இன் டெக்ரேட்டர்ஸ், பக். 152, விலை 120ரூ. வேகமான இந்த உலகில் ஏராளமான கடமைகளுக்குள் சிக்கித் தவிப்பதாயிருக்கிறது வாழ்க்கை. இதன் இடையே இல்லம், மனைவி, மக்கள் என்ற இல்லறக் கடமையும் நடக்கிறது. தேவைகளும், உளைச்சல்களும் நெருக்குகின்றன. ஒவ்வொருவருக்கும் தானே தன்வசம் இல்லாத தருணங்கள் பல. ஆயுள் இழப்பு முதல் பொருள் மற்றும் பண இழப்பு குடும்பப் பொருளாதாரத்தைத் தாக்கி விடுகிறது. இழப்புக்கு ஈடு பெறுதலே காப்பீடு. ஒருவரது ஆயுள் காப்பீட்டின் பயனாளி அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினரே என்பதை […]

Read more

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம், க.சரவணன், நீலவால் குருவி, பக். 90, விலை 80ரூ. கணினி என்ற அறிவுச் சாதனம் இன்று, குழந்தைகளுக்கு பல விஷயங்களை விரல்நுனியில் சொடுக்கிய மறுநிமிடத்தில் அளித்து விடுகிறது; அதே வேளையில், குழந்தைகளை ஒரே இடத்தில் முடக்கி விடுகிறது. இன்றைய சமூகத்தின் தேவைகள், குழந்தைகளின் உடல்நலம் குறித்த அக்கறை, வகுப்பறை எப்படி இருக்க வேண்டும்? குழந்தைகளின் விருப்பங்கள் போன்ற பல விஷயங்களை அனுபவத்தின் அடிப்படையில் அலசி, உண்மைகளின் தரவுகளைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது இந்நுால். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்நுால் சிறந்த […]

Read more

மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை

மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை, சி.எஸ். தேவ்நாத், நர்மதா பதிப்பகம், பக். 224, விலை 120ரூ. ஆய கலைகள், 64 என்பர். மிகவும் அவசியமான கலை நம் மனதை அறிகிற கலை. இன்றும், மறு உலகிலும் நமக்கு கை கொடுக்கும் கலை. பிற உயிர்களுக்கு தீங்கு செய்கிற போது, நீ உனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறாய். மற்றவர்களுக்கு சேவைகள், நன்மைகள் செய்வதன் மூலம் உன் உடலையும் உள்ளத்தையும் துாய்மைப்படுத்திக் கொள்வாய். உன்னுள் தெய்வீக ஒளி பரவி அதன் மூலம் விமோசனம் பெறுவாய் என்று தர்மத்தின் […]

Read more

கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரம், நெல்லை மணிபாரதி, மணிபாரதி பதிப்பகம், பக். 160, விலை 100ரூ. கல்லை விட மரத்துப்போன உள்ளம் கொண்ட சிவக்கொழுந்துவின் மனதில் ஈரம் இருப்பதை மிகச் சிறப்பாக உணர்த்தும் கதை, ‘கல்லுக்குள் ஈரம்!’ கண் தெரியாத குருடியிடம் பேருந்துக்காக பணம் திருடியதும், அந்தப் பெண் கூறும் பதிலும் சுவாரஸ்யமான சிறுகதையாக, ‘ஆபத்துக்கு பாவமில்லை’ உருவம் பெற்றிருக்கிறது. இந்தக் கதைகள், ரசனைக்கு ஏற்றவையாக அமைந்துள்ளன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

கல்விப் போராளி மலாலா

கல்விப் போராளி மலாலா, ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 208, விலை 180ரூ. இந்தப் புதிய தலைமுறையினருக்கு பேனா கொடுக்கப்படவில்லை என்றால் தீவிரவாதிகளால் அவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுவிடும்!’ என, பெண் கல்விப் போராளி மலாலாவின் சரிதம் முரசடிக்கிறது! தலிபான்கள் பிற்போக்குவாதிகள். பெண்கள் கல்வி பெறுவதை வெறுப்பவர்கள்.பெண் பிள்ளைகளை பள்ளிக்குச் செல்ல விடுங்கள். பள்ளிகளை மூடாதீர்கள். பெண் கல்வியின் பொருட்டு நடத்தி வரும் பெருங்கொடுமைகளை நிறுத்துங்கள் என, தலிபான்களுக்கு எச்சரிக்கை மணி அடித்துக் காட்டியவர் மலாலா. கடந்த, 2009ம் ஆண்டிலேயே, பி.பி.சி.,யின் உருது வலைப் பதிவு […]

Read more

அழகு ஏன் அழகாயிருக்கிறது?

அழகு ஏன் அழகாயிருக்கிறது?, பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 106, விலை 50ரூ. ஏஸ்தடிக்ஸ் எனும் தத்துவம் மிகப் பழமையானது. இது அழகைப் பற்றிய தத்துவம். டார்வினின் பரிணாம வாதம், சிக்மன் பிராய்டின் உளவியல் வாதம், நவீன நரம்பியல் வாதம், ஈத்தாலாஜி எனும் மிருக நடத்தையியல் ஆகியவற்றின் அடிப்படையில் அழகின் பிறப்பிடம், பயன், இலக்கணம் ஆகியவை பேசப்படுகின்றன. கலை, இலக்கிய, ஓவிய ஆர்வலர்களுக்கும், பயிற்றுவிப்போருக்கும் இந்நுால் புதிய தகவலை அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

பசும்பொன் கருவூலம்

பசும்பொன் கருவூலம், தொகுப்பும் பதிப்பும் பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 300, விலை 300ரூ. நாத்திகம், சுயநலம், பிரிவினை வாதங்களால் தமிழகம் தாழ்ந்து நின்றது. நாசமுற்று தமிழகம் வீழ்ச்சி பெற்றிருந்த நேரத்தில் தேசியமும், தெய்வீகமும் தோற்றுவிடாமல், தன் தோளில் ஏற்றிக் கொண்டு சிம்ம கர்ஜனை செய்து, வெற்றி பெற வைத்தவர் பசும்பொன் முத்துராலிங்கத் தேவர். மேடையேறி சங்கநாதம் செய்தார். தியானம், தொண்டுகள் செய்து பக்திமானாகத் திகழ்ந்தார். களத்தில் எதிர் நின்று வீரனாகப் போராடி சிறை புகுந்தார். பத்திரிகைகளில் முரசு முழங்குவது போல் எழுதியவைகளை ஆவணப்படுத்துகிறது இந்த […]

Read more

செதுக்கிய தோட்டாக்கள்

செதுக்கிய தோட்டாக்கள், ஆ.பானு, விஜயா பதிப்பகம், பக். 96, விலை 70ரூ. இன்றைய அளவில் புதுக்கவிதைகளின் வரவு மரபுக்கவிதைகளை விஞ்சிவிட்டன. எண்ணிய எண்ணங்களை இயல்பான எழுத்துச் சீற்றத்தோடு எழுதும் கலை புதுக்கவிதை வடிவங்களின் வாயிலாக வளர்ந்திருக்கிறது. இதயத்தில் தோன்றும் வலிமையான பாடுபொருள்களை இலக்கணங்களுக்கு உட்படுத்தும் சிரமங்கள் இல்லாமல் படைக்கும் தன்னம்பிக்கையும் எழுத்தாற்றலும் இளைஞரிடையே பெருகி வருவது வரவேற்கத்தக்கது. வாழ்க்கையின் நெருக்கடிகளில் வாசமூட்டும் ‘மழலை’, அன்பை அள்ளிப்பூசும் ‘அம்மா’, வரதட்சணையைச் சாடும் ‘கைக்கூலி சமூகம்’, போன்ற கவிதைகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. அங்கும் இங்கும் உரைநடைகளாகத் தெரியும் […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 96, விலை 65ரூ. பெற்றெடுத்த தாய்க்கு பின், ஒரு நல்ல இல்லத்தரசி நமக்கு வாய்ப்பதற்கு நாம் முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும். அத்தகைய இலக்கணமாக திகழ்ந்து வழிகாட்டிய இல்லறத்தாளின் பங்களிப்பை, ‘மனைவி அமைவதெல்லாம்’ என்ற வாழ்வியல் நுாலாகப் படைத்திருக்கிறார் நுாலாசிரியர். ஒவ்வொரு கணவனும், மனைவியும் படித்து பயன் பெறும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 11/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026692.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 311 312 313 314 315 505