ஒளி ஓவியம் – பாகம் 1

ஒளி ஓவியம் – பாகம் 1 சி.ஜெ.ராஜ்குமார், டிஸ்கவரி புக் பேலஸ்,  பக்.118. விலை ரூ.350. ஒளிப்பதிவாளரான நூலாசிரியர் தனது அனுபவங்களிலிருந்தும், தொழில்நுட்ப அறிவிலிருந்தும் இந்நூலை உருவாக்கியிருக்கிறார். கி.மு.70,000 இல் உடைந்த பாறைகளில் இயற்கையாகக் கிடைக்கும் பாசி அல்லது விலங்குகளின் கொழுப்பை ஊற வைத்து, நெருப்பில் பற்ற வைத்து ஒளி உருவாக்கப்பட்டது எனத் தொடங்கும் ஒளியின் வரலாறு, நவீன எல்.இ.டி. விளக்குகள் வரை எழுதப்பட்டுள்ளது. ஒளியின் அளவு, தரம் ஆகியவற்றை எப்படி மதிப்பிடுவது? ஒளியின் அடர்த்தியை அளவிடும் முறைகள் எவை? எப்படி ஒளி அளவைக் […]

Read more

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு, பேரா.க. மணி, அபயம் பதிப்பகம், பக். 177, விலை 120ரூ. அறிவியல் புனைகதைகள் தமிழில் குறிப்பிட்டு வராதது பெரும் குறையே. சுஜாதாவிற்குப் பின் பலர் முயற்சித்தும், இன்னும் முழு மூச்சுடன் இயக்க முன்வரவில்லை. பேரா.க.மணியன் இத்தொகுப்பு மூலம் ‘சயன்ஸ் ஃபிக் ஷன்’ என்ற தன்மையோடு வந்திருப்பது மகிழ்ச்சி. மாயத் தோற்றங்களைப் படைக்கலமாகக் கொண்ட அயல் உயிரிகள், மகிழ்ச்சி எந்திரம் கண்டுபிடித்தவன், வெர்ச்சுவல் ரியாலிட்டியில் சிக்கிய சிறுவர்கள் என்று பல கதைக்கூறுகள் படிக்கப் படிக்க சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

ஒளி விளையாட்டு

ஒளி விளையாட்டு, எஸ்.டி. பாலகிருஷ்ணன், சி. வெங்கடேசன், அறிவியல் வெளியீடு அறிவியல் விளையாட்டுகள் பாடத்தின் ஒரு பகுதியாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறி வரும்காலம் இது. அறிவியலை விளையாட்டு ரீதியாகக் கற்க எளிமையான பல விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள இந்நூல் எஸ்.டி. பாலகிருஷ்ணன், சி. வெங்கடேசன் ஆகியோர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர். நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?

பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?, அனதோலி தொமீலின், தமிழில் நா. முகம்மது செரீபு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு பூமியின் வடிவம் தட்டையா, வட்டமா?, உருண்டையா? உருண்டை வடிவம்தான். ஆனால் இந்த உருண்டை வடிவமும், மிகச் சரியான உருண்டையா, இல்லையா? இது பற்றிய கேள்விகள் பண்டைக் காலம் முதலே பலருக்கும், குறிப்பாக விஞ்ஞானிகளிடையே தோன்றின. அந்தக் கேள்விகளிலிருந்து பூமியின் வடிவத்தைக் கண்டடைந்த விதத்தை அழகாகப் படங்களுடன் சுவைபடக் கூறுகிறது இந்த நூல். இந்த நூலை எழுதியவர் அனதோலி தொமீலின். இதை சுவாரஸ்யம் குறையாமல் […]

Read more

புத்தம் புது பூமி வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும். சு. ராஜு, உரத்த சிந்தனை பதிப்பகம், பக். 120, விலை 150ரூ. புவி அறிவியல் தொடர்பான அடிப்படைத் தகவல்களை யாவரும் புரிந்துகொள்ளும் எளிய தமிழில் தந்துள்ளார். பூமியில் செயல்படும் வெப்ப ஆற்றல் உள்ளிட்ட ஆற்றல்கள், இயற்கைப் பேரிடர்கள், மனிதக் கண்டபிடிப்பால் சுற்றுச்து பூமியைப் பாதுகாத்து எப்போதும் இது ‘புத்தம் புது பூமியாக விளங்கிட’ நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய நூல். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

அறிவியல் புதையல்

அறிவியல் புதையல், டாக்டர் குமார் கணேசன், இன் அண்டு அவுட் சென்னை பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக எளிய தமிழில் எழுதப்பட்ட 20 அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 28/9/2016.   —-   புனித கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துகள், இந்திய வரலாற்று ஆய்வாளர் வி.பி. ராமராஜ், மணிமேகலைப் பிரசுரம், விலை 85ரூ. புனித கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் கூறும் அரிய கருத்துக்களை உலகில் உள்ள அனைத்து இன மக்களும் படித்துப் புரிந்து கொண்டு […]

Read more

நல்ல சோறு

நல்ல சோறு, ராஜமுருகன், விகடன் பிரசுரம், பக். 176,விலை 120ரூ. கேழ்வரகு அல்வா, குதிரை வாலி கீரை ஃப்ரைடு ரைஸ், தினை பால் கொழுக்கட்டை, கேழ்வரகு லட்டு, சோள கார பணியாரம், கம்பு காரப் புட்டு, சாமை ஆப்பம், சாமை கொழுக்கட்டை, பனிவரகு பால் பணியாரம், தினை பர்ஃபி, கொள்ளு லட்டு… இவ்வாறு சிறுதானியங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பல உணவுப் பொருட்கள், இனிப்புகள், தின்பண்டங்கள் ஆகியவற்றின் செய்முறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. உடனே இது சமையற் குறிப்பு நூல் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். அதற்கும் மேலாக, […]

Read more

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள்

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள், அரு. வி. சிவபாரதி, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 120ரூ. வேதியியலில் சாதனை புரிந்த அறிவியல் அறிஞர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் பற்றி எழுதப்பட்ட நூல். மாணவர்களுக்கு உபயோகமான நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —-   ஐந்திரன் கவிதைகள், ஐந்திரன், லெனின் விஜி பதிப்பகம், பக். 260, விலை 120ரூ. சமூக அவலங்களை உடுத்துக் கூறும் மக்களுக்கான கவிதைகள். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.

Read more

கடல்களும் கண்டங்களும்

கடல்களும் கண்டங்களும், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. அறிவியல் நூல்களை எழுதுவதில் புகழ் பெற்ற “வாண்டுமாமா” எழுதிய நூல் “கடல்களும் கண்டங்களும்”. “உலகம் உருண்டையானது அல்ல; தட்டையானது” என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அஞ்சா நெஞ்சம் படைத்த சிலர் கடலின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் கப்பலில் பயணம் செய்து, புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். அவர்களில், அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல் மார்க்கத்தை கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கேப்டன் குக், கனடாவை கண்டுபிடித்த ஜான் கபாட் உள்பட 14 […]

Read more

புதிய பூமி சூடான சூரியன்

புதிய பூமி சூடான சூரியன், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 60ரூ. பூமி பற்றியும் சூரியன் பற்றியும் அறிவயல் பூர்வமான உண்மைகளை, அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துச் சொன்னதை, நூலாசிரியர் எளிய மொழியில் தந்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- மெரிவின் நூல்களின் மதிப்பும் மாண்பும், மெர்வின் வெளியீடு, பக். 112, விலை 50ரூ. வாழும்போதே சமுதாயத்திற்காக நல்ல நூல்களை எழுதி, அதனை மதிப்பீடும் செய்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more
1 11 12 13 14 15 21