ஆலயம் வழிபாடு

ஆலயம் வழிபாடு, முனைவர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமாள், பக்.136, விலை 100ரூ. சிவாலய வழிபாடு பற்றிய ஒன்பது கட்டுரைகள் நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன. சிவாலய வழிபாட்டின் நுட்பங்கள் முதல் கட்டுரையில் தரப்பட்டுள்ளன. சிவலிங்கம் யோக நிஷ்டையையும், அதன் கீழுள்ள அஷ்டபந்தனம் மருந்து பிரகிருதி, மஹத், அகங்காரம், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் எண் வகை பந்தங்களையும் குறிக்கிறது. பலி பீடத்தில் நாம் காமம், குரோதம், உலோபம், மதம், மாச்சரியங்களை பலி கொடுத்து, உள்ளே செல்ல வேண்டும். அதன் பின், தரும […]

Read more

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும்

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும், பிரியா இராமச்சந்திரன், வானதி பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. பல ஆண்டுகளாகத் தொடரும் நீதிமன்ற வழக்கு போல, சில கம்பராமாயண விவாதங்கள் தலைமுறைகளைக் கடந்து நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட வாலி வதை விவாதத்துக்கு, இந்நுால் வழி புதிய பங்களிப்பு செய்திருப்பவர், மருத்துவர் பிரியா இராமச்சந்திரன். ஆதிகவி வால்மீகியும், தமிழ்க்கவி கம்பனும் நல்கிய படைப்புகளில், வாலி வதையால் இராமன் முதற்கொண்டு பல்வேறு கதை மாந்தர்களும், தம் இயல்பில் அடையும் மாற்றங்களை நுாலில் நேர்த்தியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். கிட்கிந்தா காண்டத்தில் […]

Read more

ஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் வரலாறு

ஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் வரலாறு, மா.சந்திரமூர்த்தி, சிவன் ராத்திரி விழா மன்றம், விலை 125ரூ. திருவாரூர் மாவட்டம், குடவாசலில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆடிப்புலியூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாறு மற்றும் கோவில் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 28/2/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026800.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஜமீன் கோயில்கள்

ஜமீன் கோயில்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, சூரியன் பதிப்பகம், விலை 140ரூ. ஜமீன்தார்கள் என்றாலே ராஜ கம்பீரமும், மிடுக்கும், அதிகாரத் தொனியும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததையும், பாரம்பரியமான ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததையும் விளக்குவதுதான் இப்புத்தகம். நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026627.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருமணக் கோவில்கள்

திருமணக் கோவில்கள், தாமரை பிரதர்ஸ் மீடியா, பக். 144, விலை 150ரூ. திருமண தடை நீங்க, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏராளம். அவர்களுக்காக, திருமணம் தொடர்பான பிரச்னை நீங்க, வழிபட வேண்டிய சுவாமிகள் பற்றிய கட்டுரை தொகுப்பு. ஆன்மிகமும், சுவாரசிய தகவல்களும் நிரம்பிய புத்தகம் இது. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

முருகன் அருள் செல்வம்

முருகன் அருள் செல்வம், பி.எல்.முத்துக்குமாரன், விலை 300ரூ. முருகப் பெருமானைப் பற்றிய அனைத்து விவரங்களும் கொண்ட நூல். மேலும் இதில் முருகன் பாடல்கள் மூலமும், உரையோடு இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/2/2018.  

Read more

பரிபூரண அருளாளன்

பரிபூரண அருளாளன், ஆர்.வெங்கடேஷ், தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட், பக். 104, விலை 100ரூ. திருவண்ணாமலை, பல யோகிகளையும், ஞானிகளையும் வழங்கிய அக்னி மலை. அங்கேதான் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் உள்ளிட்டோர் வாழ்ந்தனர். உ.பி.யில் இருந்து, 1950களில், திருவண்ணாமலை வந்து, 40ஆண்டுகள், பக்தர்களுக்கு அருளியவர், யோகி ராம் சுரத்குமார். சாமி, பகவான், யோகி, விசிறி சாமியார் என்றெல்லாம் உணர்ச்சி பெருக்குடன் பக்தர்கள் வழிபட்டனர். அவரின் அருள் பெற்றோரின் அனுபவத் தொகுப்பே இந்நூல். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

சேய்த் தொண்டர்கள்

சேய்த் தொண்டர்கள், பனையபுரம் அதியமான், வானதி பதிப்பகம், பக்.446, விலை ரூ.350. ஐந்து வயது வரை பேச்சு வராதிருந்த குமரகுருபரர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்று முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் பாடினார். ஒருவரை நாகம் தீண்டினால் அவரைக் காப்பாற்ற மருத்துவரிடம் செல்வது வழக்கம். ஆனால் "சேயூர் முருகன் உலா நூலை எழுதிய சேறைக் கவிராயர் வெண்பா பாடினாலே விஷம் இறங்கிவிடுமாம். முருகனடியாராக விளங்கிய செல்லப்பருக்கு தீராத வயிற்று வலி. கோயிலுக்கு வந்த அவர் அங்கேயே உறங்கிவிட, அவர் இருப்பதை அறியாமல் கோயில் கதவுகளைத் தாழிட்டு […]

Read more

அல்லல் தீர்க்கும் அமிராமி

அல்லல் தீர்க்கும் அமிராமி, க. துரியானந்தம், கங்கை புத்தக நிலையம், பக்.340, விலை ரூ.225. சக்தி வழிபாட்டில் பாராயணம் செய்ய, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், செளந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. மிகவும் மந்திரசக்தி வாய்ந்த இவற்றைப் பாராயணம் செய்வதன் மூலம் அம்பிகையின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறமுடியும். அம்பிகையின் அருள்பெற்ற அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் அபிராமி பட்டர். இவர், முன்செய் தவத்தாலும், அன்னை அபிராமியின் பெருங்கருணையாலும் ஆட்கொள்ளப்பட்டு, இப்பாமாலையை அருளிச் செய்துள்ளார். 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி. காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியே முதல் […]

Read more

ஸ்ரீ ராமானுஜர் – 1000 ஆண்டுகள்

ஸ்ரீ ராமானுஜர் – 1000 ஆண்டுகள், எஸ்.சுந்தரேசன், சாந்தி பப்ளிகேஷன்ஸ், பக்.240, விலை ரூ.200. அனைத்து எதிர்ப்புகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு விசிஷ்டாத்வைதக் கொள்கையை நாடெங்கிலும் ஆழமாய் வேரூன்றச் செய்து இந்து சமயத்தை நிலைநிறுத்தியவர் ராமானுஜர். அவர் வாழ்ந்த 120 ஆண்டு காலத்தில் வைணவத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள், படைத்த சாதனைகள் ஆகியவற்றை இந்த நூல் விளக்குகிறது. அவர் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறிப்பாக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுதல், அதை தக்க சமயத்தில் அவருக்குத் தெரிவித்து அவரைக் காப்பாற்றுதல் என அவரின் வாழ்க்கைச் சம்பவங்களை […]

Read more
1 38 39 40 41 42 128