உலகத்தின் தோற்றமும் வரலாறும்

உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், பக். 272, விலை 170ரூ. புவியின் 460கோடி ஆண்டுகள் வரலாற்றை, 17 தலைப்புகளின் கீழ் சுருக்கி தந்துள்ளார் ஆசிரியர். உலக தோற்றத்திற்கான அணுக்கள் பற்றி சிறிய விளக்கத்தோடு, புவியின் வரலாற்றை துவங்குகிறார். இயங்குகின்ற ஒன்று, வளர்ச்சியை பெறும் ஒன்று, மாற்றத்தை அடையும் என்பதற்கிணங்க, அணுக்கள், பிரம்மாண்ட விண்பாறைகளாக உருவம் பெற்றன என, எளிய உரைநடையில் அறிவியலை தருகிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையிலும், தேவைப்படும் இடங்கள் எல்லாம், அதற்குரிய படங்களை தந்துள்ளது பாராட்டத்தக்கது. குரங்குகளில் […]

Read more

சிறகை விரிக்கும் மங்கள்யான்

சிறகை விரிக்கும் மங்கள்யான், தந்தி பதிப்பகம், பக். 256, விலை 180ரூ. கையருகே செவ்வாய் 2013ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி பூமியில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இந்த நிகழ்வுகளை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அறிவியல் திறனோடு எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் நேர்முக வர்ணனை செய்வதைப் போல தினத்தந்தியில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். செவ்வாய்ப் பயணம் ஏன்? செயற்கைக்கோள் பற்றிய தகவல்கள், செயற்கைக்கோளின் வடிவமைப்பு, பயண வழியைத் தேர்ந்தெடுப்பது எப்படி? செவ்வாய் கிரகத்தில் […]

Read more

திருக்குர்ஆன் விளக்கவுரை

திருக்குர்ஆன் விளக்கவுரை, இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், சென்னை, விலை 130ரூ. திருக்குர்ஆனுக்கு மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ரஹ்) எழுதிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. இதை இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே அல் பாத்திஹா, அல் கஹ்பு ஆகிய இரு அத்தியாயங்களையும், அதைத் தொடர்ந்து மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்களையும், இதன் பின்னர் அல் அராப் என்ற அத்தியாயத்தையும் வெளியிட்டது. இப்போது இந்த நூல் அல்அன்பால், அத்தவ்பா ஆகிய அத்தியாயங்களுக்கான விளக்கவுரையை தமிழில் மவுலவி எம்.ஐ. […]

Read more

யுரேகா கோர்ட்

யுரேகா கோர்ட், இரா. நடராசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 158, விலை 150ரூ. 2014ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இரா. நடராசனின் சிறந்த படைப்பு. தொழில்நுட்ப வசதிகள் பெருகியதால் குழந்தைகளுக்கும் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில், அவர்களைப் படிக்க வைப்பதற்காக அறிவியலையும், செயல்விளக்கங்களையும் பயன்படுத்தியிருக்கும் உத்தி மிகவும் பிரமாதம். அவர்களைப் புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதாக அமைந்துள்ள எழுத்து நடை, இந்நூலின் தனிச்சிறப்பு. கதைகளின் ஊடே அறிவியல் தகவல்களைப் […]

Read more

நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்

நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும், விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், வெளியீடு தமிழ் நாடு அறிவியல் இயக்கம், சென்னை, விலை 90ரூ. தேனியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசாங்கம் ரூ.1500 கோடி ஒதுக்கியுள்ளது என்ற செய்தி வந்தவுடனே அதை வரவேற்றும், இல்லை இல்லை சுற்றுச்சூழலை அது பாதிக்கும், மக்களுக்கு ஆபத்துக்களை ளவிளைவிக்கும் என்ற எதிர்ப்பு கருத்துக்களும் உருவாயின. ஆனால் இந்த ஆய்வுக்கூடத்தால் எந்த ஆபத்தோ, அச்சமோ இல்லை. உலகளவில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் ஆய்வுக்கூடமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் […]

Read more

எங்கெங்கு காணினும் அறிவியல்

எங்கெங்கு காணினும் அறிவியல், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 128, விலை 60ரூ. நாற்பது அறிவியல் தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பு இந்நூல். புதுப்புது அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள், சுவாரசியமான தகவல்கள். ஜாவாத் துவில் கி.பி. 1891 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய இனத்தை அடையாளம் காட்டுகிறதாம். இதனை பித்திக்காந்த்ரோப்பஸ் எரக்டஸ் என்கின்றனர் மானிடவியலாளர். ஜாவா மனிதனும், பீப்கிங் மனிதனும் ஒரே மரபுடையவர்கள். இவ்வினத்தினை இன்றைய மங்கோலாய்டு என்று கூறலாம் என்ற தகவல்களை இந்திய […]

Read more

நேனோ ஓர் அறிமுகம்

நேனோ ஓர் அறிமுகம், அருண் நரசிம்மன், தமிழினி, பக். 96, விலை 75ரூ. இயற்கை நிகழ்வுகளில் புதைந்திருக்கும் நேனோ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும் திருப்தியும், இந்த நூலின் 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன. கி.மு. 7ம் நூற்றாண்டில் துவங்கி, 2013ம் ஆண்டு வரை, நேனோ தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட பரிணாம மாற்றங்களும், மைல் கற்களும் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள், நேனோ சார்ந்தவை. எவை நேனோ அல்லாதது என்ற […]

Read more

தமிழன் தொடுத்த போர்

தமிழன் தொடுத்த போர், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை, விலை 80ரூ. 1965-ம் ஆண்டில், பக்தவச்சலம் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். அதை இளைய தலைமுறையினர் நன்கு அறிவார்கள். இதற்கு முன், 1938ல் நடந்ததுதான் முதலாவது இந்தி எதிர்ப்பு போராட்டம். இதற்கு ஈ.வெ.ரா. பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தலைமை தாங்கினார்கள். தாளமுத்து, நடராசன் என்ற இரு தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அப்போராட்டத்தின் முழு விவரங்களையும் பேராசிரியர் மா. இளஞ்செழியன் எழுதியுள்ளார். அந்த நூலை, […]

Read more

முயற்சியே முன்னேற்றம்

முயற்சியே முன்னேற்றம், மெர்வின், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும் நூல்களை எழுதுவதில் புகழ்பெற்ற மெர்வின் எழுதிய புத்தகம் இது. “முயற்சி திருவினையாக்கும்” என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இப்புத்தகத்தின் விலை 60ரூ. “உழைப்போம் உயர்வோம்” விலை 80ரூ. உயர்வு தரும் உன்னத சம்பவங்கள் விலை 70ரூ ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். மூன்று புத்தகங்களையும் வெளியிட்டோர் குமரன் பதிப்பகம். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.   —- அனைத்து நோய்களுக்கும் யோகாகசன மருத்துவம், ஜவ்வை இஜெட், முஜீப் இந்தியா கிரியேசன், […]

Read more

அணு அதிசயம் அற்புதம் அபாயம்

அணு அதிசயம் அற்புதம் அபாயம், என். ராமதுரை, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-143-3.html குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் அணு என்றால் என்ன? புரோட்டான், எலக்ட்ரான், நியுட்ரான் என்றால் என்ன? ஐசோடோப் என்றால் என்ன? கதிர்வீச்சு என்றால் என்ன? அணு மின்கலங்கள் நம்பகமானவையா? அணுப்பிளப்புக்கும் அணுச்சேர்க்கைக்கும் என்ன வித்தியாசம்? என அணுவைச் சுற்றிச் சுற்றி அனைத்து விஷயங்களையும் கூறும் நூல். சித்தர்களின் இரசவாதம் மூலம் ஒரு பொருளைத் தங்கமாக மாற்ற முடியாது. […]

Read more
1 13 14 15 16 17 21