இறைவனிடம் கையேந்துங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள், ஏகவன், அமானி பப்ளிகேஷன்ஸ், பக். 96, விலை 40ரூ. உழைக்கும் கரங்கள், ஹாஜியார் வீட்டுக் கல்யாணம், ஏழை வரி, ஹலால், நோன்பு கஞ்சி, பெருநாள் காசு, எல்லா புகழும் இறைவனுக்கே, கொழுக்கட்டை, இறை இல்லம், இறைவனிடம் கையேந்துங்கள்’ ஆகிய சிறுகதைகள், நபி மொழிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பிலும், பொருளாதார நிலையிலும் பின்தங்கியிருக்கும் முஸ்லிம் சமுதாயம் முன்னேற, கல்வி ஒன்று தான் கருவியாக இருக்க முடியும் என்பதை உணர்த்தும் சிறுகதைகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 8/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

ஸ்ரீராஜ மாதங்கி

ஸ்ரீராஜ மாதங்கி, டி.எஸ்.கிருஷ்ணன், ஸ்வார்த்தம் சத் சங்கம், பக். 320. தென் நாட்டில் முளைத்தெழுந்த மூலவித்து மூல லிங்கமாம் சோமசுந்தரர், அன்னை மீனாட்சி சக்தியின் இதய பாகம் எழுந்தருளிய கடம்பவனமாம் மாமதுரையின் வரலாறும், இத்தலத்தின் வரலாற்றுப் புதினங்களும் பல நிலைகளில் கிடைத்தாலும், அவை வைர மாலையாக, வரலாற்றுப் பெட்டகமாக, ‘ஸ்ரீ ராஜ மாதங்கி’ அமைந்திருக்கிறது. மதுரை மீனாட்சி கோவில் கட்டமைப்பு உணர்த்தும் தத்துவங்கள், இசை பாடும் துாண்கள், ஓவியங்கள் உணர்த்தும் வரலாறு, திருவிழாக்கள், தமிழ் சங்க வேந்தர்கள் பற்றி ஒவ்வொரு அடியாக நமக்கு விளக்கும் […]

Read more

நினைத்ததை நிறைவேற்றும் நரசிம்மர் தலங்கள்

நினைத்ததை நிறைவேற்றும் நரசிம்மர் தலங்கள், கே.சாய்குமார், விலை150ரூ. இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள 406 நரசிம்மர் தலங்கள், 16 வைணவ தலங்கள் ஆகியவற்றுடன் அருகே இருக்கும் வழிபாட்டுதலங்கள் ஆகியவை பற்றிய முகவரி, அவற்றுக்கு செல்லும் வழி, ஒவ்வொரு கோவிலின் தலவரலாறு, அவை மலை மீது இருக்கிறது என்றால் வாகனத்தில் செல்ல முடியுமா? அல்லது எத்தனை படிகள் ஏற வேண்டும்? தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகிய அனைத்தையும் வரிசைப்படுத்தி கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். அத்துடன் வரை படங்கள், அழகிய வண்ணப்படங்கள் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. […]

Read more

திருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்

திருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்,  கீழப்பாவூர் ஆ.சண்முகையா, ராஜ கோகிலா அறக்கட்டளை, பக். 150, விலை ரூ.100. திருமூலர் அருளிய திருமந்திரம் சிவபெருமானைப் போற்றிப்பாடும் வகையில் தோத்திர நூலாகவும், சைவ சித்தாந்தங்களைக் கூறுவதில் சாத்திர நூலாகவும், யோகங்களை விரித்துரைப்பதில் யோக நூலாகவும் திகழ்கிறது. ஏழு தந்திரங்களைக் கொண்ட இந்நூலின் இரண்டாம் தந்திரம் பற்றிய பாடல்களுக்கு வெறும் விளக்கம் மட்டும் தராமல், சங்க இலக்கியங்கள், பன்னிரு திருமுறைகள், திருக்குறள் முதலியவற்றோடு ஒப்பிட்டுக் கூறி, சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் […]

Read more

பௌத்த சிந்தனை பன்நோக்கு வாசிப்பு

பௌத்த சிந்தனை பன்நோக்கு வாசிப்பு, முனைவர் கா.அய்யப்பன், காவ்யா, பக்.184, விலை 190ரூ. கோட்பாடுகளில் வரையறைக்கு அப்பாற்பட்டது பௌத்தம். பதிமூன்றாம் நூற்றாண்டு கால அளவிலும் பெரும் செல்வாக்குள்ள சமயமாக விளங்கியது. பௌத்த சமய பின்புலத்தில் காப்பியங்கள் உட்பட பல்வேறு நூல்கள் இயற்றப்பட்டு உள்ளன. தமிழ் வளர் சூழலில் பௌத்த சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கங்களை, சங்க இலக்கியம் தொட்டு, பக்தி இயக்க காலகட்டம் வரை, அதற்குப் பிந்தைய காலம் என வேறுபடுத்தி பார்க்க வேண்டியதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் இலக்கண மரபிலும் பௌத்த சிந்தனைகளின் தாக்கங்கள் இருந்தமை […]

Read more

ஆதிசைவர்கள் வரலாறு

ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ்.கார்த்திகேய சிவம், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ. சிவனோடு தொடர்புடையது சைவம். "சைவத்தின் மேல் சமயம் வேறில்லை' என்பது சைவர்களின் உறுதியான நம்பிக்கை. சிவனை வணங்கும் யாவரும் சைவர்களேயாயினும் இறைவன் திருமேனியை முப்போதும் தீண்டி பூஜை செய்து வழிபடுவோரை "ஆதிசைவர்' என அழைப்பது மரபு. ஆதிசைவர்கள், குருக்கள், பட்டர், நாயனார், சிவாச்சாரியார் என வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஆதிசைவர்களின் வரலாற்றை ஓரளவு விரிவாகவும் மிகத்தெளிவாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். திருக்கயிலாய மலையில் சிவபெருமான், பார்வதி […]

Read more

108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள், ஆர்.இளைய பெருமாள், சகுந்தலை நிலையம், பக். 414, விலை 300ரூ. பன்னிரெண்டு ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப் பெற்றவை, 108 திவ்ய தேசங்கள். 4,000 திவ்ய பிரபந்தங்களால் இந்த வைணவ கோவில்கள் போற்றப்பட்டுள்ளன. இந்த நுாலில் சோழ நாட்டுத் திருப்பதிகள், 40; நடுநாட்டில் – 2, தொண்டை நாட்டில் – 22, வடநாட்டில் – 11, மலைநாட்டில் – 13, பாண்டி நாட்டில் – 18, திருநாட்டில் – 2 என்று பட்டியலிட்டு கோவில்கள் விளக்கப்பட்டுள்ளன. இதில், கோவில் என்று […]

Read more

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், தொகுதி 1, பக்.416, தொகுதி 2, பக்.448, தொகுதி 3, பக்.288, தொகுதி 4, பக்.496, மொத்த பக். 1,648, நான்கு தொகுதிகளும் சேர்த்து விலை ரூ.1,200. ‘அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே‘ என்கிறார் (‘மாமேகம் சரணம் வ்ரஜ‘ – பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி […]

Read more

வாகீச முனிவரின் ஞானாமிர்தம்

வாகீச முனிவரின் ஞானாமிர்தம் (சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.752, விலை ரூ.650. வாகீச முனிவர் அருளிச் செய்த ‘ஞானாமிர்தம்‘ என்ற நூலே மெய்கண்ட சாத்திரங்களுக்கு எல்லாம் முன்னோடி நூலாக இருக்கிறது. சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மைகளை 75 அகவற்பாக்களால் விளக்குகிறது ஞானாமிர்தம். உலகப் படைப்பு, பசுவின் மூவகை அவத்தை, ஆன்மா அடையும் ஐந்துநிலை வேறுபாடுகள், மாயாவாத மறுப்பு, சற்காரிய வாதம், மூவகை துக்கங்கள், பசு தரிசனம், ஞானியரின் இயல்பு, குரு உபதேசப் […]

Read more

சைவ வைணவப் போராட்டங்கள்

சைவ வைணவப் போராட்டங்கள், சிகரம் ச.செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், விலை 165ரூ. இந்தியாவின் பிற மொழிகளில் வடமொழி வேதத்தின் செல்வாக்கு மிகுந்திருப்பதுபோல் தமிழில் இல்லாமைக்கு காரணம், இங்கே சைவ, வைணவ சமயங்களும் அவற்றின் வழியாக கிடைக்கப்பெற்ற சமய இலக்கியங்களும்தான் சங்க காலம் தொடங்கி, சைவ – வைணவ சமயங்களின் செல்வாக்கு குறித்தும், நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் இவ்விரு சமயங்களின் நிலை குறித்தும் விரிவாக ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026495.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 36 37 38 39 40 128