கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை

கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை, திரைக்கலைஞர்கள்  அந்திமழை, அந்தி மழை, பக்.316, விலை ரூ.300. அந்திமழை இதழில் வெளிவந்த திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், மக்கள் தொடர்புத்துறையினர் என திரைப்படத்துறை சார்ந்த அனைத்து கலைஞர்களின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். கமல்ஹாசன், நாசர், பாண்டியராஜன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள், கஸ்தூரி, கெளதமி, நதியா, வரலட்சுமி உள்ளிட்ட நடிகைகள், இளையராஜா, கங்கை அமரன், டி.இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, ஆர்.ரவிக்குமார், எஸ்.பி. ஜனநாதன் உள்ளிட்ட இயக்குநர்கள் என 58 திரைப்படத்துறை […]

Read more

மனநிழல் காட்சிகளும் சலனங்களும்

மனநிழல் காட்சிகளும் சலனங்களும், ந.பிச்சமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.120. புதுக்கவிதை முன்னோடிகளுள் ஒருவரான ந.பிச்சமூர்த்தியின் கவிதையும் அல்லாத, கட்டுரையும் அல்லாத, கதையும் அல்லாத புதுவகை அனுபவத் தெறிப்புகளின் தொகுப்பு இந்நூல். வாழ்க்கையை தன் கவிதைக் கண்களால் மிக நுட்பமாக, அழகாகப் பார்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார் பிச்சமூர்த்தி. அவர் வாழ்வின் நேரடி அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன. கூடவே அவருடைய வாழ்க்கைப் பார்வையும். மிகச் சிறு விஷயங்களிலும் கூட, இந்த வாழ்க்கைப் பார்வை வெளிப்படுகிறது. பிய்ந்து போன செருப்பைப் பற்றிக் கூறும்போது, இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் […]

Read more

காந்தி வழியது உலகம்

காந்தி வழியது உலகம், பேராசிரியர் இராம் பொன்னு, சர்வோதையா இலக்கியப் பண்ணை, விலை 150ரூ. அகிம்சை வழியில் போராடி, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் மகாத்மா காந்தி. காந்தியின் அடிச்சுவட்டில், அமைதியான முறையில் தங்கள் நாட்டுக்கு பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. கறுப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையில் சித்ரவதை அனுபவித்தவர் மாண்டேலா. அவருடைய வாழ்க்கை வரலாறு உள்ளத்தை உருக்குகிறது, மற்றும் மார்டின் லூதர்கிங், தலாய்லாமா, “எல்லை காந்தி” கான் அப்துல் கபார்கான் உள்பட மொத்தம் 8 […]

Read more

கோமணம்

கோமணம், சுப்ரபாரதி மணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ. பூசாரி ஜெகந்நாதன் தலைமையில் நாலு தீர்த்த கலசத்தையும் ஐந்து நாள் நடையில் காலை ஒருவர், மாலை ஒருவர் என தலையில் சுமந்து கோமணாண்டி முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் ஒரு குழுவினரின் அனுபவங்களை மிக இயல்பாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். பாதயாத்திரை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர, ராவணன் என்ற புனைப்பெயர் பூண்ட மணி என்னும் நாஸ்திகரும் இந்த குழுவை நைசாகத் தொடர்கிறார்! குழுவினரின் கடவுள் சார்ந்த நம்பிக்கைகள், தொன்மக் […]

Read more

கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள்

கொஞ்சம் சமூக சேவை மிஞ்சும் அனுபவங்கள், ம. சுரேந்திரன், பாரதி புத்தகாலயம், விலை 160ரூ. தான் செய்யும் பணிகளுக்கு இடையே அக்கறையுடன் செய்யும் சமூக சேவை உன்னதமானது. ம. சுரேந்திரன் தனது சமூக சேவை அனுபவங்களை சுவாரஸ்யமாக இந்த நூலில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அனுபவங்களையும் அழகிய நடையால் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

நூல் ஏணி, (தலித் பார்வையில் ஆசிரியர்கள்)

நூல் ஏணி, (தலித் பார்வையில் ஆசிரியர்கள்), தொகுப்பு ரவிகுமார், மணற்கேணி பதிப்பகம், விலை 80ரூ. எல். இளையபெருமாள், ஓவியர் சந்துரு உள்ளிட்ட தமிழ் தலித் எழுத்தாளர்கள் சிலரது மாணவப் பருவ அனுபவக் கட்டுரைகள். சாதியம் வேரூன்றிக் கிடந்த அந்தக் காலத்திலும் சமத்துவத்தினை விரும்பிய ஆசிரியர்கள் தலித் மாணவர்களிடம் காட்டிய நேசத்தின் நினைவுகளுடனான நெகிழ்வான தொகுப்பு. நன்றி: குமுதம், 16/8/2017.

Read more

உபசாரம்

உபசாரம் ,சுகா, தடம் பதிப்பகம், பக்.152, விலை ரூ.130. திரைப்படத்துறையில் பணியாற்றும் நூலாசிரியர் எழுதிய 18 அனுபவம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திரைப்படத்துறையில் உள்ள படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலருடனான நூலாசிரியரின் அனுபவங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. நடிகை கல்பனா இவரை உடன் பிறவாத தம்பியாகக் கருதிப் பழகியது, வேலை நேரத்தில் முரண்பாடுகள் எழுந்தாலும் இவர் எடுக்கப் போகும் படத்தில் நடிக்க நடிகர் கலாபவன் மணி விரும்பியது, இவருக்கும் இவருடைய “வாத்தியார்‘’ பாலு மகேந்திராவுக்கும் உள்ள அன்புமிக்க அனுபவங்கள் என நெகிழ […]

Read more

பாலம்

பாலம், பி. வெங்கட்ராமன் சிறப்புமலர், விலை 20ரூ. 16 வயதில் பத்திரிகை ஆசிரியர்! “பாலம்” கல்யாணசுந்தரனார் நடத்தும் “அன்பு பாலம்” பத்திரிகை, “பி.வெங்கட்ராமன் சிறப்பு மலர்” வெளியிட்டுள்ளது. யார் இந்த வெங்கட்ராமன்? சுதந்திரத்துக்குப் பின், புதுக்கோட்டையில் இருந்து புற்றீசல் போல் குழந்தைகளுக்கான பத்திரிகைகள் புறப்பட்டன. பாலர் மலர், டமாரம், சங்கு, சுதந்திரஜோதி, டிங் டாங் என்பவை அவற்றில் சில. “டிங் டாங்” பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் 16 வயது மாணவர் பி. வெங்கட்ராமன்! தமிழ்நாட்டில் மிகக் குறைந்த வயதில் பத்திரிகை ஆசிரியர் ஆனவர் இவர்தான். […]

Read more

காக்கியின் டைரி

காக்கியின் டைரி, பெ. மாடசாமி, நேசம் பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி, உதவி ஆணையராக ஓய்வு பெற்றவர் நூலாசிரியர். காவல்துறை பணியில் தனது அனுபவங்கள் – காவல்துறையில் பணிபுரிந்த, புரியும் தனது நண்பர்களின் அனுபவங்கள் – ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார். காவல்துறையில் பணிபுரிபவர்கள் சந்திக்க வேண்டிய பல்வேறு சவால்கள், சுமக்க வேண்டிய சுமைகள், அவர்களுடைய பல்வேறு பணிநெருக்கடிகள் ஆகியவற்றை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். பலவிதமான குற்றங்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், அவர்களைப் […]

Read more

நம்மிடையே உலவும் ஆவிகள்

நம்மிடையே உலவும் ஆவிகள், விக்ரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், பக். 304, விலை 250ரூ. உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் வான் பிராக் என்ற ஆவியுலக ஆராய்ச்சியாளரின் அனுபவங்களைச் சொல்லும் இடங்கள் பிரமிப்பு. அவரைப்போலவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர்களையும் அவர்களது அனுபவங்களையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர். அந்த வகையில் ஆவியுலகத்துறையில் ஆர்வமுள்ள தமிழ் வாசகர்களை உலக அளவில் அழைத்துச் செல்லும் முயற்சி இது. படிக்கப்படிக்க சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 14/9/2016.

Read more
1 3 4 5 6