மதுரை நகரக் கோவில்கள்

மதுரை நகரக் கோவில்கள், டி.வி.எஸ்.மணியன், அமராவதி பதிப்பகம், பக். 200, விலை 130ரூ. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார் அவ்வையார். கோவில் நகரம் என்றே அன்று முதல் இன்று வரை போற்றப்படுவது மதுரை மாநகரம். இங்குள்ள, 20 கோவில்களின் விபரங்களை இந்த நுால் அழகுடன் விளக்குகிறது. இலக்கிய வளமும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க, மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர் கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்களின் விளக்கங்கள் அருமை. மதுரை மீனாட்சி கோவிலில், குலசேகரப் பாண்டியன் வரலாறு, 64 […]

Read more

வெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்

வெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 176, விலை 145ரூ. தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் சிறந்தவர் என்று போற்றப் பெறும் திருமூலர், 3,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், திருமந்திரப் பாடல்கள், 3,000 இயற்றினார் என்றும் கூறுவர். திருமந்திரப் பாடல்களில் கூறப் பெற்றுள்ள கருத்துக்கள் மனித வாழ்க்கைக்குப் பயன்படுவன. முயலும் செயல்களில் வெற்றி பெற திருமந்திரம் துணை செய்யும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள் பலவும் திருமந்திரத்தில் உள்ளன என்பதை நுாலாசிரியர் எளிய முறையில் விளக்கியுள்ளார். ‘அன்பும் சிவமும் இரண்டல்ல. […]

Read more

அருணகிரி நாதர் பாடிய அருட்தலங்கள்

அருணகிரி நாதர் பாடிய அருட்தலங்கள், ஆர்.சி.சம்பத், சாமி வெளியீடு, பக். 308, விலை 190ரூ. முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருத்தலங்கள் மட்டுமல்லாது, பிற தெய்வங்கள் மீது அருணகிரிநாதர் பாடிய திருத்தலங்களைப் பற்றியுமான இந்நுால் ஒரு முழுமையான வரலாற்று நுாலாகத் திகழ்கிறது. 49 திருத்தலங்களைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார் நுாலாசிரியர். ஒவ்வொரு திருத்தலத்தின் பெயர்க் காரணம், அங்கு நிகழ்வுற்ற புராண நிகழ்வு, அத்திருத்தலத்தில் குடி கொண்டுள்ள இறைவன், இறைவி, ஏனைய தெய்வங்கள் என அத்தனையும் மொத்தமாக நுாலுள் தொகுத்து வழங்கியுள்ளார். பழநி – திருஆவினன்குடி […]

Read more

கந்தபுராணம்

கந்தபுராணம், ஈரோடு தங்க விசுவநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 284, விலை 200ரூ. கந்தனின் சிந்தனைகளை சங்க இலக்கியம் முதல் நாமக்கல் கவிஞர் வரை பலரது பாடல்களில் இருந்தும் முதல், 200 பக்கங்களில் இந்நுாலாசிரியர் தொகுத்துள்ளார். உணவகத்தில் சென்று அமர்ந்ததும் உள்ளே இருக்கும் உணவு வகைகளைக் காட்டும் விலைப் பட்டியல் (மெனு) கையில் தந்து விடுவர். ஆனால், அண்மையில், வரும் பல நுால்களின் முதல் இடத்தில், ‘பொருளடக்கம்’ இருப்பதில்லை. இந்த நுாலிலும் ‘கந்த புராணம்’ தலைப்பைப் பார்த்து, வெகு ஆர்வமுடன் தேடினேன். கடைசி, 84வது […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. கல்கி குழுமத்தின் ‘தீபம்’ ஆன்மிக இதழில் தொடராக வந்த கட்டுரைகள் இவை. நீர்வளம் குன்றிய பாலாற்றின் கரையில் இத்தனை வரலாற்றுச் சிறப்புடைய கோயில்களா என்று பிரமிக்கப் பண்ணுகிற முப்பத்தொன்பது கட்டுரைகள். தரிசன நேரம், செல்லும் வழி போன்ற அவசியமான தகவல்களையும் கொண்ட நல்ல நூல். நன்றி: கல்கி, 3/12/2017.

Read more

ஐயப்பனின் முத்துமணி மாலை

ஐயப்பனின் முத்துமணி மாலை, புலவர் வெய்கை முத்து, மு.கல்யாணி பதிப்பகம், விலை 100ரூ. ஐயப்பன் வரலாறும், ஐயப்பன் பாடல்களும் அடங்கிய நூல். புத்தகம் கண்ணுக்கு அழகாகவும், கருத்துக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

அய்ந்தைந்தாய்

அய்ந்தைந்தாய், க.பன்னீர்செல்வம், பரத் புக்ஸ், விலை 115ரூ. ஐங்கர விநாயகர், பஞ்ச சக்திகள், ஐந்து வகை நந்திகள், ஐந்தெழுத்து மந்திரம், இறைவனின் ஐந்தொழில், திருமாலின் ஐந்து படைகள், சிவனின் ஐந்து சபைகள் இப்படி ஐந்துடன் கூடிய அரிய பல தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

சவுந்தரியலகரி மூலமும் மொழிபெயர்ப்பும்

சவுந்தரியலகரி மூலமும் மொழிபெயர்ப்பும், வே.ராஜேஸ்வரி, ஷாந்து பதிப்பகம், விலை 200ரூ. முனைவர் பட்டத்துக்காக நூலாசிரியர் ‘சவுந்தரியலகரி மூலமும் மொழிபெயர்ப்பும் – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 7 தலைப்புகளில் எழுதி உள்ளார். இதில் வடமொழியில் எழுதப்பட்ட ஆதிசங்கரரின் சவுந்தரியலகரியும், அதன் மொழிபெயர்ப்பான வீரகவிராச பண்டிதர் எழுதிய சவுந்தரியலகரியும் மொழிபெயர்ப்பு நோக்கில் ஆய்வு செய்யப்பட்டு பல தகவல்களை நூலாசிரியர் வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்

இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம், தமிழில் ரஷீத் ஹஜ்ஜுல், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 150ரூ. இஸ்லாத்தின் தன்னிகரில்லாத கொள்கைகளையும், நடைமுறைகளையும் குர்ஆனும், நபிமொழியும் பேசுகின்றன. இஸ்லாத்தின் விஷயதானங்களை அவற்றின் இயல்புகளோடு உள் வாங்கி எளிமையாகவும், அறிவுபூர்வமாகவும் இஸ்லாமிய அழைப்பாளர்கள் முன்வைக்க வேண்டும். இதன் மூலம் குழப்பங்கள் தெளிவடையும். சந்தேகங்கள் நீங்கும். அன்பு, சகோதரத்துவம் வளரும், புரிந்துணர்வுகள் அதிகரிக்கும். இஸ்லாம் பற்றிய பிழையான புரிதல்கள் அகலும். இந்த அடிப்படையில், இஸ்லாமிய அழைப்பாளர்களின் அழைப்பு மொழியின் தரத்தை நெறிப்படுத்தும் வகையில் அற்புதமான வழிமுறைகளை அல்லாமா யூசுப் […]

Read more

பாலாற்றங்கரை தெய்வங்கள்

பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம், பக். 136, விலை 80ரூ. இந்நூலாசிரியர் கல்கிப் பத்திரிகையில் எண்ணற்ற அரசியல் கட்டுரைகள், பேட்டிகள் என்று சுமார் 35 வருடங்கள் எழுத்துப் பணியாற்றியவர். தவிர, ‘கல்கி’ குழுமத்தின் ‘தீபம்’ என்ற ஆன்மிக இதழில் ‘பாலாற்றங்கரைத் தெய்வங்கள்’ என்ற தலைப்பிலேயே, இவர் எழுதிய திருத்தலங்களைப் பற்றிய கட்டுரைகள் வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அவற்றின் தொகுப்பே இந்த நூல். இந்தியாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதா, கோதாவரி, காவிரிஆகிய ஏழு நதிகள் புண்ணிய நதிகள் என்று […]

Read more
1 41 42 43 44 45 128