தேவ அமுதம்

தேவ அமுதம், இரா. யுனி ஜோசப், மாவிகா அச்சகம், பக். 225, விலை 100ரூ. இரா. யுனிஜோசப் பக்தி பாடலாசிரியர், ஆலயத்தின் பாடகர் குழு தலைவராக உள்ளார். தேவ அமுதம் என்னும் இந்த இசை தொகுப்பின் வழியாக, திருவழிப்பாட்டு பாடல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில் 14 தலைப்புகளில் 303 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டிற்கு உகந்த நூல். நன்றி: தினமலர், 2/10/2016

Read more

நவரத்தினங்கள்

நவரத்தினங்கள், லில்லி சகாதேவன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 80ரூ. இன்றைய கல்வி முறை குறித்த அனைவரது எண்ணங்களையும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பதிவு செய்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/10/2016   —-   மனசுக்கு ஒரு செக்போஸ்ட், க. கார்த்திகேயன், ஜி. சிவராமன், நர்மதா பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. லட்சியம், உழைப்பு, அதற்கு தேர்ந்த முறை, அவை அழைத்துச் செல்லும் வாழ்விற்கு இந்த செக்போஸ்ட் தடையல்ல வழிகாட்டி. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை, டி.ராம்பாபு, நர்மதா பதிப்பகம், பக். 200, விலை 100ரூ. இன்றைய இளைய தலைமுறைக்கு, எச்சரிக்கையாக, செய்தியாகவுள்ள பல விஷயங்களின் தொகுப்பு இந்நூல். நன்றி: தினமலர், 2/10/2016   —- வெளிநாட்டு கல்வி வழிகாட்டி, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 464, விலை 350ரூ. எந்த கல்வியை, எந்த நாட்டில் பயிலலாம் என்பதை விளக்கி, உலக நாடுகளில் கல்வி பயில வழிகாட்டியாக அமையும் நூல் இது. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

சாஸ்திரங்கள்

சாஸ்திரங்கள் (பாகம் 2), க. கோபி கிருஷ்ணன், பொன் பதிப்பகம்,பக். 80, விலை 50ரூ. முயற்சிகளில் வெற்றியடைந்து வாழவில் வளம் பெற இந்நூலில் உள்ள சாஸ்திரங்கள் ஊக்க விசைகளாக உள்ளன நன்றி: தினமலர், 2-10-2016.   —- தமிழர் வாழ்வு நெறிக் கருவூலம், அ.சா.குருசாமி, நர்மதா வெளியீடு, விலை 50ரூ. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய நீதி நூல்களின் மூலமும், விளக்கமும் அடங்கிய புத்தகம். நன்றி; தினத்தந்தி, 14/9/2016.

Read more

தமிழக வரலாற்றுத் தடத்தில் மகளிர்

தமிழக வரலாற்றுத் தடத்தில் மகளிர், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 220ரூ. வரலாற்றில் மகளிரையும், மகளிரின் வரலாற்றையும் வெளிக்கொணரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி நூலாகும். தொடக்க காலத்திலிருந்து தமிழக மகளிர், சமூக சீர்திருத்தங்களும் மகளிர் இயக்கங்களும், மகளிர் கல்வி, விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் – தன்னாட்சி இயக்கம் வரை, விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் – காந்தியின் காலம், பெண்களும் வாக்குரிமை இயக்கமும், பெண்களின் ஆரோக்கிய நல முன்னேற்றம் ஆகிய ஏழு தலைப்பின் கீழ் சங்க காலம் முதல் 1947 வரையிலான நிகழ்வுகளை சான்றுகளின் […]

Read more

சேதுபதியின் காதலி

சேதுபதியின் காதலி, எஸ்.எம். கமலா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 150ரூ. கி.பி. 1710 முதல் 1728 வரை சேது நாட்டை ஆண்ட முத்து விசய ரகுநாத சேதுபதியின் வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட வரலாற்று புதினம். மன்னரது பண்பு நலன், கொடை, வீரம், கலைப்பணிகள் ஆகியவற்றை இப்புதினத்தின் வழியாக புலப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் எஸ்.எம். கமலா. நன்றி: தினத்தந்தி, 14/9/2016

Read more

வங்க மொழிச் சிறுகதைகள்

வங்க மொழிச் சிறுகதைகள், (தொகுப்பு 3), அஷ்ரு குமார் சிக்தார், சாகித்திய அகாதெமி, விலை 400ரூ. அரிவாள் மணையில் நறுக்கிய மீன் பாரத தேசத்தில் வளமான இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்ததில் வங்கமொழிக்காரர்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட இடமும் பெருமிதமும் உண்டு. சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு அந்தப் பெருமிதத்துக்குச் சான்று பகிர்கிறது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இருபத்தேழு சிறுகதைகளையும் எழுதியவர்கள் 1920 முதல் 1940 காலகட்டத்தில் பிறந்தவர்கள் என்கிறது முன்னுரை. பெரும்பாலும் பாரதம் விடுதலை பெற்ற சமயத்தில் வங்காளம் இருந்த அவலமான நிலையைப் […]

Read more

ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள்

ஒப்பற்ற வாழ்வு தரும் உன்னத ஆலயங்கள், வானதி பதிப்பகம், விலை 195ரூ. பனையபுரம் பனங்காட்டீசன் கோவில், பழையாறை வடதளி தர்பூரீஸ்வரர் கோவில், தேவதானப்பட்டி காமாட்சி ஆலயம், திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடியில் அமைந்துள்ள அதிசய மலைக் கோவில், போடி பரமசிவம் கோவில், பேரையூர் நாகநாதசுவாமி ஆலயம் உள்பட 33 கோவில்கள் குறித்து பனையபுரம் அதியமான எழுதிய நூல். கோவில்களின் தொன்மை சிறப்பு, புராண சிறப்பு, அங்குள்ள இறைவனை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள், வழித்தடங்கள் போன்ற முழுமையான செய்திகள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 14/9/2016

Read more

யாப்பு

யாப்பு டொனமூர் முதல் சிறிசேனா வரை, மு. திருநாவுக்கரசு, ஆகுதி பதிப்பகம், விலை 120ரூ. அரசியல் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் தொடர் தோல்வியைத் தழுவிய நிலையில் கையறு நிலையில் நிற்கிறான் ஈழத்தமிழன். அதற்கு அகத்திலும் புறத்திலும் ஆயிரம் காரணங்கள். எது காரணமாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? சோகத்தைச் சுமந்து சுணங்கிப் போக முடியுமா? சுணக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வந்திருக்கிறது மு. திருநாவுக்கரசுவின் இந்தப் புத்தகம். ஈழத்தமிழர் வாழ்க்கையை தமிழ் உணர்ச்சிமயமாக இல்லாமல், சிங்கள இனவாதமாக பார்க்காமல் மிக நுண்மையாக ஆராய்கிறார் […]

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், டாக்டர் J.V.G. சேகர், நர்மதா பதிப்பகம், பக். 368, விலை 200ரூ. வக்கீல் தொழில் புரிந்த இந்நூலாசிரியர், அதை விட்டு விட்டு இயற்கை மருத்துவத்தில் பயிற்சி பெற்று, 30 ஆண்டுகளாக அனைத்து வகையான நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து பாராட்டு பெற்று வருகிறார். இதில் இவரது மனைவி டாக்டர் மதுரம் சேகரும் யோகா, யுனானி, மற்றும் அக்கு பஞ்சர் நிபுணராக இவருக்கு துணை நிற்பது சிறப்புக்குரியது. இவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும், தங்கள் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து […]

Read more
1 454 455 456 457 458 505