ஹைட்ரோ கார்பன் அபாயம்

ஹைட்ரோ கார்பன் அபாயம், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், விலை 225ரூ. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வேளாண் பூமியாகத் திகழ்ந்துவரும் காவிரிப் படுகை, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகக் குறிவைக்கப்படுவது பெரும் முரணாக மாறியிருக்கிறது. வலுக்கட்டாயமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசுக்கும் இயற்கை சார்ந்த வாழ்வாதாரத்தைப் போற்றும் மக்களுக்கு இடையிலான மோதலாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால் ஓ.என்.ஜி.சி.யோ. ‘இது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்’ என்கிறது. இவற்றில் உண்மை என்னவென்பதை அறிவியல் பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் அலசி ஆராய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல், நீ சீ. சுந்தராமன், பன்னிரு திருமுறை மன்றம், பக். 208, விலை 100ரூ. விநாயகர் வழிபாட்டில், தமிழ் மூதாட்டி அவ்வை எழுதிய விநாயகர் அகவலுக்கு முக்கிய இடம் உண்டு. விநாயகர் அகவலை தினமும் படித்தால், வாழ்க்கையில் தோல்வியே ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. விநாயகர் அகவல் தமிழில் இருந்தாலும், அதை புரிந்து கொள்வது கடினம். யோக அடிப்படையில், விநாயகரை பற்றி அவ்வை பாடியுள்ளார். அந்த வகையில், விநாயகர் அகவலுக்கு இந்நுாலில் சிறப்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் அகவல் படிப்பவர்கள், இந்நுாலை படித்தால், […]

Read more

புத்தரின் போதனைகள் தீக நிகாயம்

புத்தரின் போதனைகள் தீக நிகாயம், பிக்கு போதிபால மகாதேரோ மற்றும் திரிபீடகத் தமிழாக்கக் குழுவினர், திரிபிடகக் குழுவினர், விலை 500ரூ. புத்தர் பெருமாள் 84ஆயிரம் போதனைகளைத் தமது தாய் மொழியான பாலி மொழியில் சீடர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதித்துள்ளார். இது காலப்போக்கில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. தொடர்ந்து 21-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ் மொழியிலும் வெளிவரத் தொடங்கி உள்ளது. அதனுடைய முதல்நூல்தான் இது. இதில் ஒழுக்கவியல் மற்றும் பெரும் இயல் கீழ் 34 பிரிவுகளில் புத்தரின் போதனைகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் […]

Read more

குமரி நாட்டில் சமணம் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி

குமரி நாட்டில் சமணம் – தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி, சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.615, விலைரூ.650. தமிழகத்தின் பழங்கால சமயங்களில் சமணமும் ஒன்று. சமண சமயத்தைச் சேர்ந்த அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிர், அருவாளர்களோடு தென்னகத்திற்கு வந்து, காடுகளை அழித்து நாடுகளாக்கி மக்களைக் குடியேற்றினார் என்பதும், வடக்கிலிருந்து பத்திரபாகு என்ற சமண முனிவர் மைசூர் நாட்டில் உள்ள சிரவணபௌகெள குகையில் தங்கி, அவருடைய சீடரான விசாக முனிவரை சமண மதத்தைப் பரப்புவதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதும் சமண மதம் வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்தது என்பதையே சொல்கின்றன. […]

Read more

ஸ்ரீ ஐயப்பன் பஜனைப் பாடல்கள்

ஸ்ரீ ஐயப்பன் பஜனைப் பாடல்கள், பாலசர்மா, ஸ்ரீ விக்னேஷ் பதிப்பகம், விலை 30ரூ. சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் படிப்பதற்காக ஐயப்பன் பஜனைப் பாடல்கள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

நாங்கள் நலம் நீங்கள் நலம் பெற

நாங்கள் நலம் நீங்கள் நலம் பெற, B.R.பொன்னம்பலம், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடிய விஷயங்கள் அடங்கிய புத்தகம். பெண்களுக்கு நூலாசிரியர் பி.ஆர்.பொன்னம்பலம் கூறும் சில குறிப்புகள் பெண்கள் இருளில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது. விளக்கு வைத்தபின், வளையல்களை கழற்றக்கூடாது. செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால், இரவு வீடு திரும்பி விட வேண்டும். அன்று பிறர் வீடுகளில் தங்கக்கூடாது. உப்பைத் தரையில் சிந்தக்கூடாது. அரியைக் கழுவும்போது தரையில் சிந்தக்கூடாது. இப்படி நிறைய குறிப்புகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. […]

Read more

முத்தும் பவளமும்

முத்தும் பவளமும், தொகுப்பாசிரியர் முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ, சாஜிதா புக் சென்டர், பக். 944, விலை 400ரூ. இஸ்லாமிய வாழக்கைக்கு வழிகாட்டியாக இருப்பவை திருக்குர்ஆனும், ஹதீஸும். குர்ஆன் என்பது இறைவன் அருளிய வேதம். ஹதீஸ் என்பது நபிகள் நாயகம்(ஸல்)) அவர்கள் அருளிய வாழ்க்கை நெறி. இஸ்லாமியர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள், தனது வாழ்க்கை முறையைக் கொண்டே வழிகாட்டினார்கள். அவற்றின் தொகுப்பே ஹதீஸ் நூல்கள். இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், வியாபாரம், கல்வி சமூக […]

Read more

தமிழ்த் திருமணம்

தமிழ்த் திருமணம், மாருதி தாசன், நர்மதா பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. துணையை முறைப்படுத்தும் செயலே திருமணமாகும். திருமணம் என்பது உயர்ந்த நெறி; தெய்வீக நெறி. காதல் வயப்படுவது உயிர் இயற்கை. அது கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு செய்யப்படும் சடங்கே திருமணம். காலத்துக்குக் காலம் திருமணச் சடங்குகள் மாறலாம்; நாட்டுக்கு நாடு மாறலாம். ஆயினும், இரண்டு உள்ளங்களின் பிணைப்பே மணம் என்பது உறுதியான ஒன்று. இந்நுால், திருக்கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிவோருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 17/12/2017.

Read more

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம், தொகுப்பாளர்: எஸ்.சென்ன கேசவ பெருமாள், நர்மதா பதிப்பகம், பக். 480, விலை ரூ.300. இந்து சமயம் தொடர்பாக பல்வேறு நாளிதழ்களில் வந்த பல்வேறு தகவல்களை, கட்டுரைகளை, செய்திகளை இந்நூல் தொகுத்து தருகிறது. இறைவனின் தன்மைகள் எவை? இந்து மதத்தின் ஆச்சாரியார்களின் தத்துவங்கள் எவை? ஆலயங்களின் அமைப்பு எவ்வாறு இருக்கிறது? ஆலயங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் எவை? ஆலயங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன? வழிபடும் முறைகள், மார்க்கங்கள், அனுஷ்டானங்கள் எவை? இந்து மதம் சார்ந்த வேதங்கள், ஆகமங்கள், உபநிஷத்துகள், சாஸ்திரங்கள் என்ன […]

Read more

இயேசு அந்தாதி

இயேசு அந்தாதி, வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், பக்.48, விலை 100ரூ. இயேசுவின் இறையருளைப் பற்றியும், மானிடக் குலத்துக்கு எடுத்துக் கூறும் போதனைகளையும் நல்ல கவிநயத்துடன் தன் கவிதை யில் ஓட விட்டுள்ளார் நுால் ஆசிரியர். நல்ல சொல்வளம், கவித்துவம், காவியம் முழுவதும் நிரம்பி, கவிமணம் வீசுகிறது. உலகைப் படைத்தவரே உவந்து மனித உருவில் வந்தார். தன் மானுடவதாரத்தின் முக்கிய மனிதன் நல்லவனாக வாழ வேண்டும்; தீமையை விட்டு விலக வேண்டும். அதுவே, இம்மையிலும் மறுமையிலும் மனிதனுக்கு நன்மை பயப்பதாக அமையும் என்கிறது இந்நுால். நன்றி: […]

Read more
1 40 41 42 43 44 128