உன்னை நீ மறந்ததேன்?

உன்னை நீ மறந்ததேன்?, அ. கீதன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 168, விலை 100ரூ. ஒரு தனிமனிதனின் வாழ்க்கைத் தேடல்கள், சவால்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி இவை யாவும் ஒரு மனோதத்துவ நிபுணரின் எழுத்துக்களாக பிரதிபலிக்கின்றன. நன்றி: குமுதம், 28/3/2016.   —- பள்ளு இலக்கியமும் சமுதாயப் பார்வையும், முனைவர் அகிலா சிவசங்கர், தாரிணி பதிப்பகம், பக். 220, விலை 250ரூ. 17,18ம் நூற்றாண்டின் உழவர்கள், அவர்களின் உழைப்பு, களிப்பு, பக்தி என்று கழிந்த அவர்களின் வாழ்க்கை முறைக்கே உரிய நெறிமுறைகளை எடுத்துக்காட்டும் ஆய்வு நூல். […]

Read more

அணுத்துகள்

அணுத்துகள், க. மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 196, விலை 160ரூ. அறிவியலை மிக எளிமையாக எழுத முடியும் என்பதற்கு இந்நூலே சான்று. உலகின் எல்லாப் பொருட்களுக்கும் அடிப்படையான அணுவைப் பற்றி மிக விரிவாக இந்நூல் கூறுகிறது. அணுவோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் எளிமையாக, சுவையாக நூல் விளக்குகிறது. உதாரணமாக ‘ரயில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கும்போது நிற்காமல் படுவேகத்தில் கடந்து செல்லும் ரயிலின் சங்கொலி படிப்படியாகச் சுருதி குறைந்து கீழ் ஸ்தாயிக்கு நகர்வதை ஒலியியலில் டாப்ளர் விளைவு என்பார்கள். ‘விசைத்துகள்களை தாதுத் […]

Read more

பெருவெடி பிரபஞ்ச வரலாறு

பெருவெடி பிரபஞ்ச வரலாறு, எம்.எஸ். முகமது பாதுஷா, எஸ்.டி. பாலகிருஷ்ணன், அறிவியல் வெளியீடு, விலை 75ரூ. நம்மைச் சுற்றியுள்ள அண்டங்கள் எவ்வாறு தோன்றின என்பதை விளக்கும் சிறுவர்களுக்கான அறிவியல் விளக்க நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள், அரு.வி. சிவபாரதி, நேஷனல் பப்ளிகேஷன்ஸ், பக். 104, விலை 70ரூ. பொருளாதாரத்தில் சாதனை புரிந்த அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் மிக அழகாக எடுத்துக்கூறும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.

Read more

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை, வி. கந்தவனம், காந்தளகம், விலை 600ரூ. இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் வி. கந்தவனம் எழுதிய நூல் இது. சங்க காலத்து மாந்தர்களின் காதல் வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறையையும், அக்கால பழக்க, வழக்கங்களையும் அறிய இந்நூல் பெரிதும் பயன்படும். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கண்கவரும் வண்ணப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.   —- ஆவியின் டைரி, பேரா. க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 120ரூ. […]

Read more

பெண்ணியம் அகலமும் ஆழமும்

பெண்ணியம் அகலமும் ஆழமும், பேராசிரியர் இரா. பிரேமா, காவ்யா, விலை 1100ரூ. பெண்ணியம் என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம் சமுதாயத்தில் பரவலாக பரவி வருகிறது. பெண்களை அடிமைத் தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வூட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமாகும். அந்த வகையில் நீண்ட காலம் ஆய்வு செய்து இந்த நூலை பேராசிரியர் இரா. பிரேமா படைத்துள்ளார். எது பெண்ணியம்? வெளிநாட்டு மற்றும் இந்திய பெண்ணிய கோட்பாளர்கள் பற்றிய குறிப்புகள், இலக்கணம், இலக்கியம் மற்றும் […]

Read more

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இண்டக்ரேட்டர், பக். 144, விலை 120ரூ. இயற்கை விவசாய ஆராய்ச்சி விஞ்ஞானியான நூலாசிரியர், செயற்கை ரசாயன உரங்களால் நமது மண் மாசடைந்து, விவசாயம் செய்யவே தகுதியற்றதாக மாறிவிட்டதைக் கண்டு கொதித்து எழுபவர். அவருடைய இயற்கை விவசாயம் சார்ந்த தேடல்கள், அனுபவங்கள், தெளிவான கருத்துகளின் தொகுப்பே இந்நூல். பசுமைப் புரட்சிக்கு முன்பே நிலத்தில் ரசாயன உரங்களைப் போடும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது என்று நூலாசிரியர் எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை […]

Read more

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், விலை 360ரூ. திருமந்திரத்தில் பல்வேறு நிலைகளில் தாவரங்கள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித வாழ்க்கையும், இறைவழிபாட்டையும், யோக நிலையையும் தாவரங்களோடு இணைத்து திருமூலர் தனது திருமந்திரத்தில் 229 பாடல்களில் 86 தாவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தாவரங்களை அடையாளம் கண்டு, அத்தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிடுவதுடன், ஒவ்வொரு தாவரம் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தாவரம் இடம் பெற்ற பாடலடிகள், தாவரங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியவை இந்நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன. நன்றி: […]

Read more

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 295, விலை 360ரூ. திருமூலரை சித்தர், முனிவர், யோகி, ஞானி என்றெல்லாம் பலரும் அறிந்திருப்பர். ஆனால் அவர் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், கணித மேதையாகவும், தாவரவியல் நிபுணராவும், புவியியல் வல்லுநராகவும், மருத்துவ நிபுணராகவும் விளங்கியுள்ளார் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. திருமூலரின் ஆன்மா, கடவுள் பற்றிய கணக்கியல், திருமூலரும் புவி இயலும், திருமூலம் சித்த மருத்துவமும், உடற்கூற்றியலும், திருமூலரின் கருவுறுதல் தத்துவம், திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள தாவரங்களின் வகைகள், அத்தாவரங்கள் பற்றிய விளக்கங்கள், தாவரங்களின் வண்ண ஓளிப்படங்கள் […]

Read more

பெருவெடி பிரபஞ்ச வரலாறு

பெருவெடி பிரபஞ்ச வரலாறு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 75ரூ. குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் அறிமுக நூல். பெருவெடிப்பு நிகழ்வில் இருந்து பிரபஞ்சம் உருவாகி, கோள்களும், உயிரினங்களும் வந்த வரலாற்றை குழந்தைகளுக்காக படக்கதைபோல வண்ணப்படங்களுடன் எளிமையாக உருவாக்கி வழங்கி உள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக சித்தர்கள் அருளிய நெறிமுறைகள், சகுந்தலை நிலையம், சென்னை, விலை 35ரூ. துன்பம் தருகிற கிரகங்களை வேதங்களில் ரிஷிகள் உபதேசித்த நெறிமுறை வணங்கி வழிபட்டால் […]

Read more

டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது

டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?, அருண் நரசிம்மன், அம்ருதா பதிப்பகம், பக். 240, விலை 210ரூ. நம் தமிழ் சூழலில், அறிவியல் நூல்களின் வரத்து கம்மிதான். இந்த நிலையில் அருண் நரசிம்மன், இந்த நூல், தமிழில் அறிவியலை வாசிக்க விரும்புவோருக்கு ராஜ விருந்து. ஹளேபீடு சிற்பங்களை அருமை பெருமைகளை விளக்கிச் சொல்ல, ஒரு சிற்பபக்கலை வல்லுனரே நம் உடன் வந்தால் எப்படி இருக்கும். அப்படி இருக்கின்றன சென்னை ஐ.ஐ.டி. யில் பணியாற்றும் நூலாசிரியரின் அறிவியல் கட்டுரைகள். இத்தொகுப்பில் 25 கட்டுரைகளில் உயிரியல், […]

Read more
1 12 13 14 15 16 21